உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w01 8/15 பக். 32
  • நன்மதிப்பு சான்றிதழ்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நன்மதிப்பு சான்றிதழ்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
w01 8/15 பக். 32

நன்மதிப்பு சான்றிதழ்

“காங்கோவில் வாழும் மக்களுடைய முன்னேற்றத்திற்கு பங்காற்றுவதன் மூலம் தங்களை வேறுபடுத்திக் காட்டும் தனிநபர்களுக்கு அல்லது சமூக நிறுவனங்களுக்கு பாராட்டாக” காங்கோ மக்கள் குடியரசிலுள்ள காங்கோ மற்றும் ஆப்பிரிக்க இதழாசிரியர் சங்கம் (AJOCAD) இதை வழங்குகிறது.

“தங்களுடைய பிரசுரங்களின் [வாயிலாக] காங்கோ மக்களுக்கு கல்வியும் போதனையும் அளித்து அவர்களுடைய முன்னேற்றத்திற்கு பங்காற்றியதற்காக” நவம்பர் 17, 2000 தேதியன்று யெகோவாவின் சாட்சிகளுக்கு இந்த நன்மதிப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்தப் பாராட்டைப் பற்றி குறிப்பிடுகையில், கின்ஷாசா செய்தித்தாள் ல பார் இவ்வாறு கூறியது: “யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்படும் காவற்கோபுரம் அல்லது விழித்தெழு! பத்திரிகைகளையோ அல்லது வேறுசில பிரசுரங்களையோ வாசித்திராத ஒருவரை காங்கோவில் பார்ப்பதே கஷ்டம். இந்தப் பத்திரிகைகள் வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் [அலசுகின்றன].” “இன்றைய பிரச்சினைகளை எவ்வாறு சமாளிப்பது” என்பதையும், “தற்கால நிகழ்ச்சிகளின் உண்மையான அர்த்தம்” என்ன என்பதையும் இந்தப் பிரசுரங்கள் காண்பிக்கின்றன என்றும் அந்தக் கட்டுரை குறிப்பிட்டது. ஒவ்வொரு விழித்தெழு! இதழும் “அரசியல் சம்பந்தமாக எப்பொழுதும் நடுநிலை வகிக்கி[றது], ஓர் இனத்தை மற்றொன்றைவிட உயர்வாக மேன்மைப்படுத்துவதில்லை” மேலும், “பொல்லாப்பும் அக்கிரமமும் நிறைந்த இந்த உலகம் நீக்கப்பட்டு, சமாதானமும் பாதுகாப்புமுள்ள ஒரு புதிய உலகம் வரும் என்ற சிருஷ்டிகரின் வாக்குறுதியில் நம்பிக்கையை” இப்பிரசுரங்கள் வளர்க்கின்றன.

AJOCAD குறிப்பிட்டபடி, யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்கள் காங்கோவிலுள்ள பெரும்பான்மையோருக்கு பிரயோஜனமாக இருந்திருக்கின்றன. இவை நூற்றுக்கணக்கான மொழிகளில் கிடைக்கின்றன, அவற்றில் காணப்படும் நம்பிக்கையளிக்கும் செய்தி உங்களுக்கும் பிரயோஜனமாக இருக்கும்.

அவற்றிலிருந்து நீங்களும் எவ்வாறு பயனடையலாம் என்பதை அறிந்துகொள்வதற்கு தயவுசெய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வாசியுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்