உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w03 3/15 பக். 32
  • வறுமை என்றாவது ஒழியுமா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வறுமை என்றாவது ஒழியுமா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
w03 3/15 பக். 32

வறுமை என்றாவது ஒழியுமா?

“இதோ, ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர்களைத் தேற்றுவாரில்லை; ஒடுக்குகிறவர்கள் பட்சத்தில் பெலம் இருந்தது, அப்படியிருந்தும் தேற்றுவாரில்லை” என பூர்வ இஸ்ரவேலின் அரசராகிய சாலொமோன் ஞானி கூறினார். (பிரசங்கி 4:1) ஒடுக்கப்பட்டவர்களாக அவர் கருதியவர்களில் அநேகர் வறுமையிலும் வாடியவர்கள் என்பதில் சந்தேகமில்லை.

பண சம்பந்தப்பட்ட புள்ளிவிவரங்களை மட்டுமே வைத்து வறுமையை தீர்மானித்துவிட முடியாது. ஜூன் 2002-⁠ல் உலக வங்கி வெளியிட்ட செய்தியின்படி, “உலகம் முழுவதிலும் 1998-⁠ம் ஆண்டில் 1.2 பில்லியன் மக்கள் ஒரு டாலருக்கும் குறைவான பணத்திலும் . . . 2.8 பில்லியன் மக்கள் 2 டாலருக்கும் குறைவான பணத்திலும் வாழ்க்கை நடத்தினார்கள் என மதிப்பிடப்படுகிறது.” இந்த எண்ணிக்கை முன்னர் கணக்கிட்டதைவிட குறைவாக இருந்தாலும், “வறுமையின் காரணமாக மனிதர் படும்பாட்டை வைத்துப் பார்க்கையில் அது நிச்சயம் அதிகரித்திருக்கிறது.”

வறுமை என்றாவது ஒழியுமா? “ஏழைகள் உங்களோடு என்றும் இருக்கிறார்கள்” என இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம் கூறினார். (யோவான் 12:8, பொது மொழிபெயர்ப்பு) அப்படியென்றால், வறுமையும் அதனால் வரும் கஷ்டங்களும் எப்பொழுதுமே இருக்கும் என்று அர்த்தப்படுத்தினாரா? இல்லை. தம்முடைய சீஷர்கள் அனைவரும் பணக்காரர்கள் ஆவார்கள் என்று இயேசு வாக்கு கொடுக்கவில்லை என்றாலும், ஏழைகளுக்கு எந்த நம்பிக்கையுமே இல்லை என்ற முடிவுக்கு நாம் வந்துவிடக் கூடாது.

மனிதர் எடுக்கும் முயற்சிகள் தோல்வியைத்தான் தழுவியிருக்கின்றன; வறுமைக்கு முடிவுகட்டுவதாக சொல்லும் வாக்குறுதிகளும் வெறும் வெற்றுப் பேச்சுதான். ஆனால் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளோ, வெகு விரைவில் ஏழைகளே இல்லாத காலம் வரும் என வாக்குறுதி அளிக்கிறது. சொல்லப்போனால், இயேசு ‘ஏழைகளுக்குத்தான் நற்செய்தியை அறிவித்தார்.’ (லூக்கா 4:18, பொ.மொ.) அவர் சொன்ன நற்செய்தியில், வறுமை அடியோடு ஒழியும் என்ற விஷயமும் அடங்கியிருக்கிறது. கடவுளுடைய ராஜ்யம் பூமியில் நீதியை நிலைநாட்டும் போது இது நிறைவேறும்.

அது எப்பேர்ப்பட்ட வித்தியாசமான உலகமாக இருக்கும்! பரலோக அரசராகிய இயேசு கிறிஸ்து ‘வறியோர்க்கும் ஏழைகட்கும் இரக்கம் காட்டுவார். ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்.’ அதோடு, “அவர்கள் உயிரைக் கொடுமையினின்றும் வன்முறையினின்றும் விடுவிப்பார்.”​—⁠சங்கீதம் 72:13, 14, பொ.மொ.

அந்த நாட்களைக் குறித்து மீகா 4:4 இவ்வாறு கூறுகிறது: ‘அவனவன் தன்தன் திராட்சச் செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய யெகோவாவின் வாய் இதைச் சொல்லிற்று.’ மக்களை தொல்லைப்படுத்தும் எல்லா விதமான பிரச்சினைகளையும், வியாதியையும், ஏன் மரணத்தையும்கூட கடவுளுடைய ராஜ்யம் நீக்கிவிடும். கடவுள் ‘மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய யெகோவா எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைப்பார்.’​—⁠ஏசாயா 25:8.

இவற்றை நீங்கள் நம்பலாம், ஏனென்றால் இந்த வாக்குறுதிகள் அனைத்தும் கடவுளுடைய ஏவுதலால் எழுதப்பட்டவை. பைபிளில் உள்ள தீர்க்கதரிசனங்கள் நம்பகமானவை என்பதை நிரூபிக்கும் அத்தாட்சிகளை நீங்கள் ஏன் ஆராயக் கூடாது?

[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]

FAO photo/M. Marzot

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்