உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w05 2/15 பக். 9
  • பெர்லபுர்க் பைபிள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பெர்லபுர்க் பைபிள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • இதே தகவல்
  • பைபிள் பிரியரை மகிழ்வித்த சாதனை!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • புதிய உலக மொழிபெயர்ப்பு உலகெங்கிலும் கோடிக்கணக்கானோரால் பாராட்டப்படுகிறது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • மனதைத் தொடும் ஒரு பைபிள் மொழிபெயர்ப்பு
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
  • கடவுளுடைய பெயரும் பைபிள் மொழிபெயர்ப்பாளர்களும்
    கடவுளுடைய பெயர் என்றன்றுமாக நிலைத்திருக்கும்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
w05 2/15 பக். 9

பெர்லபுர்க் பைபிள்

பயட்டிஸம் என்ற மத இயக்கம் 17-⁠ம், 18-⁠ம் நூற்றாண்டுகளில் ஜெர்மானிய லூத்தரன் சர்ச்சில் வளர்ந்து வந்தது. இதன் ஆதரவாளர்கள் சிலர், தங்கள் மத நம்பிக்கைகளின் காரணமாக கேலி செய்யப்பட்டார்கள், துன்புறுத்தலையும்கூட அனுபவித்தார்கள். அதனால், பயட்டிஸ்ட் அறிஞர்கள் பலர் ப்ராங்ஃபர்ட் ஏம் மைன் நகருக்கு வடக்கே சுமார் 150 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பெர்லபுர்க் என்ற ஊரில் தஞ்சம் புகுந்தார்கள். மதத்தை மிக உயர்வாக மதித்த அவ்வூர் கனவான் காசீமீர் வான் விட்கன்ஷ்டைன் பெர்லபுர்க் அவர்களுக்கு அடைக்கலம் அளித்தார். இந்தப் பிரசங்கிகளும் அறிஞர்களும் அவ்வூரில் இருந்ததாலேயே இன்று பெர்லபுர்க் பைபிள் என்று அறியப்படும் ஒரு புதிய பைபிள் மொழிபெயர்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த மொழிபெயர்ப்பு எப்படி உருவானது?

உள்ளூர் இறையியலாளர்கள் எதிர்த்ததால் யோஹான் ஹாக் என்பவர் ஸ்ட்ராஸ்பர்கில் இருந்த தன் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது; அவர் பெர்லபுர்க் ஊரில் தஞ்சமடைந்தார். அவர் ஒரு மேதை, அதோடு பல மொழிகள் அறிந்த அறிஞர். “கடவுளுடைய வார்த்தையில் எதையும் சேர்க்காமல் திருத்தமான ஒரு மொழிபெயர்ப்பை உருவாக்கவும், லூத்தரின் மொழிபெயர்ப்பைத் திருத்தவும், பைபிளிலுள்ள வார்த்தைகளுக்கும் அவற்றில் பொதிந்துள்ள அர்த்தத்திற்கும் ஏற்றாற்போல் மிகத் துல்லியமாக மொழிபெயர்க்கவும் வேண்டும்” என்ற தனது தணியாத தாகத்தை பெர்லபுர்க்கிலிருந்த மற்ற அறிஞர்களிடம் வெளிப்படுத்தினார். (டிகெஷிக்டெ டிய பெர்லன்புர்க பீபள் [பெர்லபுர்க் பைபிளின் வரலாறு]) பாமர ஜனங்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் விவரமான விளக்கங்களுடனும், குறிப்புகளுடனும் பைபிளை உருவாக்குவதே அவரது குறிக்கோளாக இருந்தது. எனவே ஐரோப்பாவின் மற்ற நாடுகளில் இருந்த அறிஞர்களின் உதவியை ஹாக் நாடினார். இப்பணியில் 20 வருடங்களை செலவழித்தார். இதன் பலனாக, 1726-⁠ம் ஆண்டில் பெர்லபுர்க் பைபிள் வெளியிடப்பட தொடங்கியது. அதில் அதிகமான விளக்கக் குறிப்புகள் இருந்ததால், கிட்டத்தட்ட எட்டு தொகுதிகளாக அது வெளியிடப்பட்டது.

பெர்லபுர்க் பைபிளில் சில சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. உதாரணமாக, யாத்திராகமம் 6:2, 3 இவ்வாறு வாசிக்கிறது: “மேலும் தேவன் மோசேயை நோக்கி: நான் கர்த்தர்! சர்வவல்லமையுள்ள தேவனாக ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன். ஆனால் யெகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.” குறிப்பு இவ்விதமாக விளக்குகிறது: “யெகோவா என்ற பெயர் . . . தனிப்படுத்தப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட பெயர்.” யாத்திராகமம் 3:15; 34:6 ஆகியவற்றிலுள்ள குறிப்புகளிலும் கடவுளுடைய பெயர் யெகோவா என்பது காணப்படுகிறது.

யெகோவா என்ற பெயரை வசனத்திலோ அடிக்குறிப்பிலோ அல்லது விளக்க குறிப்புகளிலோ பயன்படுத்தியிருக்கும் ஜெர்மானிய பைபிள்களின் நீண்ட பட்டியலில் பெர்லபுர்க் பைபிளும் இடம் பெற்றுள்ளது. நவீன மொழிபெயர்ப்புகளில் ஒன்றான பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு என்ற ஆங்கில பைபிளும் கடவுளுடைய பெயரை உரிய விதத்தில் கௌரவிக்கிறது, இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்