பொருளடக்கம்
மார்ச் 15, 2012
© 2012 Watch Tower Bible and Tract Society of Pennsylvania. All rights reserved.
படிப்பு இதழ்
படிப்புக் கட்டுரைகள்
ஏப்ரல் 30, 2012–மே 6, 2012
“தூக்கத்திலிருந்து எழ” மக்களுக்கு உதவுங்கள்
பக்கம் 10 • பாடல்கள்: 65, 96
மே 7-13, 2012
எப்போதும் அவசர உணர்வுடன் இருங்கள்
பக்கம் 15 • பாடல்கள்: 92, 47
மே 14-20, 2012
நம்பிக்கையில் சந்தோஷப்படுங்கள்
பக்கம் 20 • பாடல்கள்: 129, 134
மே 21-27, 2012
“பின்னால் இருப்பவற்றை” திரும்பிப் பார்க்காதீர்கள்
பக்கம் 25 • பாடல்கள்: 119, 17
படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
படிப்புக் கட்டுரைகள் 1, 2 பக்கங்கள் 10-19
பொய் மதப் போதனைகள் கோடானுகோடி மக்களைத் தாலாட்டி ஆன்மீக ரீதியில் தூங்க வைத்திருக்கின்றன. மக்களை எப்படித் தட்டியெழுப்புவது... அது ஏன் மிக அவசரம்... என்பதை இந்த இரு கட்டுரைகளும் சிந்திக்கும். மேலும், நாம் எப்படி எப்போதும் அவசர உணர்வோடு இருக்கலாம், அவசர உணர்வுடன் பிரசங்கிப்பது என்றால் என்ன ஆகிய கேள்விகளையும் சிந்திக்கும்.
படிப்புக் கட்டுரை 3 பக்கங்கள் 20-24
பரலோகத்திற்குப் போகிறவர்களுக்கு “அசைக்க முடியாத நம்பிக்கை” இருக்கிறதென அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். (1 பே. 1:3) அந்த நம்பிக்கை எப்படி நிறைவேறும்? ‘வேறே ஆடுகளின்’ நம்பிக்கையோடு அது எப்படிச் சம்பந்தப்பட்டுள்ளது? (யோவா. 10:16) அதைக் குறித்து நீங்கள் ஆனந்தம் அடைய... அதன் நிறைவேற்றத்தை ஆவலாய் எதிர்பார்க்க... காரணம் இருக்கிறது என்பதை இந்தக் கட்டுரை எடுத்துக்காட்டும்.
படிப்புக் கட்டுரை 4 பக்கங்கள் 25-29
“லோத்தின் மனைவியை நினைத்துப் பாருங்கள்” என்று இயேசு எச்சரித்தார். (லூக். 17:32) எதற்காகக் கொடுத்தார்? இந்த எச்சரிக்கையை எப்படிப் பின்பற்றலாம் என்பதற்கு மூன்று வழிகளை இக்கட்டுரை சிந்திக்கும். இதை வாசிக்கும்போது, உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா என யோசித்துப் பாருங்கள்.
இதர கட்டுரைகள்
3 “உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு”
30 வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
32 “எங்கள கொஞ்சம் ஃபோட்டோ எடுக்கறீங்களா?”
அட்டை: மலாவியிலுள்ள இளம் சாட்சிகளில் அநேகர் தங்கள் சக மாணவர்களோடு இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்திலிருந்து சுவையான, பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்
மலாவி
மக்கள்தொகை
1,30,77,160
பிரஸ்தாபிகள்
79,157
ராஜ்ய மன்ற கட்டுமானம்
1998 முதல் 1,031