பொருளடக்கம்
ஏப்ரல் 15, 2012
© 2012 Watch Tower Bible and Tract Society of Pennsylvania. All rights reserved.
படிப்பு இதழ்
படிப்புக் கட்டுரைகள்
மே 28, 2012–ஜூன் 3, 2012
‘தகப்பனை வெளிப்படுத்த மகன் விரும்புகிறார்’
பக்கம் 3 • பாடல்கள்: 106, 112
ஜூன் 4-10, 2012
நம்பிக்கை துரோகம்—கடைசி நாட்களுக்கான ஓர் அடையாளம்!
பக்கம் 8 • பாடல்கள்: 63, 32
ஜூன் 11-17, 2012
யெகோவாவுக்கு எப்போதும் முழு இருதயத்தோடு சேவை செய்யுங்கள்
பக்கம் 13 • பாடல்கள்: 52, 57
ஜூன் 18-24, 2012
யெகோவாவுக்குத் தம் மக்களை விடுவிக்க வழி தெரியும்
பக்கம் 22 • பாடல்கள்: 133, 131
ஜூன் 25, 2012–ஜூலை 1, 2012
மீட்பு பெறுவதற்காக யெகோவா நம்மைப் பாதுகாக்கிறார்
பக்கம் 27 • பாடல்கள்: 110, 60
படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
படிப்புக் கட்டுரை 1 பக்கங்கள் 3-7
என்ன இரண்டு வழிகளில் சீடர்களுக்கும் மற்றவர்களுக்கும் இயேசு தம் தகப்பனை வெளிப்படுத்தினார்? நாம் எப்படி அவருடைய தகப்பனை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தலாம்? பதில் இக்கட்டுரையில்.
படிப்புக் கட்டுரை 2 பக்கங்கள் 8-12
இன்றைய உலகில் நம்பிக்கை துரோகம் என்பது சர்வசாதாரணம். அது... கிறிஸ்தவ குடும்பத்திலும் சபையிலும் நிலவும் சமாதானத்தையும் ஒற்றுமையையும் குலைத்துப்போட நாம் அனுமதிக்கக் கூடாது. கடவுளுக்கும் மற்றவர்களுக்கும் என்றும் உண்மையாய் இருக்க நம்மால் முடியும் என்பதை இக்கட்டுரை விளக்கும்.
படிப்புக் கட்டுரை 3 பக்கங்கள் 13-17
யெகோவாவுக்கு முழு இருதயத்தோடு சேவை செய்கிறோம் என்பதை நாம் எப்படிக் காட்டலாம்? என்ன ஆபத்திலிருந்து நம் இருதயத்தைப் பாதுகாக்க வேண்டும்? யெகோவாவுக்கு எப்போதும் முழு இருதயத்தோடு சேவை செய்ய நமக்கு எது உதவும்? பதில்... இந்தக் கட்டுரையில்.
படிப்புக் கட்டுரைகள் 4, 5 பக்கங்கள் 22-31
‘மிகுந்த உபத்திரவத்தின்போது’ கடவுளுடைய மக்கள்மீது முழுவீச்சோடு தாக்குதல் நடத்தப்படும். (மத். 24:21) அப்போது யெகோவா நம்மைப் பாதுகாப்பாரென ஏன் உறுதியாய் நம்பலாம்? முடிவுவரை உண்மையாய் நிலைத்திருக்க அவர் நமக்கு எப்படி உதவுகிறார்? பதில்களை இக்கட்டுரைகளில் படிக்கும்போது நம் விசுவாசம் பலப்படும்.
இதர கட்டுரைகள்
18 எழுபது வருடங்களாக ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்திருக்கிறேன்
32 உங்களுக்கு நினைவிருக்கிறதா?
அட்டை: கனடா, நுனாவூட்டில் உள்ள, ஈகாலூவட்டில் உறைந்துகிடக்கும் ஃப்ரோபிஷர் விரிகுடாவின் கரைகளில் இனூக்டடூட் மொழி சிற்றேட்டை அளிக்கும் ஒரு சகோதரி
கனடா
மக்கள்தொகை
3,40,17,000
பிரஸ்தாபிகள்
1,13,989
மொழிபெயர்ப்பு வேலை
கனடா கிளை அலுவலகத்தின் மேற்பார்வையின்கீழ் 12 உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்ப்பு வேலை நடைபெறுகிறது