மாநாட்டின் விசேஷ அம்சங்கள் ஐக்கியப்படுத்துகிறது
1 “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?” (சங். 133:1) “தெய்வீக நீதி” மாவட்ட மாநாட்டு நிகழ்ச்சிநிரலில் பல்வேறு விசேஷ அம்சங்களை அனுபவித்து மகிழ்ந்த பின்பு இந்த வார்த்தைகள் உலகளாவிய யெகோவாவின் ஜனங்களுக்குக் கூடுதலான அர்த்தத்தை ஏற்றிருக்கிறது.
2 ஒவ்வொரு பேச்சாளராலும் கிளர்ச்சியூட்டும் தகவல்கள் கொடுக்கப்படுகையில், நாம் அதற்கு ஆஜராயிருந்ததனாலும் பங்கு பெற முடிந்ததனாலும், மகிழ்ச்சியடைந்தோம். இத்தனையநேக சகோதரர்களுடன் சேர்ந்து சக்திவாய்ந்த தீர்மானத்திற்கு “ஆம்!” என்ற கெம்பீர சத்தமிட்டது, ஆ, என்னே ஒரு மகிழ்ச்சியை கொண்டுவந்தது!
3 வேத வசனங்களின் பேரில் உட்பார்வை என்ற தலைப்பைக் கொண்ட இரண்டு தொகுப்புகளடங்கிய பிரசுரம் வெளியிடப்பட்டதும்கூட விசேஷமானதாக இருந்தது. அழகிய சித்தரிப்புகளைக் கொண்ட மிகச் சிறந்த பிரசுரம்! பைபிள் பொருளடக்கங்களைக் கண்டுபிடிப்பதில் ஆ, அது எவ்வளவாய் நம்மை ஐக்கியப்படுத்தும் வேதவசனங்களுடைய மெய்யான அர்த்தத்தின் பேரில் நாம் ஒரே காரியத்தைப் பேசக்கூடும்!—1 கொரி. 1:10.
4 வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்திருக்கிறது! என்ற தலைப்பைக் கொண்ட புதிய பிரசுரம் வெளியிடப்படுகிறது என்ற அறிவிப்பு சனிக்கிழமை பிற்பகல் வந்தபோது ஆ என்னே ஒரு ஆச்சரியம்! இந்த 320-பக்க புத்தகம் பைபிளின் கடைசி புத்தகத்தில் காணப்படும் அநேக அடையாள அர்த்தமுள்ள கூற்றுகளுடைய அர்த்தத்தின் பேரில் நம்முடைய எண்ணங்களை ஒற்றுமைப்படுத்துவதற்கு நிச்சயமாகவே உதவி செய்யும்.
5 அநேக மாநாடுகளில் தங்களுடைய தனிப்பட்ட அனுபவங்களைச் சொல்லுவதற்கு மிஷினரிகளைக் கொண்டிருந்ததானது மறக்க முடியாத விசேஷ அம்சமாக இருந்தது. அவர்களுடைய பல ஆண்டுகளடங்கிய உண்மையுள்ள சேவையை நாம் மிகுதியாய் போற்றுகிறோம்! உடல் நல குறைபாடுகள், மொழிப்பிரச்னைகள் எதிர்ப்புகள் போன்ற பல இடையூறுகள் மத்தியிலும் தூரமான தேசங்களில் அவர்கள் நற்செய்தியை பரவச் செய்திருக்கின்றனர்.
6 நாம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் நிச்சயமாக யெகோவா நம்மை அதிகமாகவே ஆசீர்வதித்திருக்கிறார். இன்னுமநேக நீதியான இருதயமுடைய ஆட்கள் பிரதிபலிக்கும் பொருட்டு தெய்வீக நீதியை குறித்து சாட்சி கொடுப்பதே இப்பொழுது நம்முடைய தீர்மானமாக இருக்க வேண்டும்.