கேள்விப் பெட்டி
● சபை அறிவிப்பு பலகையில் காட்சிக்கு வைக்கப்பட வேண்டிய காரியங்கள் என்ன?
ராஜ்ய மன்றத்தில் உள்ள அறிவிப்பு பலகை ராஜ்ய மன்றத்தின் நடவடிக்கைகள் பற்றிய தகவலை அளிக்கிறது. நடத்தும் கண்காணியின் அனுமதியின்றி அறிவிப்பு பலகையில் எந்தவித தகவலும் காட்சிக்கு வைக்கப்படக்கூடாது.
வழக்கமாக காட்சிக்கு வைக்கப்படக்கூடிய காரியங்களில் சில: ஊழியக்கூட்டம், ஊழியப்பள்ளி ஆகியவற்றிற்கான அட்டவணைகளும் பேச்சு நியமிப்புகளும் திட்டமிடப்பட்டிருக்கும் பொதுப்பேச்சுகளின் பட்டியல், பொதுப்பேச்சு நிகழ்ச்சி அக்கிராசினர் மற்றும் காவற்கோபுரம் வாசிப்பவர் நியமிப்புகள், சபை புத்தகப் படிப்பின் ஏற்பாடுகளும் இடங்களும், வட்டார ஊழியரின் அடுத்த சந்திப்பு பற்றிய அறிவிப்பு, அது தொடர்பான மற்ற விஷயங்களும் வரவிருக்கும் மாநாடு பற்றிய தகவல்களும், ராஜ்ய மன்றம் சுத்தம் செய்வோர் பெயர் பட்டியலும் உள்ளடங்கும். சில சமயங்களில் சங்கமானது சில கடிதங்களை அல்லது சில காரியங்களை அறிவிப்பு பலகையில் காட்சிக்கு வைக்கும்படி சொல்லுகிறது. வழக்கத்துக்கு மாறான ஏதாவது காரியங்கள் வருமானால் அது அறிவிப்பு பலகையில் வைக்கப்படலாமா என்பதை மூப்பர் குழு தீர்மானிக்கலாம்.
ராஜ்ய மன்றத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் திருமணம் பற்றிய ஒரு சிறிய அறிவிப்பை சபைக் கூட்டம் ஒன்றில் செய்யலாம். அறிவிப்பு பலகையில் வழக்கமான திருமண அறிவிப்பு வைக்கப்படமாட்டாது. முற்றிலும் சமூக நடவடிக்கைகளாகவே இருக்கும் கூட்டுறவுகள் குறித்த அறிவிப்புகளும் வைக்கப்படுவது சரியானதாக இருக்காது, ஏனென்றால் அவை சபை நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்டவை அல்ல.—ஏப்ரல் 15, 1984 ஆங்கில காவற்கோபுரம், பக்கம் 15; நம் ராஜ்ய ஊழியம், ஜூலை 1975, பக்கம் 4, மற்றும் ஜூன் 1970 பக்கம் 4 பார்க்கவும்.
அறிவிப்பு பலகை மிகவும் சுத்தமாகவும், கவர்ச்சிகரமாகவும் வைக்கப்பட்டிருக்கவேண்டும். அறிவிப்பு பலகையில் போடப்படும் மேற்குறிப்பிடப்பட்டவை போன்ற செய்திகளை அதில் உள்ளடக்கும் அளவிற்கு பலகை போதுமான அளவு பெரியதாக இருக்கவேண்டும். முடிந்து போன அட்டவணைகள் மற்றும் சபை தெரிந்து கொண்ட பொது அறிவிப்புகள் போன்றவை சரியான சமயத்தில் நீக்கப்பட வேண்டும். ஒரே ராஜ்ய மன்றத்தை ஒன்றுக்கு மேற்பட்ட சபைகள் உபயோகிக்கும்போது, ஒவ்வொன்றுக்கும் தெளிவாக குறிக்கப்பட்ட தனித்தனி அறிவிப்பு பலகை அல்லது தனிப்பட்ட பகுதி இருக்கவேண்டும். நடத்தும் கண்காணியோ அல்லது அவரது வழிநடத்துதலின் கீழுள்ள ஒருவரோ பலகையை அவ்வப்போது பார்த்து அங்கு வைக்கப்பட்டிருக்கும் செய்திகள் இப்பொழுது உபயோகத்திலுள்ளவையா, பொருத்தமானவையா, மற்றும் ஒழுங்காக இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் என்று நாங்கள் சிபாரிசு செய்கிறோம்.