கேள்விப் பெட்டி
◼ஊழியக் கூட்டத்தில் அறிவிப்புகளை யார் கையாள வேண்டும்?
ஊழியக் கூட்டத்திலுள்ள இந்தப் பாகத்தின் நோக்கம் நியமிக்கப்பட்டிருக்கும் ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான மிக முக்கிய விவரங்களைச் சபைக்குத் தெரியப்படுத்துவதேயாகும். சில அறிவிப்புகள் நினைப்பூட்டுதலாக சேவித்து ஒவ்வொரு வாரமும் ஒரே விதமானதாக இருக்கும். என்றபோதிலும் எல்லா அறிவிப்புகளும் தெளிவாக எடுத்துரைக்கப்பட வேண்டும். எந்த ஓர் அறிவிப்பும் அலட்சியமாக கொடுக்கப்படக்கூடாது.
ஒரு சில அறிவிப்புகளின் இயல்பு அது ஒரு மூப்பரால் கையாளப்படுவதைத் தேவைப்படுத்தலாம், இப்படிப்பட்ட ஒரு தேவை ஏற்படுகிறபோதெல்லாம் அந்தத் தகவலை அறிவிப்பு செய்வதற்காக ஒரு தகுதிவாய்ந்த சகோதரரை ஏற்பாடு செய்வது நடத்தும் கண்காணியின் உத்தரவாதம். அட்டவணையிலிருக்கும் மற்ற அறிவிப்புகளைச் செய்வதற்கு மற்றொரு சகோதரர் இருந்தபோதிலும் அப்படி செய்யவேண்டும்.
சபைக்குரிய தகவல்கள் அடங்கிய ஒரு கடிதத்தில் மூப்பர்களுக்கு மட்டுமே உரிய மற்ற தகவல்கள் இருக்குமானால் சபைக்கு பொருந்தக்கூடிய அந்தத் தகவலை ஒரு மூப்பரே அறிவிப்பு செய்ய வேண்டும். சபைக்குரிய திட்டவட்டமான வழிநடத்துதல்கள் அடங்கிய கடிதம் சங்கத்தினிடமிருந்து வரும்போது தகுதியுள்ள ஒரு மூப்பரால் வாசிக்கப்படுவது சிறந்ததாக இருக்கும். ‘ஒருவேளை இப்படிப்பட்ட கடிதங்கள் துன்புறுத்தலை அனுபவித்துக் கொண்டிருக்கும் சகோதரர்களின் சார்பாக விசேஷ கடிதம் எழுதவேண்டியது சம்பந்தப்பட்டதாக இருக்கக்கூடும். சில கடிதங்கள் துன்புறுத்தலை அனுபவித்துக் கொண்டிருக்கும் சகோதரர்களின் சார்பாக விசேஷ கடிதம் எழுதவேண்டியது சம்பந்தப்பட்டதாக இருக்கக்கூடும். சில கடிதங்கள் எதிர்கால தேவராஜ்ய நடவடிக்கைகளை, அதாவது வட்டார ஊழியர் சந்திப்புகள், மாநாடுகள் மற்றும் அசெம்பிளிகள் பற்றிய விவரங்கள் அடங்கிய கடிதங்களாக இருக்கக்கூடும்.
சபையின் நலன் சம்பந்தப்பட்ட சில முக்கியமான அறிவிப்புகள் செய்யப்பட வேண்டியதாக இருக்கலாம். இந்தத் தகவல் தெளிவாக சொல்லப்பட வேண்டும். இப்படிப்பட்ட அறிவிப்புகள் ஓரு மூப்பரால் செய்யப்படுவது சிறந்ததாக இருக்கும்.
ஒரு மூப்பரோ அல்லது உதவி ஊழியரோ, யார் அறிவிப்பு செய்தாலும், அது தெளிவாக சுருக்கமாகவும் இருக்க வேண்டும். இந்த ஆலோசனைகளைப் பின்பற்றுவதானது கொடுக்கப்படும் வழிநடத்துதலை சரியாக அறிவிப்பு செய்வதை நிச்சயப்படுத்தும். இதனால் எல்லாரும் ஐக்கியமாக முன்னேறுவார்கள்.—சங். 133:1; 1 கொரி. 14:8, 9, 40.