யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளை அவசரமாய் அறிவியுங்கள்
1 மகா பாபிலோனுக்கு எதிராக யெகோவா தமது தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான அவருடைய குறித்த காலம் தீவிரித்து வருகிறது. (வெளி. 1:3; 19:2) ஆனால் முதலில் அவளுக்கு வந்து கொண்டிருக்கும் அழிவைப்பற்றிய இறுதி எச்சரிப்பு கொடுக்கப்பட வேண்டும். தப்பிப்பிழைப்பதற்காக, நீதியை நேசிக்கக்கூடியவர்கள் “அவளைவிட்டு வெளியேற வேண்டும்.” மேலும் யெகோவா தேவனுக்கு முன்பாக அங்கீகரிக்கப்பட்ட நிலைநிற்கையை அடைய உழைக்க வேண்டும்.—வெளி. 18:4.
விசேஷ முயற்சி எடுங்கள்
2 எல்லா பிரஸ்தாபிகளும் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் சிருஷ்டிப்பு புத்தகத்தை அளிப்பதில் பங்குகொள்ள விரும்ப வேண்டும். வீட்டில் இல்லாதோர் பெயரை குறித்துக்கொண்டு திரும்ப போய் சந்திக்க வேண்டும். கூடுதலான வெளி ஊழியத்திற்கான கூட்டங்களை ஏற்பாடு செய்வதைப்பற்றி மூப்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிற்பகல் வெளி ஊழிய ஏற்பாடுகள் பிரஸ்தாபிகளுக்கு உதவியாக இருக்குமா? ஒரு சிலர் மாலையில் சற்று சீக்கிரமாகவே சாட்சி கொடுத்தல் வேலையில் ஈடுபடுவதை அதிக பலனுள்ளதாக கண்டிருக்கின்றனர்.
3 சிருஷ்டிப்பு புத்தகத்தை வீட்டுக்கு வீடு ஊழியத்தில் அளிப்பதோடுகூட வேறு சந்தர்ப்பங்களையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். இளம் பிரஸ்தாபிகள் அவற்றை தங்கள் ஆசிரியரிடம் அளிக்கலாம். உலகப்பிரகாரமான தொழிலில் ஈடுபட்டவர்கள் உணவு இடைவேளையின்போது வேலையாட்களிடம் பேசி அவர்களிடம் புத்தகத்தை அளிக்கலாம். எல்லா ஆட்களுக்கும்—உறவினர்கள், உங்கள் வீட்டுக்கு வரக்கூடிய தபால்காரர் மற்றும் வியாபாரிகள், மருத்துவர்கள், பல்மருத்துவர்கள் வழக்கறிஞர்கள், நாம் தொடர்பு கொள்ளக்கூடிய வியாபாரிகள்—கடவுளுடைய வார்த்தையை கேட்கும் வாய்ப்பைக் கொடுங்கள். அவர்கள் அர்மகெதோனில் தெய்வீக நியாயத்தீர்ப்பின் உச்சக்கட்டத்தை தப்பிப்பிழைக்கக்கூடிய திரள் கூட்டத்தாரில் ஒருவராக இருக்க விரும்பக்கூடும்.
4 புதிய சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருள் “நாம் யாரைத் தொழுதுகொள்வோம்?” என்பதாகும். நம்முடைய முன்னுரை, நியாயங்கள் புத்தகம் பக்கம் 322-ல் உள்ள தகவல்களை உட்படுத்துவதாக இருக்கலாம். பலதரப்பட்ட எத்தனை வழிபாட்டு முறைகளை நீங்கள் கவனித்திருக்கிறீர்கள் என்று வீட்டுக்காரரிடம் கேளுங்கள். பின்பு அவரிடம் தன்னைவிட உயர்ந்த ஏதோ ஒன்றை வழிபடும் அடிப்படை தேவை மனிதனிடம் இருக்கிறது என்ற குறிப்பைச் சுட்டிக்காட்டுங்கள். என்றபோதிலும், மனிதன் பெரும்பாலும் பொய்த் தெய்வங்களையே வழிப்பட்டு வந்திருப்பதால் வெளிப்படுத்துதல் 14:7 நமக்கு சமயத்துக்கேற்ற எச்சரிப்பைக் கொடுக்கிறது. இது நமது சிருஷ்டிகராகிய அந்த உண்மைக் கடவுளை தொழுதுகொள்ள வேண்டிய அவசியத்தைச் சுட்டிக் காட்டுகிறது. இந்த வெளிப்படுத்துதல் புத்தகம் எல்லா பொய் மதங்களையும் மகா பாபிலோன் என்ற பெயரால் அடையாளங்காட்டுகிறது. பின்பு வெளிப்படுத்துதல் 18:2a மற்றும் 4-ல் அவசரமான எச்சரிப்பை ஒலிக்கிறது. ஒருவர் ஒழுக்க விஷயத்தில் நேர்மையுள்ளவராக இருந்து மற்றவர்களுக்கு நன்மை செய்ய பிரயாசப்படுகிறபோதிலும், பொய்மத அமைப்புகளை அவர் ஆதரிக்கிறவராக இருந்தால் அப்போது என்ன? கடவுள் அப்படிப்பட்ட போக்கை அங்கீகரிக்கிறதில்லை. இது நாம் அதிக பொறுப்புணர்ச்சியோடு செய்வதற்குரிய ஏதோ ஒரு காரியத்தைக் கொடுக்கிறது. சிருஷ்டிப்பு புத்தகத்தை காண்பித்து ஆர்வத்தை தூண்டக்கூடிய திட்டவட்டமான குறிப்புகளை காண்பியுங்கள். பின்பு அந்த புத்தகத்தை ரூ.30-க்கு அளிக்கவும்.
5 நீங்கள் ஊழியம் செய்யக்கூடிய பிராந்தியத்துக்கு ஏற்ப உங்கள் பிரசங்கம் மாறுபடலாம். நியாயங்கள் புத்தகத்தில் பக்கங்கள் 322-33-ல் “மதம்” என்ற தலைப்பின் கீழுள்ள தகவலையும் பக்கங்கள் 49-53-ல் “மகா பாபிலோன்” என்ற தலைப்பின் கீழுள்ள தகவலையும் விமர்சனம் செய்யுங்கள். நியாயத்தீர்ப்பு மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் இந்த தெய்வீக செய்தியை அறிவிப்பதில் நாம் முழுமையாக பங்குகொள்வது அவசரமானதாக இருக்கிறது.—வெளி. 14:6, 7.