எழுத்து விமர்சனத்துக்காக தயார் செய்யுங்கள்
1 1989-ம் ஆண்டு ஜனவரி மாத நம் ராஜ்ய ஊழியம் தேவ ராஜ்ய ஊழியப் பள்ளியில் நடைபெறும் எழுத்து விமர்சனம் பற்றிய புதிய ஏற்பாடுகளைக் குறித்துப் பேசியது. இந்த விமர்சனங்கள் ஆண்டில் மூன்று தடவைகள் நடைபெறும். பிப்ரவரி, ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களின் கடைசியில் நடைபெறும். இதில் தனிப்பட்டவர்கள் சற்று கூடுதலான முயற்சி எடுக்க வேண்டியதாய் இருந்தபோதிலும் அதில் பங்கு பெறுபவர்கள் மிகுதியான பலன்களை அறுவடை செய்வார்கள். முந்தின கட்டுரையில் குறிப்பிட்டபடி எழுத்து விமர்சனத்திற்காக பதில் எழுதுவதற்கு இடைவெளிவிடப்பட்ட அச்சடித்த கேள்வித்தாள்கள் இனிமேலும் கொடுக்கப்படமாட்டாது. என்றபோதிலும் அச்சடிக்கப்பட்ட கேள்வி தாள்கள் மே, செப்டம்பர் மற்றும் ஜனவரி மாத நம் ராஜ்ய ஊழிய இதழ்களுடன் சேர்த்து அனுப்பப்படும். இந்தத் தாள்களை முன்னதாகவே கொண்டிருப்பதானது முழுவதும் ஆயத்தமாயிருப்பதற்காக குறிப்பிட்ட தகவல்களின் பேரில் ஆராய்ச்சி செய்வதற்கான வாய்ப்பை ஒவ்வொருவருக்கும் கொடுக்கும்.
2 அச்சடிக்கப்பட்ட கேள்விகள் எதன் பேரில் சார்ந்திருக்கிறதோ அந்தக் குறிப்பு கொடுக்கப்பட்ட தகவலை எடுத்துப் பார்க்கையில் அந்தக் கேள்வி தாளிலேயே குறிக்காதீர்கள் அல்லது எழுதாதீர்கள். ஏனெனில் எழுத்து விமர்சனத்துக்காக இந்தக் கேள்வித்தாள்களை நீங்கள் பயன்படுத்துவீர்கள். எழுத்துவிமர்சனத்தின்போது பைபிளை மட்டுமே உபயோகிக்கவேண்டும் என்பதை நினைவிற் கொள்ளுங்கள். உங்களுடைய தனிப்பட்ட குறிப்புதாள்களோ அல்லது மற்ற மேற்கோள்களோ பயன்படுத்தப்படக்கூடாது.
3 எழுத்து விமர்சனத்துக்காக கொடுக்கப்பட்ட நேரத்தின்போது, உங்களுடைய சொந்த வார்த்தைகளில் நீங்கள் சொல்லப்போகும் விடைகளை எழுதிக்கொள்வதற்காக ஒரு தனி தாள் உங்களுக்குத் தேவைப்படும். திட்டவட்டமான குறிப்புகளைச் சொல்லவும் மற்றும் சுருக்கமாக சொல்லவும் முயற்சி எடுங்கள். நீங்கள் முன்கூட்டியே தயாரித்திருப்பதால், இது உங்களுக்கு அவ்வளவு கடினமாயிருக்கக்கூடாது. பள்ளிக் கண்காணி விடைகளைச் சொல்லும்போது நீங்கள் எழுதிய தகவல் சரியானதா என்பது உங்களுக்குத் தெரிந்துவிடும்.
4 ஒவ்வொரு வார தேவராஜ்ய பள்ளிக்கும் ஒவ்வொருவரும் நன்றாக தயார் செய்யவேண்டும். கூட்டங்களின் போது உன்னிப்பாக கவனம் செலுத்தவேண்டும். மேடையிலிருந்து அளிக்கப்படும் தகவல்களிலிருந்து முக்கிய குறிப்புகளைத் தேர்ந்தெடுப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். அடுத்த எழுத்து விமர்சனத்தில் சிந்திக்கப்படவிருக்கும் எல்லா குறிப்புகளையும் சபையாருக்குத் தெளிவாக எடுத்துரைக்க பள்ளிக் கண்காணி நிச்சயப்படுத்திக் கொள்ளவேண்டும்.
5 இந்தப் புதிய ஏற்பாடு, தேவ ராஜ்ய பள்ளியின் இந்த அம்சத்திற்கு ஆஜராயிருப்பதற்கும் அதில் பங்கு பெறுவதற்கும் ஒவ்வொருவருக்கும் கூடுதலான ஊக்கத்தை அளிக்க வேண்டும். இதில் உட்பட்டிருக்கும் கூடுதலான ஆராய்ச்சி முக்கிய குறிப்புகளை நமது மனங்களில் தெளிவாக நிலைநாட்டுவதற்கு உதவ வேண்டும். இந்தப் புதிய ஏற்பாடுடன் தேவராஜ்ய பள்ளியின் குறிக்கோள் இன்னுமதிக முழுமையாய் நிறைவேற்றப்படும். இது ஊழிய வேலைக்காக நாம் இன்னும் அதிக ஆயத்தமானவர்களாக இருப்பதில் பிரதிபலிக்கவேண்டும்.