சீஷராக்குவதற்கு நமக்கு உதவும் கூட்டங்கள்
மே 8-ல் துவங்கும் வாரம்
பாட்டு 53 (27)
10 நிமி: சபை அறிவிப்புகள் மற்றும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். “எழுத்து விமர்சனத்துக்காக தயார் செய்யுங்கள்.” கட்டுரையில் முக்கிய குறிப்புகளை உயர்த்திக் காண்பியுங்கள். மகா பாபிலோனுக்கு எதிரான உண்மைகளை மிகக் கடுமையாக எடுத்துப் பேசக்கூடிய இந்தப் புதிய பத்திரிகைகளை சனிக்கிழமையன்று அளிக்க எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள். ஞாயிறு அன்று தொகுதி ஊழிய ஏற்பாடுகளை அறிவியுங்கள்.
15 நிமி: “நேர்மையான இருதயமுள்ளோர் மகா பாபிலோனிலிருந்து தப்பிக்க உதவுங்கள்,” ஊழிய கண்காணியால் கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
20 நிமி: புதியவர்களுக்கும் செயலற்றவர்களுக்கும் உதவி செய்யுங்கள். செயலற்றவர்களுக்கும் உற்சாகமூட்டுதல் தேவைப்படக்கூடிய மற்றவர்களுக்கும் உதவுவதற்கான தேவையை மூப்பர்கள் கலந்தாலோசிக்கிறார்கள். உதவி செய்வதற்குச் சபை என்ன செய்யலாம்? செயலற்றவர்களுக்கு உதவி செய்வதற்கு நெருங்கியவண்ணமாய் ஒத்துழைக்க வேண்டிய அவசியத்தை உயர்த்திக் காட்டுங்கள். (எபி. 6:1-3) ‘நம் ஊழியத்தை முழுமையாய் நிறைவேற்றுவதில்’ பங்குகொள்ளவேண்டுமானால் இது அத்தியாவசியம். (2 தீமோ. 4:5) சபை புத்தகப் படிப்பு மூலமாக எவ்வாறு உதவி கொடுக்கப்படலாம் என்பதை காட்டுங்கள். பொருந்தக்கூடிய நடைமுறையான ஆலோசனைகளைக் கண்டுபிடிக்க இன்டெக்ஸை பார்க்கவும்.
பாட்டு 20 (110), முடிவு ஜெபம்.
மே 15-ல் துவங்கும் வாரம்
பாட்டு 8 (60)
8 நிமி: கூட்டத்திற்கு அனலான வரவேற்பு. சபை அறிவிப்புகளும் கணக்கு அறிக்கையும். இந்தச் சனிக்கிழமை அளிக்கப்படவிருக்கும் புதிய பத்திரிகைகளிலிருந்து சுருக்கமான குறிப்புகளை எடுத்துச் சொல்லவும்.
23 நிமி: “தனிப்பட்ட ஒழுங்கமைப்பிற்கு அதிக கவனம் செலுத்துங்கள்.” சபையார் கலந்தாலோசிப்பு மூலமாக சேர்க்கையில் உள்ள தகவலை மூப்பர் சிந்திக்கிறார். தனிப்பட்ட ஒழுங்கமைப்பில் முன்னேற்றம் செய்வதற்கு இந்த ஆலோசனையை சகோதரர்கள் எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை அவர்களாகவே சொல்லக்கூடிய வகையில் நடைமுறை இயல்புள்ள கேள்விகளை அவர் கேட்க வேண்டும். தங்களுடைய நேரத்தைப் பயனுள்ள விதத்தில் உபயோகிக்க அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதன் பேரில் அவர்கள் குறிப்புகள் சொல்லும்படியும் கேளுங்கள்.
14 நிமி: “நம்முடைய தற்காப்புச் சாதனங்களை முழுமையாக பயன்படுத்துதல்,” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. சொந்த சபையில் அது எவ்வாறு பொருத்திப் பிரயோகிக்கப்படுகிறது என்பதன் பேரில் வலியுறுத்தம்.
பாட்டு 136 (28), முடிவு ஜெபம்.
மே 22-ல் துவங்கும் வாரம்
பாட்டு 30 (25)
12 நிமி: சபை அறிவிப்புகள். தேவ ராஜ்ய செய்திகள். “சந்தாதாரர்கள் சந்தாவை ஒழுங்காக பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தல்.” இந்தச் சனிக்கிழமை பிரஸ்தாபிகள் பயன்படுத்தக்கூடிய சுருக்கமான பத்திரிகை அளிப்பை நடித்துக் காட்டுங்கள்.
15 நிமி: நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்துதல். 1989-ன் வருடாந்தர புத்தகத்திலிருந்து உலகளாவிய அதிகரிப்பு மற்றும் அனுபவங்கள் ஆகியவற்றை முக்கியமாய் உங்கள் சபையின் விசுவாசத்தைப் பலப்படுத்தக்கூடியவற்றை சபையாருடன் கலந்தாலோசியுங்கள். பக்கங்கள் 11-13, 42-3, 47, 49, 52-3, 82-3, 121-2, 127-9-ஐப் பார்க்க சிபாரிசு செய்கிறோம்.
18 நிமி: “காவற்கோபுர ஆலோசனைகளைப் பொருத்திப் பிரயோகிப்பதன் மூலம் பக்திவைராக்கியத்தைப் புதுப்பித்தல்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. பாராக்கள் 4-6-ஐ கலந்தாலோசிக்கையில் ஜூலை 15 ஆங்கில காவற்கோபுரம் பக்கங்கள் 16-20-ல் தெரிவிக்கப்பட்டிருக்கும் யோசனைகளை விமர்சியுங்கள். அந்தக் காவற்கோபுரம் கட்டுரையில் உங்களுடைய சபையின் பிராந்தியத்திற்கு அதிக உதவியாக இருக்கக்கூடிய ஓரிரண்டு குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து சிறப்பித்துக் காட்டுங்கள். பத்திரிகையில் கொடுக்கப்பட்டிருக்கும் ஓர் ஆலோசனையின் பொருத்தத்தை நடித்துக் காட்டுங்கள்.
பாட்டு 64 (35), முடிவு ஜெபம்.
மே 29-ல் துவங்கும் வாரம்
பாட்டு 200 (108)
10 நிமி: சபை அறிவிப்புகள். இந்த வாரம் அளிக்கப்படும் புதிய பத்திரிகைகளின் சுருக்கமான அளிப்பை நடித்துக்காட்டவும். உங்களுடைய பிராந்தியத்துக்கு அதிக பயனுள்ளதாக இருக்கும் ஒவ்வொரு இதழிலுள்ள கட்டுரைகளையும் சிறப்பித்துக் காட்டுங்கள். இந்த வார இறுதியில் வெளி ஊழியத்தில் கலந்துகொள்ள உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: “நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—நியாயங்கள் புத்தகத்தை முழுமையாகப் பயன்படுத்துவதன் மூலம்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. பாரா 3-ல் காண்பிக்கப்பட்டிருக்கும் முன்னுரைகளையும் பாரா 4-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் உரையாடலை நிறுத்தும் காரியத்தை மேற்கொள்வதற்கான ஆலோசனைகளையும் நடித்துக்காட்டுங்கள்.
15 நிமி: சபையின் தேவைகள் அல்லது காவற்கோபுரம் ஜனவரி 1, 1989 பக்கங்கள் 29-30 “நாம் ஏன் கடவுளுக்குப் பயப்பட வேண்டும்?” என்ற கட்டுரையின் பேரில் சார்ந்த பேச்சு. (இந்திய மொழிகளில் “யா யெகோவாவில் நம்பிக்கையாயிருங்கள்,” காவற்கோபுரம் ஆகஸ்ட் 88.)
பாட்டு 193 (103), முடிவு ஜெபம்.