அறிவிப்புகள்
● ஜூன் மாதத்திற்கான பிரசுர அளிப்பு: காவற்கோபுர சந்தா ஓராண்டிற்கு நன்கொடை ரூ.40. விழித்தெழு!-வும் அதே அடிப்படையில் அளிக்கப்படலாம். ஆறுமாத கால சந்தாவும் மற்றும் மாதாந்தர இதழ்களுக்கான ஓராண்டு சந்தாவும் ரூ.20. ஜூலை: மெய்ச் சமாதானம் அல்லது தப்பிப்பிழைத்தல் (Survival) என்ற ஆங்கில புத்தகம் ரூ.10 நன்கொடைக்கு. (இந்திய மொழிகளில்: இரண்டு பழைய புத்தகங்கள் ரூ.10-க்கு.) ஆகஸ்ட், செப்டம்பர்: 192-பக்க பழைய புத்தகங்களை இன்னும் கையிருப்பில் கொண்டிருக்கும் சபைகள் இரண்டு ஆங்கில புத்தகங்களை ரூ.10-க்கும், இந்திய மொழிகளில் ஒரு புத்தகத்தை ரூ.5-க்கும் அளிக்கலாம். (எந்த பிரசுரங்களை பயன்படுத்தலாம் என்பதற்கு நம் ராஜ்ய ஊழியம், பிப்ரவரி 88, அறிவிப்புகள் பகுதியில் காணலாம். இதற்கு கிரெடிட் எவ்வாறு கேட்கலாம் என்பதை நம் ராஜ்ய ஊழியம் மே 88 மாத இதழில் காணவும்.) இல்லாவிட்டால் பின்வரும் பத்திரிகை அளவு புரோஷூர்கள் ஒன்றை ரூ.3-க்கு அளிக்கலாம்: பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்”, என்றென்றும் நிலைத்திருக்கும் தெய்வீகநாமம், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம். அக்டோபர்: “உயிர்—அது இங்கு எப்படி வந்தது? பரிணாமத்தின் மூலமா அல்லது படைப்பின் மூலமா?” நன்கொடை ரூ.30. சிறிய அளவு புத்தகம் ரூ.15. (இந்திய மொழிகளில்: விசேஷ அளிப்பாக 192-பக்க பழைய புத்தகங்கள், ஒன்று ரூ.5-க்கு.)
● நடத்தும் கண்காணி அல்லது அவரால் நியமிக்கப்பட்ட வேறு ஒருவர் இந்த மாதம் சபையின் கணக்குகளைத் தணிக்கைச் செய்வதை நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.