நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—மெய்ச் சமாதானம் புத்தகத்தோடு
1 1 தெசலோனிக்கேயர் 5:2, 3-லுள்ள தீர்க்கதரிசன நிறைவேற்றத்திற்கு வழிநடத்தக்கூடிய சம்பவங்களை நாம் காண்கையில், எது தீவிரித்துக்கொண்டிருக்கிறதோ அதைக் குறித்து மனிதருக்கு எச்சரிப்பதில் தொடர்ந்து மும்முரமாய் ஈடுபட நாம் தீர்மானிக்கிறோம். பொருத்தமாகவே ஜூலை மாதத்தின்போது நம்முடைய வெளி ஊழியத்தில் நாம் மெய்ச் சமாதானமும் பாதுகாப்பும்—அதை கண்டடைவது எப்படி? என்ற புத்தகத்தைச் சிறப்பித்துக் காட்டுவோம். இந்த சிறந்த பிரசுரம் ஜனங்கள் எதை சிந்தித்துக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி பேசுகிறது. மேலும் நம்பிக்கைக்குப் பலமான ஆதாரம் அளிக்கிறது.
ஏன் காலத்துக்கேற்றது
2 வல்லரசு நாடுகளின் தற்போதைய முயற்சிகள் வெற்றிபெறுமா அல்லது அவர்களுடைய தோல்வி தேசங்களை அணுசக்திப் போருக்கு வழிநடத்திவிடுமா என்று அநேக ஆட்கள் யோசித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த மெய்ச் சமாதானம் புத்தகமானது கடவுள் மனிதவர்க்கத்தினருக்கு நிரந்தரமான சமாதானத்தைக் கொண்டுவருவார் என்ற அறிவினால் அவர்களை ஆறுதல்படுத்தக்கூடும். பூமிக்கான அவருடைய நோக்கம் அது மனிதர்களால் அழிக்கப்படுவதை அனுமதிக்கிறதில்லை. பசி, படுமோசமான ஏழ்மை நிலை, மற்றும் குடியிருக்க வீடு இல்லாமை போன்றவையே இலட்சக்கணக்கானோருடைய வாழ்க்கைப் பங்காக இருக்கிறது. தேசங்களை வாதித்துக் கொண்டிருக்கும் பிரச்னைகளுக்கு ஒரே உண்மையான பரிகாரத்தை மெய்ச் சமாதானம் புத்தகம் சுட்டிக்காட்டுகிறது. பெருகிவரும் குற்றச் செயலினால் ஏற்பட்டிருக்கும் தனிப்பட்ட பாதுகாப்பின்மை தங்களுடைய சொந்த வீடுகளிலேயே அநேகர் பிணைக்கைதிகளைப் போன்று உணரும்படி செய்திருக்கிறது. இந்த மெய்ச் சமாதானம் புத்தகம் அதற்கான பரிகாரத்தின்பேரில் வேதப்பூர்வமான ஒளியை வீசுகிறது. நவீன கால வாழ்க்கைப் பாணிகள் கடவுளால் கொடுக்கப்பட்ட பாலுணர்வு சக்திகளைத் தவறான வகையில் பயன்படுத்துவது மற்றும் அதை துர்ப்பிரயோகம் செய்வது உட்பட, மிகத்திரளான தனி நபர்கள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கையை பாழ்ப்படுத்தியிருக்கிறது. மெய்ச் சமாதானம் புத்தகம் கடவுளுடைய தராதரங்களையும் அதன்படி வாழ்வதற்குத் தெரிந்துகொள்ளக்கூடியவர்களுக்கு அருளப்படும் பாதுகாப்பையும் சுட்டிக்காட்டுகிறது.
நீங்கள் அறிமுகப்படுத்தும் முறை
3 “மெய்ச் சமாதானம் பாதுகாப்பிற்கு ஊற்றுமூலம்.” இதுவே ஜூலை மாதத்திலிருந்து நாம் உபயோகிக்கத் துவங்கும் புதிய சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருள். அதில் பயன்படுத்தப்படும் இரண்டு வேதவசனங்கள் 1 தெசலோனிக்கேயர் 5:3 மற்றும் மீகா 4:3, 4. நியாயங்கள் புத்தகத்தில் சிபார்சு செய்யப்பட்டிருக்கும் பல்வேறு முன்னுரைகளை பக்கங்கள் 9-15-ல் கொடுக்கப்பட்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள். இதை இந்தப் பேச்சுப் பொருளுடனும் மற்றும் உள்ளூர் பிராந்திய தேவைக்குத் தகுந்தாற்போலும் மாற்றியமைத்துக்கொள்ளலாம்.
4 உங்களுடைய சம்பாஷணையில் மனிதனால் உண்டுபண்ணப்படும் சமாதானம் நிரந்தரமல்ல. கடவுளுடைய சமாதானம் நித்தியமானது என்பதைக் காட்டுவதற்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு வேதவசனங்களைப் பயன்படுத்துங்கள். மீகா 4:3, 4-ஐ வாசித்து சுருக்கமான குறிப்பைச் சொன்ன பின்பு வீட்டுக்காரரிடம் வேதனைப்படும் மனிதவர்க்கத்தினருக்கு அந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் எதைக் குறிக்கும், அதைப்பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று கேட்பதன் மூலம் அவரை ஒருவேளை உங்கள் சம்பாஷணையில் உட்படுத்தக்கூடும். இந்தத் தீர்க்கதரிசனம் நம்முடைய காலத்தில் நிறைவேற்றமடைவதைக் காண்பதில் அவர் மகிழ்ச்சியடைவாரா? மெய்ச் சமாதானம் புத்தகம் பக்கம் 99-ல் உள்ள படச்சித்தரிப்புக்குத் திருப்பலாம். அதன் பேரில் குறிப்புச் சொல்லுங்கள். அதன் பின்பு அடுத்து வரும் ஒரு சில பக்கங்களில் பூமி முழுவதிலும் வரப்போகும் சமாதானம் பாதுகாப்பு பற்றிய நம்பகமான எதிர்ப்பார்ப்புகளைச் சுட்டிக் காட்டக்கூடிய பொருத்தமான கூற்றுகளுக்குக் கவனத்தைத் திருப்புங்கள். மெய்ச் சமாதானம் புத்தகத்தின் துணைக்கொண்டு கூடுதலான விவரங்களை ஆராய்ந்துப் பார்க்கும்படி வீட்டுக்காரரை அழையுங்கள். என்றபோதிலும் குறிப்பிட்ட சில வீட்டுக்காரருடன் நீங்கள் பேசும்போது புத்தகத்திலுள்ள வேறொரு பகுதிக்குக் கவனத்தைத் திருப்ப நீங்கள் ஒருவேளை விரும்பக்கூடும்.
5 இந்த மெய்ச் சமாதானம் புத்தகம் உங்கள் கையிருப்பில் இல்லையென்றால் அல்லது அவை தீர்ந்துவிடுமானால், கிடைக்கக்கூடிய மற்ற 192-பக்க புத்தகங்களை நீங்கள் தாராளமாய் பயன்படுத்தலாம்.
6 மெய்ச் சமாதானம் என்பது போர் இல்லாத நிலைமையை மட்டுமே குறிக்கிறதில்லை. ஏனெனில் இது ஆரோக்கியம், பாதுகாப்பு, மற்றும் பொது உடல் நிலை ஆகியவற்றையும் குறிக்கிறது. ‘சமாதானத்தின் தேவனாகிய’ யெகோவாவும் “சமாதானத்தின் பிரபு”வாகிய அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்துவும் மட்டுமே தங்களோடு சமாதானம் செய்துகொள்ளக்கூடிய ஆட்களுடைய இந்த நித்திய ஆசீர்வாதங்களை உறுதியளிக்க முடியும். (1 தெச. 5:2, 3; ஏசா. 9:6) கடவுளோடும் அவருடைய குமாரனோடும் சமாதானத்தை இப்பொழுது அனுபவித்து மகிழ்வதற்கும் பூமி முழுவதிலும் விரைவில் ஏற்படவிருக்கும் சமாதானத்தைப் பற்றிய நம்பிக்கையில் ஆறுதலடைவதற்கும் நாம் நமது அயலகத்தாருக்கு உதவிசெய்யலாம். சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையை கால்களிலே தொடுத்தவர்களாயிருந்”தால் ஜூலை மாதத்தில் மெய்ச் சமாதானம் புத்தகத்தை அளிப்பதன் மூலம் நாம் இதைச் செய்யலாம்.—எபே. 6:5.