கேள்விப் பெட்டி
● வியாபாரம் அல்லது தனிப்பட்ட விவகாரங்கள் சம்பந்தமாக நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பக்கூடிய ஒருவரின் விலாசங்களுக்காக சங்கத்திற்கோ அல்லது அதன் கிளைக் காரியாலயங்களுக்கோ எழுதி கேட்பது சரியானதாகுமா?
சங்கத்தின் கோப்புகளிலோ அல்லது சபையின் கோப்புகளிலோ இருக்கும் எல்லா விலாசங்களும் இரகசியமாக வைக்கப்பட வேண்டியவை. தனிப்பட்ட உபயோகங்களுக்காக தெரிவிக்கப்படக்கூடது. ஆகையால் எவரும் சங்கத்திற்கோ அல்லது அதன் கிளைக் காரியாலயங்களுக்கோ இப்படிப்பட்ட தகவல்களுக்காக கேட்டு எழுதக்கூடாது.
யெகோவாவுக்கும் அவருடைய சித்தத்தைச் செய்வதற்கும் நமது முழு ஆத்துமாவுடன்கூடிய ஒப்புக்கொடுத்தலில் உட்பட்டிருக்கும் நோக்கம் மற்றும் வேலையின் பேரில் சபையானது தன்னுடைய கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும். சங்கமோ அல்லது சபையோ வியாபார நடவடிக்கைகளை ஆதரிப்பதிலோ அல்லது அதை விருத்தியடையச் செய்யும் காரியங்களிலோ தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியாது. இப்படிப்பட்ட வியாபார நடவடிக்கைகள் கண்டிப்பாக தனிப்பட்ட சொந்த விவகாரமாக, தனியாருக்குரிய வர்த்தக செயல் திட்டமாக கருதப்பட வேண்டும். மற்ற பட்டணங்களில் மற்றும் வெளி நாடுகளில் உள்ள சகோதரர்களோடு தொடர்பு கொள்ள விரும்பும் பிரஸ்தாபிகள் அந்த விவகாரங்களைத் தாங்களாகவே சுயமாக கையாள வேண்டும்.