மெய்ச் சமாதானமும் பாதுகாப்பும் பற்றி அறிவியுங்கள்
1 மெய்ச் சமாதானமும் பாதுகாப்பும் ஒரே ஊற்றுமூலமாக இருக்கும் யெகோவா தேவனிடமிருந்து மட்டுமே வரக்கூடும். யெகோவா “திரளான ஜனங்களுக்குள் நியாயந்தீர்த்து, தூரத்திலுள்ள பலத்த ஜாதிகளைக் கடிந்துகொள்வார்” என்று மீகா நமக்குத் தெரிவிக்கிறான். அதன் விளைவு? “ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறு ஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.”—மீகா 4:3.
2 யெகோவா மட்டுமே மெய்யான சமாதானத்துக்கு மூலக்காரணராதலால் ஜனங்கள் அவருடைய பாதையில் நடப்பதற்காக அவருடைய வழிகளைப் பற்றிய போதனைகளைப் பெற்றுக்கொள்வதற்கு “யெகோவாவின் பர்வதத்துக்குப்” போகவேண்டும். (மீகா 4:2) யெகோவா தேவன் தம்முடைய ராஜ்யத்தின் மூலமாக இந்தப் பூமிக்கு மெய்யான சமாதானத்தைக் கொண்டுவருவார் என்பதை அவர்கள் கற்றுக்கொள்வார்கள். மெய்யான சமாதானம் பாதுகாப்பின் மூலக்காரணரைப் பற்றி இன்னும் அநேக மக்கள் அறிந்துகொள்ளுவதற்கு நாம் எப்படி உதவலாம்?
மெய்ச் சமாதானம் புத்தகத்தை விநியோகியுங்கள்
3 “யெகோவாவின் பர்வதத்துக்குப் போக” விரும்பும் ஆட்களுக்குக் காலத்துக்கேற்ற தகவலை மெய்ச் சமாதானம் புத்தகம் கொண்டிருக்கிறது. பின்லாந்தில் வசிக்கக்கூடிய ஒரு டாக்டர் மெய்ச் சமாதானம் புத்தகத்தின் பிரதி ஒன்றை பெற்றுக்கொண்டார். அந்தச் சமயத்தில் அவர் அதை வாசிக்கவில்லை. ஆனால் அதைப் புத்தக அலமாரியில் வைத்துவிட்டார். பின்பு, அந்தப் புத்தகம் தங்களிடம் இருப்பது பற்றி அவருடைய மனைவிக்கு ஞாபகம் வந்தது. அதை அவள் முழுவதுமாக வாசித்தாள். உடனே தான் சத்தியத்தைக் கண்டுபிடித்துவிட்டாள் என்பதை அவள் மனதார நம்பினாள். அவள்படிக்க ஆரம்பித்தாள். பின்பு அவளுடைய கணவனும் படிப்பில் அவளுடன் சேர்ந்துகொண்டான். அவர்கள் இப்பொழுது முழுக்காட்டப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய பிள்ளைகளும்கூட நற்செய்தியின் பிரஸ்தாபிகளாக இருக்கிறார்கள். நம்மால் இயன்ற அளவுக்கு அநேகருடைய வீடுகளில் இந்த மெய்ச் சமாதானம் புத்தகத்தை விட்டு வருவதன் மதிப்பை இந்த அனுபவம் சுட்டிக்காட்டுகிறது.
4 வெளி ஊழியத்திற்காக நாம் செய்யும் தயாரிப்பில் புத்தகத்தின் பொருளடக்கத்தையும் ஜனங்களுடைய மனதை எது தொடக்கூடும் என்று நாம் நினைக்கிறோமோ அந்த அதிகாரங்களையும் நாம் மறு ஆய்வு செய்வது அவசியம். வீட்டுக்காரருடன் சம்பாஷிக்கையில் பயன்படுத்துவதற்காக திட்டவட்டமான குறிப்புகளை புத்தகத்திலிருந்து நாம் தேர்ந்தெடுக்கலாம்.
5 நீங்கள் பின்வரும் யோசனைகளை உபயோகித்துப் பார்க்கலாம். சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளில் உள்ள வேத வசனங்களை வாசித்து கலந்தாலோசித்தப் பின்பு மெய்ச் சமாதானம் புத்தகத்தில் பக்கம் 8-க்கு வீட்டுக்காரருடைய கவனத்தைத் திருப்புங்கள். நேரம் அனுமதிக்குமானால் அங்கே கொடுக்கப்பட்டிருக்கும் வேதவசனங்கள் சிலவற்றை எடுத்துப்பார்த்து கடவுளுடைய ராஜ்யம் என்னசெய்யும் மனித தலைவர்கள் எதைச் சாதிக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுங்கள். பின்பு பாரா 13-ஐ வாசியுங்கள். அதற்கு பின்பு வீட்டுக்காரரைப் பார்த்து அடுத்த அதிகாரத்திலுள்ள ஒருசில குறிப்புகளைச் சிந்திக்க அவர் விரும்புகிறாரா என்று கேளுங்கள். இந்த ஒரு முறையில், அப்பொழுதே நீங்கள் ஒரு பைபிள் படிப்பை ஆரம்பித்துவிடலாம். இல்லாவிடில் மறுசந்திப்பு செய்கையில் பைபிள் படிப்பை துவங்க முயற்சி செய்யலாம்.
6 அபூரண மனிதன் மெய்ச் சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவர முடியாது என்பது மிகத் தெளிவாக இருக்கிறது. ஆகவே எதிர்காலத்தில் உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருப்பதற்கு ஜனங்கள் கடவுள் பேரில் தங்களுடைய விசுவாசத்தை வைக்கவேண்டும். ஆனால் அவரைக் குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படி கேள்விப்படுவார்கள்?” (ரோ. 10:14) மெய்ச் சமாதானம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் உண்மையான ஊற்றுமூலத்தினிடமாக திரும்பும்படி வாய்ப்பை மக்கள் பெறுவதற்கான காலம் முடிவடைந்து கொண்டிருக்கிறது. நமது சபையின் பிராந்தியத்தில் நேர்மை இருதயமுள்ள அநேகருக்கு மெய்ச் சமாதானத்தின் செய்தியை ஜூலை மாதத்தின்போது விளம்பரப்படுத்துவதற்கு நம்மால் இயன்றதைச் செய்வோமாக.