உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 9/89 பக். 1
  • நித்திய ஜீவன்—நமது இலக்கு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நித்திய ஜீவன்—நமது இலக்கு
  • நம் ராஜ்ய ஊழியம்—1989
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • செப்டம்பர் மாதத்தில் நடவடிக்கை
  • ஊழியத்தில் பொறுமையாயும் முழுமையாய் செய்கிறவர்களாயும் இருங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1991
  • உயிர்காக்கக்கூடிய நம்முடைய ஊழியத்தில்வெற்றிகரமாகப் பங்குகொள்வது
    நம் ராஜ்ய ஊழியம்—1993
  • கடவுளுடைய பெயரை முழுமையாக துதியுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1991
  • வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1990
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1989
km 9/89 பக். 1

நித்திய ஜீவன்—நமது இலக்கு

1. இயேசுவினால் கற்பிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஆட்கள் அவர் நடப்பித்து அற்புதங்களை கண்ணாரக்கண்டனர். ஆ, அவர்கள் என்னே ஒரு சிலாக்கியத்தை அனுபவித்து மகிழ்ந்தார்கள்! ஒரு சந்தரப்பத்தில் அவர் திரளான ஜனக்கூட்டத்தை உட்காரவைத்து, நன்றி செலுத்தி ஏராளமான அப்பத்தையும் மீனையும் கொண்டு அவர்களை போஷித்தார். பெண்களும் பிள்ளைகளும் தவிர சாப்பிட்ட ஆண்கள் 5,000 பேர். ஜனங்களுடைய சரீர தேவைகளைக் குறித்து இயேசு கவனமுள்ளவராயிருந்தார் என்றாலும் பிரதானமாக அவர் அவர்களுடைய ஆவிக்குரிய அக்கறைகளின் பேரில் அக்கறையுள்ளவராக இருந்தார். எனவே அடுத்த நாளன்று அவர் ஜனக்கூட்டத்தைப் பார்த்து சொன்னதாவது: “அழிந்து போகிற போஜனத்திற்காக அல்ல, நித்திய ஜீவன் வரைக்கும் நிலைத்திருக்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்.”—யோ. 6:27.

2. மெய்க்கிறிஸ்தவர்களாக, நாம் இயேசுவின் அறிவுரைகளைப் பின்பற்றி, நித்தியமான ஆவிக்குரிய நன்மைகளுக்காக உழைக்கவேண்டும். அப்படியானால் இது பொருள் சம்பந்தமான நாட்டங்களை அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டு கடவுளுடைய சித்தத்தைச் செய்வதையே நமது பிரதான குறிக்கோளாக கொண்டிருக்க வேண்டுமென்பதைக் குறிக்கிறது. ஆகையால் நாம் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி மற்றவர்களுடன் சத்தியத்தைப் பின்பற்றி மற்றவர்களுடன் சத்தியத்தைப் பகிர்ந்து கொள்வதில் ஒவ்வொரு நியாயமான முயற்சியும் எடுக்க வேண்டும். மற்றும் ஆவிக்குரிய காரியங்களை அவர்கள் போற்றுவதற்கும் நித்திய ஜீவனை தங்களுடைய இலக்காக கொண்டிருப்பதற்கும் மற்றவர்களுக்கு உதவவேண்டும்.

செப்டம்பர் மாதத்தில் நடவடிக்கை

3. செப்டம்பர் மாதத்தின்போது நாம் தொடர்ந்து விசேஷ அளிப்பாக பழைய 192 பக்க ஆங்கில புத்தகங்கள் இரண்டு ரூ10-க்கு அல்லது இந்திய மொழிகளில் ஒன்று ரூ5-க்கும் அளிப்போம். மாற்று அளிப்பாக ஒரு சிலர் பத்திரிகையளவு புரோஷூரை ரூ3-க்கு அளிக்க விரும்பக்கூடும்.

4. இந்த சிறந்த பிரசுரங்களில் வித்தியாசப்பட்ட புத்தகங்களை வைத்திருப்பது நல்லது இது நாம் வளைந்து கொடுப்பதற்கு வீட்டுக்காரரின் ஆர்வத்துக்கு ஏற்றார்போல் மாற்றியமைத்துக் கொள்வதற்கும் அதிக பொருத்தமான புத்தகத்தை அவருக்கு அளிப்பதற்கு உதவி செய்கிறது. (புரோஷூர்களை அளிப்பதற்கு பயனுள்ள யோசனைகள் “நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்,” செப்டம்பர் 1988 நம் ராஜ்ய ஊழியத்தில் கொடுக்கப்பட்டன.)

5. வீட்டுக்காரர் பிரசுரம் எதையும் எடுக்காவிட்டால், அந்த நபரின் ஆவிக்குரிய அக்கறையைத் தூண்டுவதற்கு நாம் ஒரு துண்டுப் பிரதியையோ அல்லது கைப்பிரதியையோ விட்டுவரலாம். அல்லது பொருத்தமான பைபிள் கேள்வியை எழுப்பிவிட்டு பின்பாக நாம் மறுபடியும் சந்திக்கும் போது உரையாடுவதற்காக அதன்பேரில் சற்று சிந்தனைச் செய்யும்படி நாம் வீட்டுக்காரருக்கு யோசனைக் கூறலாம். நியாயங்கள் புத்தகம் கலந்தாராயும் பல கேள்விகளில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். பக்கங்கள் 193, 245 அல்லது 247 போன்றவற்றில் உள்ளதை தேர்ந்தெடுக்கலாம்.

6. நற்செய்தியை மற்றவர்களுடன் பிரசங்கிப்பதில் திறம்பட்டவர்களாக இருக்கவேண்டும். இது முன் தயாரிப்பை தேவைப்படுத்துகிறது. சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளை நாம் மிக நன்றாக அறிந்திருக்கிறோமா? பிரசுரங்களிலிருந்து எடுத்துக் காட்டுவதற்கு திட்டவட்டமான குறிப்புகளை நாம் கொண்டிருக்கிறோமா? நம்முடைய வாராந்தர பைபிள் வாசிப்பு பகுதிகளை வாசிப்பதன் மூலமும் தினவாக்கியத்தை ஒவ்வொரு நாளும் சிந்திப்பதன் மூலமும், நம்முடைய ஆவிக்குரிய தன்மை வளர்ச்சியடையும், அப்போது நம்முடைய ஊழியத்தில் பேசுவதற்கு நாம் அநேக காரியங்களைச் கொண்டிருப்போம்.—எரேமியா 20:9-ஐ ஒப்பிட்டுப் பார்க்கவும்.

7. செப்டம்பர் பாதத்தின்போது வித்தியாசப்பட்ட அநேக பிரஸ்தாபிகளோடு சேர்ந்து ஊழியம் செய்யும் வாய்ப்பை நீங்கள் கொண்டிருக்கக்கூடும். இது நீங்கள் மற்றவர்களோடு கொண்டுள்ள உங்கள் தொடர்பையும் நட்பையும் விரிவாக்கக்கூடும். மற்றவர்கள் எப்படி நற்செய்தியை அறிமுகப்படுத்துகிறார்கள் என்பதைக் காண்பதற்கும்கூட இது இடமளிக்கும். எப்பொழுதுமே ஒரே நபரோடு ஊழியம் செய்யும்போது நீங்கள் இந்த வாய்ப்பை இழப்பவர்களாய் இருப்பீர்கள். ஆம் நம்முடைய இலக்கானது நித்திய ஜீவனைக் குறிக்கோளாக கொண்டு யெகோவாவுக்கு உத்தமமுள்ள சேவையை செய்வதாகும். அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் மற்றவர்களை ஏவுகையில், நம்முடைய நடவடிக்கைகள் மூலம் ஆவிக்குரிய காரியங்களுக்காக போற்றுதலை வெளிக்காட்டுவோமாக.—எபி. 10:24.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்