சீஷராக்குவதற்கு நமக்கு உதவும் கூட்டங்கள்
செப்டம்பர் 11-ல் துவங்கும் வாரம்
பாட்டு 109(53)
5 நிமி: சபை அறிவிப்புகள் மற்றும் கடந்த மாத ஊழிய நடவடிக்கைப் பற்றி சபையாருக்குத் தெரியப்படுத்துங்கள். என்ன சாதிக்கப்பட்டது என்பதை சகோதரர்கள் தெரிந்து கொள்ளட்டும். முன்னால் இருக்கும் வேலைக்காக சகோதரர்களை உற்சாகப்படுத்துங்கள். நேரம் அனுமதிக்கும் அளவுக்கு தேவராஜ்ய செய்திகள் சிலவற்றை எடுத்துரைக்கவும்.
20 நிமி: “நித்திய ஜீவன்—நமது இலக்கு.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு செப்டம்பர் 1988 நம் ராஜ்ய ஊழியத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளைப் பின்பற்றி வித்தியாசமான புரோஷூர்களின் பேரில் இரண்டு நடிப்புகளை சேர்த்துக்கொள்ளுங்கள். வீட்டுக்காரர் அதை ஏற்றுக்கொள்ளாதபோது, நியாயங்கள் புத்தகத்திலுள்ள பொருத்தமான கேள்வி ஒன்றை எழுப்பிவிட்டு வேறொரு சமயம் அதைச் சிந்திக்கலாம் என்று சொல்லி பிரஸ்தாபி சந்திப்பை முடிக்கலாம்.
20 நிமி: “1989 தேவ பக்தி’ மாவட்ட மாநாட்டிற்கு நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்!” (ராஜ்ய ஊழியம், ஜூலை 1989) பாராக்கள் 1-13-ஐ சபை காரியதரிசி கேள்வி-பதில் மூலமாக கலந்தாலோசிப்பர், சுருக்கமாக “மாவட்ட மாநாடு நினைப்பூட்டுதல்கள்” பகுதியையும் கையாளுவார். எல்லாரும் அனுபவிக்கத்தக்கதாக போதுமான உணவு இருக்கும், ஆகையால் உணவு வரிசையில் நிற்க அவசரப்படுவதற்கு அவசியமிராது என்பதை நினைப்பூட்டவும்.
பாட்டு 15(98), முடி ஜெபம்
செப்டம்பர் 18-ல் துவங்கும் வாரம்
பாட்டு 28(5)
5 நிமி: சபை அறிவிப்புகள், நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். கணக்கு அறிக்கையும் சங்கம் பெற்றுக்கொண்ட நன்கொடை ரசீதுகள் ஏதாவது இருந்தால் அதையும் தெரியப்படுத்துங்கள். வரும் சனிக்கிழமை பத்திரிகை ஊழியத்தில் பங்குகொள்ள உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: “நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—வீட்டுக்கு வீடு வேலையில் பல்வேறு முறைகளோடு,” சபையார் பங்கு பெறுதலுடன் ஒரு கலந்தாலோசிப்பு பாராக்கள் 2, 3-ன் சம்பந்தமாக 30 முதல் 60 வினாடி பத்திரிகை அளிப்பை நன்கு தயாரித்த பிரஸ்தாபி நடித்துக்காட்டச் செய்யுங்கள். பாராக்கள் 4, 5-ஐ சிந்திக்கும்போது நியாயங்கள் புத்தகத்திலிருந்தோ அல்லது ஜூலை 15, 1988 ஆங்கில காவற்கோபுரத்திலிருந்தோ இரண்டு வித்தியாசப்பட்ட முன்னுரைகளைப் பயன்படுத்தி நேரடியாக அணுகுவதை எளிய முறையில் நடித்துக்காட்டுங்கள். உள்ளூர் சபை பிராந்தியத்துக்கும் பொருத்தமான முன்னுரையைத் தேர்ந்தெடுங்கள்.
20 நிமி: “1989 ‘தேவ பக்தி’ மாவட்ட மாநாட்டிற்கு நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்!” (ராஜ்ய ஊழியம், ஜூலை 1989) பாராக்கள் 14-31 நடத்தும் கண்காணி சபையாருடன் கலந்தாலோசிக்கிறார். யெகோவாவின் ஜனங்களை மற்றவர்கள் குற்றப்படுத்துவதற்கு காரணம் கொடுக்காதபடி பார்த்துக்கொள்ள தனிப்பட்டவர்களாகவும் பெற்றோராகவும் நமக்கு இருக்கும் உத்தரவாதத்தை அழுத்திக் காட்டவும். பாராக்கள் 16, 17, 21, 22-26-ஐ தகுதியுள்ள வாசகர் வாசிக்கும்படி நியமிக்கவும். முடிவாக குடும்பத் தலைவர்கள் மாநாட்டுக்குச் செல்வதற்கு இரண்டொரு நாட்களுக்கு முன் சேர்க்கையிலுள்ள புத்திமதியை குடும்பமாக விமர்சனம் செய்யும்படி உற்சாகப்படுத்தவும்.
பாட்டு 34 (8), முடிவு ஜெபம்.
செப்டம்பர் 25-ல் துவங்கும் வாரம்
பாட்டு 50 (23)
8 நிமி: சபை அறிவிப்புகள். முதல் ஞாயிறு வெளி ஊழியத்துக்காக முழு ஆதரவைக் கொடுக்கும்படி உற்சாகப்படுத்துங்கள். “தேவ பக்தி மாவட்ட மாநாடுகள்.” பகுதியை விமர்சியுங்கள் மற்றும் உங்கள் சொந்த மாநாட்டு தேதிகளையும் இடங்களையும் தெரியப்படுத்துங்கள்.
17 நிமி: “உங்கள் ராஜ்ய மன்றத்தை நீங்கள் மதிக்கிறீர்களா?” கேள்வி-பதில். மூப்பரால் கையாளப்பட வேண்டும். உங்கள் சபை பிராந்தியத்துக்குப் பொருந்தக்கூடிய பகுதிகளைக் கட்டுரையிலிருந்து சிறப்பித்துக் காட்டவேண்டும்.
20 நிமி: “உங்களிடமிருப்பதை நீங்கள் பயன்படுத்துகிறீர்களா?” சேர்க்கையிலுள்ள தகவலை சபையாருடன் கலந்தாலோசிக்கவும். உங்கள் பிராந்தியத்துக்குத் தேவையான ஒரு தகவலைக் கண்டுபிடிப்பதற்கு இன்டெக்ஸைப் பயன்படுத்தி நடித்துக்காட்டுங்கள்.
பாட்டு 80(62), முடிவு ஜெபம்.
அக்டோபர் 2-ல் துவங்கும் வாரம்
பாட்டு 70(39)
8 நிமி: சபை அறிவிப்புகள். இந்த வாரக் கடைசியில் அனைவரும் வெளிஊழியத்தில் பங்குபெற உற்சாகப்படுத்துங்கள். அக்டோபரில் படைப்பு புத்தகத்தை அளிப்பதற்கு பேச்சுக் குறிப்புகளை எடுத்துக் காட்டவும்.
24 நிமி: “இளைஞர்களே, பள்ளியில் நற்பயனளிக்கக்கூடிய விதத்தில் சாட்சி கொடுங்கள்.” பாராக்கள் 4-6-ல் சிபாரிசு செய்யப்பட்டிருக்கும் முறைகளை இளம் சாட்சிகள் பயன்படுத்தும் இரண்டு நடிப்புகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
13 நிமி: பள்ளியில் இளைஞர் சாட்சி கொடுத்த தன் விளைவுகள் ஒரு மூப்பரால் கையாளப்படவேண்டும். உங்கள் சபையிலுள்ள அனுபவங்களைப் பயன்படுத்துங்கள். சபை அனுபவங்கள் இல்லாவிடில் சில முன்மாதிரியுள்ள இளைஞரால் பின்வரும் அனுபவங்கள் சொல்லப்படலாம். 1989 வருடாந்தர புத்தகம் பக். 53, பா 1-3, மற்றும் பக்.60 பாரா 1-3. பள்ளியில் சாட்சி கொடுப்பதற்கான வாய்ப்புகளை தேடி பேசும்படி முந்திக்கொள்ளும்படி இளைஞரை உற்சாகப்படுத்துங்கள். பள்ளியில் நற்பயன்தரும் விதத்தில் சாட்சி கொடுப்பதற்காக தயார் செய்யும்படி தங்கள் பிள்ளைகளுக்கு உதவ பெற்றோரை ஊக்குவியுங்கள்.
பாட்டு 75(58), முடிவு ஜெபம்