உங்களுடைய தயாள குணத்திற்கு நன்றி
1 பயனியர் சேவை பள்ளியின் சம்பந்தமாக பயனியர்களிடமிருந்தும் பயண கண்காணிகளிடமிருந்தும் சங்கம் அநேக கடிதங்களைப் பெற்றிருக்கிறது. பயனியர் சேவை பள்ளி வெற்றிகரமாக நடந்தேறி முடிவதற்கு உதவி செய்திருப்பவர்களுக்கும் அதற்காக தங்களுடைய ஆதரவையும் ஒத்துழைப்பையும் தந்த நாடு முழுவதிலுமுள்ள சகோதரர்களுக்கும் இந்த முழுநேர ஊழியர்கள் அடிக்கடி தங்கள் நன்றியை தெரியப்படுத்துகின்றனர்.
2 ஒரு பள்ளிக்கு ஆஜராயிருந்த பயனியர்கள் விருந்தளிப்பவர்களாக இருந்த சபையினர் காண்பித்த “கனிவார்ந்த உபசரிப்புக்கு” தங்களுடைய ஆழ்ந்த போற்றுதலை வெளிக்காட்டினார்கள். பள்ளிக்கு ஆஜராயிருந்தவர்களின் மகிழ்ச்சியை கூட்டுவதற்கு உணவு அளித்த பல்வேறு சபையிலுள்ள சகோதரர்கள் காண்பித்த அன்பைப் பற்றியும் அவர்கள் குறிப்பு தெரிவித்திருக்கிறார்கள். உள்ளூர் சபைகள் உணவு அளித்தது மட்டுமல்லாமல் பள்ளி நடைப்பெற்ற அந்த இரண்டு வாரங்களுக்குத் தங்கும் வசதிகளைத் தாராளமாக அளித்தனர்.
3 சபைகள் மற்ற பல வழிகளிலும்கூட தன்னலந்துறந்த அன்பை வெளிக்காட்டியிருக்கின்றனர். தங்களுடைய ராஜ்ய மன்றத்தை கொடுப்பதன் மூலமும் அதைச் சுத்தமாகவும் வசதியாகவும் வைப்பதன் மூலமும் பயனியர்கள் படிப்புகளில் தங்கள் சிந்தனையை முழுமையாக ஒருமுகப்படுத்துவதற்கு உதவியிருக்கின்றனர். பள்ளி சுமூகமாக நடைபெறுவதற்கு இடையூறு விளைவிக்காத அளவுக்கு வெளி ஊழியத்துக்கான கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
4 இதற்காக உதவிச்செய்த அனைவரும் இந்த வாய்ப்பை சேவை செய்வதற்கு கிடைத்த ஒரு சிலாக்கியமாக கருதியிருக்கின்றனர் என்பதையும் பயனியர் சேவைப் பள்ளி வெற்றிகரமாக நடந்தேறுவதில் தாங்கள் ஒரு பங்கை கொண்டிருந்தமைக்காக மனமார்ந்த மகிழ்ச்சியை அடைந்திருக்கின்றனர் என்பதையும் நாங்கள் அறிந்திருக்கிறோம்.