“தேவ பக்தி” மாவட்ட மாநாடுகள்
Note: Synchronization will not work because this file has not been made available in the English Watchtower Library]
இந்த ஆண்டு மாவட்ட மாநாட்டிற்கு ஆ. என்னே ஒரு சிறந்த பொருளை நாம் கொண்டிருக்கிறோம்: “தேவ பக்தி”! முதலாவதாக, இந்த ஆவிக்குரிய உணவு உட்கொள்வதை தடைசெய்யக்கூடிய எந்த ஒரு காரியமும் இடையே வராதபடி நிச்சயமாயிருங்கள். நாம் அனைவரும் வெள்ளிக்கிழமை காலை 10-20 மணிக்கு இசை நிகழ்ச்சியை அனுபவித்து மகிழ்வதற்கும் அதைத் தொடர்ந்து வரும் நிகழ்ச்சிகளிலிருந்து முழுமையாக நன்மையடைவதற்கும் தெளிந்த மனதோடு நம்முடைய இருக்கையில் அமர்ந்திருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதற்காக அவசியமான எல்லாத் திட்டங்களைப் பூர்த்திசெய்வதற்கு இதுவே ஏற்ற சமயமாகும்.
2. முதல் நாளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பொருள்: “தனிப்பட்ட பக்தியை வலியுறுத்தும் கடவுளைச் சேவித்தல்.” இது யாத்திராகமம் 20:5-ன் பேரில் சார்ந்துள்ளது. யெகோவா ஏன் தேவ பக்தியை வலியுறுத்துகிறார் என்பதையும் தேவ பக்தியின் இரகசியத்தை கற்றுக்கொள்வது ஏன் அவசியம் என்பதையும் காட்டக்கூடிய பேச்சுகளால் நமக்குத் தெளிவுபடுத்தப்படும்.
3. சனிக்கிழமையின் பொருள்: “தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.” இது 1 தீமோத்தேயு 6:6-ன் பேரில் சார்ந்துள்ளது. “உண்மையும் விவேகமுமுள்ள அடிமைக்கு” உண்மை தவறாதவர்களாய் இருக்க வேண்டிய அவசியம் மனதில் பதியச் செய்யப்படும். மேலும் குடும்ப வட்டாரத்தில் நாம் எவ்வாறு தேவ பக்தியின் செயல்களை வெளிக்காட்டலாம் என்பதையும் கற்றுக்கொள்வோம்.
4. தீத்து 2:12-லிருந்து எடுக்கப்பட்ட “அவபக்தியை வெறுத்து தேவபக்தி உள்ளவர்களாய் ஜீவியுங்கள்.” என்று ஞாயிற்றுக்கிழமையின் பொருளாகும். “அக்கிரமக்காரனுக்கு” எதிராகவும் மேலும் உணவு, பானம், சிகையலங்காரம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றில் வழிவிலகிச் செல்வதற்கு எதிராகவும் எச்சரிக்கும் காலத்துக்கேற்ற போதனை இருக்கும்.
5. ஆகவே, நமது தேவ பக்தி இந்த மாநாட்டுக்கு வரும்படி நம்மை ஊக்குவித்து, அவற்றிலிருந்து பெரும் நன்மையைப் பெற நம்மைத் தூண்டட்டும். மேலும் முழுமையாக தேவ பக்தியுள்ள வாழ்க்கையை நடத்துவதற்கு பலப்படுத்தப்பட்டவர்களாயும் தீர்மானமுள்ளவர்களாயும் நாம் அங்கிருந்து செல்வோமாக.