சந்தாக்களைப் பெறுவதன் மூலம் யாவைத் துதியுங்கள்
1 ஒவ்வொரு புதிய விழித்தெழு! இதழையும் பெறுவது ஆ என்னே ஒரு மகிழ்ச்சி! இந்தச் சிறப்பான இதழ்கள் உலக நிகழ்ச்சிகளை பைபிள் தீர்க்கதரிசனங்களுடன் சம்பந்தப்படுத்திக் காட்டுகையில் நாம் சமீப நிகழ்ச்சிகளை அறிந்தவர்களாய் இருக்கும்படி உதவுகிறது. ஆகவே யெகோவாவைத் துதிப்பதற்கான நமது வாய்ப்புகளை நாம் மேம்பட்ட விதத்தில் மதித்துணரக்கூடும்.—ஆமோஸ் 3:7; எபி. 13:15.
2 இதுவரையில் 1989-ம் ஆண்டு ஆங்கில விழித்தெழு! பத்திரிகைகள் “இந்தப் பூமியைச் சுதந்தரிப்பவர்கள் யார்?” “மதிப்பீடுகளுக்கு என்ன ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது?” மற்றும் “வன்முறை—நீங்கள் என்ன செய்யக்கூடும்?” போன்ற வாசகரை உட்படுத்தும் தலைப்புகளைக் கொண்டிருந்தன. இப்படிப்பட்ட தகவல்கள் காவற்கோபுரம் பத்திரிகைக்கான நமது மதித்துணர்வை விரிவாக்குகிறது. ஏனெனில் இது, நூற்றுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக கடவுளுடைய ராஜ்யமே மனிதவர்க்கத்தின் பிரச்னைகளுக்கு மெய்யான பரிகாரம் என்பதை ஆதரித்து வந்திருக்கிறது. இந்த ஒழுங்குமுறையின் தற்கால நிகழ்ச்சிகள் “கடைசி நாட்களை” எவ்வாறு குறித்துக்காட்டுகின்றன என்பதைக் காண்பதற்கு இவ்விரண்டு இதழ்களும் வாசகர்களை விழிப்பூட்டி வந்திருக்கின்றன. (2 தீமோ. 3:1-5) மெய்யாகவே இந்த ஆண்டின் ஏப்ரல் மற்றும் மே (தமிழில்: ஏப்ரல் முதல் ஜூலை வரை) மாதங்கள், துன்மார்க்க மகா பாபிலோனை தைரியமாக வெளிப்படுத்திக் காட்டிய வரலாற்று புகழ்பெற்ற காவற்கோபுரம் இதழ்களைக் கண்டது.
சந்தாக்கள் ஆவிக்குரிய உணவை அளிக்கின்றன
3 நவம்பர் மாதத்தின்போது நாம் விழித்தெழு! அல்லது காவற்கோபுரம் பத்திரிகைக்கு அல்லது இரண்டிற்குமே சந்தாவை அளிக்கும் சிலாக்கியத்தைக் கொண்டிருப்போம். உங்கள் குடும்ப அங்கத்தினர் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட சந்தா இருக்கிறதா? அப்படியானால் மற்றவர்களும் சந்தா செய்யும்படி சிபாரிசு செய்வதற்குரிய மேம்பட்ட நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள். காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகையின் தொடர்ச்சியான வாசகராக பத்திரிகை ஊழிய நாளில் தனிப்பட்ட பத்திரிகைகளை அளிப்பதில் காட்டும் அதே உற்சாகத்தை சந்தாக்களை அளிப்பதிலும் நீங்கள் காட்டலாம்.
4 ஒருவர் சந்தா எடுக்க விரும்புவாரா என்பதைக் குறித்து நீங்கள் முன்கூட்டியே தீர்மானித்துவிடாதீர்கள். அதற்கு மாறாக, அந்த நபர் உங்களுடைய மனமார்ந்த உற்சாகமான அளிப்பிற்கு பிரதிபலிக்கட்டும். “ஒரு புத்தகத்தை அதன் மேல் அட்டையைப் பார்த்து நியாயந்தீர்க்க முடியாது” என்ற ஒரு கூற்றை சிந்தித்துப் பார்ப்பதன் மூலம் அதிக நம்பிக்கையான ஒரு மனநிலையை வளர்ப்பதற்கு ஒரு சகோதரிக்கு உதவி அளிக்கப்பட்டது. பட்சபாதமில்லாத யெகோவா தேவனைப் போன்றிருக்க அவள் கற்றுக்கொண்டாள். (அப். 10:34) உங்களுடைய வீட்டுக்கு வீடு ஊழியத்தோடுகூட நீங்கள் உங்கள் பைபிள் படிப்பு மாணாக்கரிடம், பத்திரிகை மார்க்கம் கொண்டிருப்பவரிடம், உடன் வேலையாட்களிடம் அயலகத்தாரிடம், உறவினர்களிடம் மேலும் தெரு ஊழியம் செய்கையில் சந்தாக்களை அளித்திருக்கிறீர்களா?
5 சந்தா எடுக்க எங்களிடம் பணம் இல்லை என்று அந்தச் சமயத்தில் சொல்லும் வீட்டுக்காரர்களை அநேகர் கண்டிருக்கின்றனர். வேறு ஏதோ சில காரணங்களுக்காக சந்தா செய்வதற்கு தங்களுக்கு வசதியில்லை என்று அவர்கள் சொல்லக்கூடும். காரியம் அப்படியிருக்குமானால் அந்த நபர் மனமுள்ளவராக இருப்பாரானால் ஆரம்ப சந்திப்பில் அப்போதே சந்தா சீட்டைப் பூர்த்தி செய்துகொள்ளுங்கள். பிறகு நன்கொடைக்காக திரும்ப போய் சந்தியுங்கள். எப்பொழுது வரும்படி ஒத்துக்கொண்டீர்களோ அந்தச் சமயத்தில் திரும்பப் போய் சந்திக்க நிச்சயமாயிருங்கள். இது திருத்தமான வீட்டுக்கு வீடு பதிவுச் சீட்டு வைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
சந்தர்ப்ப சாட்சி கொடுத்தல்
6 நமது சாட்சி கொடுக்கும் வேலைக்கு முக்கியமான வழிமுறை வீட்டுக்கு வீடு ஊழியமாக இருக்கிறபோதிலும் இந்த நாட்களில் சந்தர்ப்ப சாட்சி கூடுதலான முக்கியத்துவத்தை பெற்று வருகிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். வீட்டுக்கு வீடு ஊழியம் செய்கையில் வீட்டில் இல்லாத அநேகரை சந்திப்பதற்கு அது ஒரு தலைச்சிறந்த வழிவகையாக இருக்கிறது. மேலும் உங்கள் உலகப்பிரகாரமான வேலையிலிருக்கும் உடன் வேலையாட்களைப் பற்றியதென்ன? ஒரு சந்தா அளிப்பு மாதத்தின்போது தன் உடன் வேலையாட்களிடம் விவேகமாக சாட்சி கொடுக்க ஒரு சகோதரர் தீர்மானித்தார். அவர் ஆரம்பத்தில் அந்த மாதத்தில் பத்து சந்தா எடுக்க இலக்கு வைத்தார். என்றபோதிலும் அவர் அந்த இலக்கை இரண்டே நாட்களில் அடைந்துவிட்டதைக் குறித்து ஆச்சரியமடைந்தார். அந்த மாதத்தின்போது அவர் 68 சந்தாக்களை அறிக்கை செய்தார், அவருடைய மகிழ்ச்சியைக் கற்பனை செய்துபாருங்கள்!
7 நவம்பர் மாதத்தின்போது வீட்டுக்கு வீடு வேலையிலும் மறுசந்திப்புகளிலும் சந்தர்ப்ப சாட்சி கொடுக்கையிலும் நாம் சந்தாவை அளிக்கக்கூடும். சந்தா மறுக்கப்படுகையில், நாம் ஒருவேளை பின்வருமாறு சொல்லலாம்: “இந்த முறை சந்தா செய்வதற்கு நீங்கள் விரும்பாத போதிலும், நாம் இப்பொழுது கலந்தாலோசித்த இந்த இதழை நீங்கள் வாசித்து மகிழ்வீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்தத் துணைப்பத்திரிகையோடு நாங்கள் இதை ரூ4 நன்கொடைக்கு உங்களிடம் விட்டுச் செல்கிறோம்.” இந்த முறையில் அநேக பத்திரிகைகள் விநியோகிக்கப்படுகின்றன.
8 சங்கீதக்காரன் நம்மை ஊக்குவிப்பதாவது: “யெகோவாவை துதியுங்கள்.” (சங். 147:11) காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளுக்குச் சந்தாக்களை அளிப்பதன் மூலம் நவம்பர் மாதத்தில் நாம் யாவைத் துதிப்பது ஆ, எவ்வளவு பொருத்தமாக இருக்கும்.