சீஷராக்குவதற்கு நமக்கு உதவும் கூட்டங்கள்
நவம்பர் 6-ல் துவங்கும் வாரம்
பாட்டு 1 (42)
10 நிமி: சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளும். இந்த வார கடைசியில் வெளி ஊழியத்தில் கலந்துகொள்ள எல்லாப் பிரஸ்தாபிகளையும் உற்சாகப்படுத்தவும். சந்தாவை அல்லது விழித்தெழு! அல்லது காவற்கோபுரம் தனிப்பட்ட பிரதிகளை அளிக்க பத்திரிகைகளிலிருந்து பயன்படுத்தக்கூடிய பேச்சுக் குறிப்புகளை சிபாரிசு செய்யுங்கள்.
20 நிமி: “சந்தாக்களைப் பெறுவதன் மூலம் யாவைத் துதியுங்கள்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளைப் பயன்படுத்துவதை நடித்துக் காட்டுங்கள். பாரா 5-ல் கொடுக்கப்பட்டிருக்கும் ஆலோசனையை சேர்த்துக்கொள்ளுங்கள்.
15 நிமி: நாம் சந்தாவை எவ்வாறு அளிக்கலாம். சந்தா அளிப்பு செய்வதில் முழு பங்கை கொண்டிருப்பதற்காக அவரவர் புத்தகப்படிப்பு தொகுதிகளில் உள்ள பிரஸ்தாபிகளை தாங்கள் எப்படி உற்சாகப்படுத்துவார்கள் என்பதைப் பற்றி இரண்டு புத்தகப்படிப்பு நடத்துபவர்கள் கலந்தாலோசிக்கிறார்கள். வாழ்க்கையின் பல்வேறு சூழ்நிலைகளில் உள்ள தனிப்பட்ட வாய்ப்புகளைக் குறித்து கலந்தாலோசியுங்கள். உள்ளூர் பிராந்தியங்களில் எவ்வாறு சந்தாக்கள் பெற்றார்கள் என்பதைக் குறித்து சுருக்கமான ஓரிரண்டு அனுபவங்களைச் சொல்லுங்கள்.
பாட்டு 5 (81), முடிவு ஜெபம்.
நவம்பர் 13-ல் துவங்கும் வாரம்
பாட்டு 9 (82)
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. சங்கம் பெற்றுக்கொண்டதாக தெரிவித்திருக்கும் நன்கொடை பற்றி அறிவிக்கவும். உள்ளூர் சபைக்குச் செய்யப்படும் பண ஆதரவுக்காக போற்றுதலை வெளிக்காட்டுங்கள்.
25 நிமி: “முழு நேர ஊழியத்தை உங்கள் வாழ்க்கை பணியாக ஆக்கிக்கொள்ளுங்கள்.” கட்டுரையின் கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. அதைத் தொடர்ந்து முழுநேர ஊழியத்தைத் தங்கள் வாழ்க்கைப் பணியாக ஆக்கிக்கொள்வதற்கு தாங்கள் எப்படி உற்சாகப்படுத்தப்பட்டார்கள் என்பதைத் தெரிவிக்க முழுநேர ஊழியர்களைப் பேட்டி காணவும். என்ன ஆசீர்வதங்களை அனுபவித்து மகிழ்ந்தார்கள்? முழுநேர ஊழியத்தை ஒரு வாழ்க்கை பணியாக மேற்கொள்ள தாங்கள் ஏன் மற்றவர்களை உற்சாகப்படுத்துவார்கள்?
10 நிமி: இதுவரையில் பெற்ற சந்தாக்களின் எண்ணிக்கையையும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனுபவங்களையும் அறிவிக்கவும்.
பாட்டு 17 (2), முடிவு ஜெபம்.
நவம்பர் 20-ல் துவங்கும் வாரம்
பாட்டு 40 (31)
10 நிமி: சபை அறிவிப்புகளும் தேவராஜ்ய செய்திகளும்.
20 நிமி: “நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—பத்திரிகைகளைக் கொண்டு.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. பாரா 5-ஐ கலந்தாலோசித்தப் பின்பு நன்கு தயாரித்த ஒரு பிரஸ்தாபி 30-60 வினாடி பத்திரிகை அளிப்பை செய்யட்டும். ஒவ்வொரு நடிப்பும் வித்தியாசப்பட்ட சூழ்நிலைமைகளை கொண்ட வித்தியாசப்பட்ட வீட்டுக்காரருடன் செய்யப்பட வேண்டும். பிரஸ்தாபி பத்திரிகையிலுள்ளவற்றை நன்றாக அறிந்திருக்கிறார் என்பதையும் வீட்டுக்காரருடைய சூழ்நிலைமைக்குப் பொருந்தக்கூடிய பொருத்தமான குறிப்புகளைத் தக்கவாறு மாற்றி பயன்படுத்துகிறார் என்பதையும் நடித்துக் காட்டவேண்டும்.
15 நிமி: “ஒரே மந்தையாக உறுதியாய் நின்றுகொண்டிருத்தல்” மற்றும் “விசேஷ நடவடிக்கைக்காக பத்திரிகைகளை ஆர்டர் செய்யுங்கள்” ஆகியவற்றை கலந்தாலோசியுங்கள். ஊழியக் கண்காணி இதைக் கையாள வேண்டும்.
பாட்டு 51 (24), முடிவு ஜெபம்.
நவம்பர் 27-ல் துவங்கும் வாரம்
பாட்டு 69 (75)
10 நிமி: சபை அறிவிப்புகள். இந்த வாரக்கடைசியில் ஊழியத்தில் கலந்துகொள்ள எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: “குடும்ப ஒத்துழைப்பு நன்மைகளைக் கொண்டுவருகிறது.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. குடும்பத்தலைவராக இருக்கக்கூடிய ஒரு மூப்பரால் கையாளப்பட வேண்டும்.
15 நிமி: “நீர் எப்பொழுதுமே காலத்தாமதமானவரா?” ஜூன் 8, 1989 ஆங்கில விழித்தெழு! பக். 21-3-ன் பேரில் சார்ந்த பேச்சு. (இந்திய மொழிகளில்: “‘பேச ஒரு காலமுண்டு,’—எப்பொழுது?”, நவம்பர் 1988 காவற்கோபுரம்.)
பாட்டு 73 (71), முடிவு ஜெபம்.
டிசம்பர் 4-ல் துவங்கும் வாரம்
பாட்டு 52 (59)
10 நிமி: சபை அறிவிப்புகள்.
20 நிமி: டிசம்பர் மாதத்தின்போது வார்த்தையைப் பிரசங்கியுங்கள். டிசம்பர் மாதத்தின்போது வெளி ஊழியத்தில் முழுமையான பங்கைக் கொண்டிருப்பதற்கு உற்சாகமூட்டும் பேச்சு. பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பின் மூலமாக யெகோவாவின் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்ட வேத வார்த்தையானது நாம் அனைவரும் படிப்பதற்கும் வாசிப்பதற்கும் மிகத் தெளிவான முறையில் அளிக்கப்பட்டிருக்கிறது. பைபிளோடுகூட நாம் ஒரு பத்திரிகை அளவான புரோஷூரை அளிப்போம். ஒரே கடவுளும் பிதாவுமான யெகோவாவின் சத்தியத்தை உண்மை மனமுள்ள ஆட்கள் கற்றுக்கொள்ளும்படி உதவி செய்வதன் மூலம் நாம் அவர்களை நித்திய ஜீவனுக்குரிய பாதையில் வழிநடத்துகிறவர்களாயிருப்போம். (யோவான் 17:3; 1 கொரி. 8:6) புதிய சம்பாஷணைக்குப் பேச்சுப்பொருளை பயன்படுத்தி உங்களுடைய சபை பிராந்தியத்தில் இந்தப் பிரசுர அளிப்பு எப்படிச் செய்யப்படலாம் என்பதைக் காட்டும் ஓரிரண்டு சுருக்கமான நடிப்புகளை செய்துமுடிக்கவும்.
15 நிமி: சபையின் தேவைகள் அல்லது “ஏன் மனிதருக்கல்ல, ஆனால் கடவுளுக்கே பயப்பட வேண்டும்?” ஆங்கில காவற்கோபுரம் ஜூன் 1, 1989 பக். 4-7-லிருந்து உற்சாகமூட்டும் பேச்சு. (இந்திய மொழிகளில்: “வெற்றிகரமான பெற்றோராயிருப்பது எவ்வாறு?” ஆகஸ்ட் 1989 காவற்கோபுரம்.) கட்டுரையைச் சபையின் தேவைகளுக்கேற்றவாறு பொருத்திக் கொள்ளவும்.
பாட்டு 57 (29), முடிவு ஜெபம்.