அதிகரிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கான ஒரு காலம்
1 இந்தத் தற்போதைய ஒழுங்கு முறையின் முடிவு வெகுவாய் நெருங்கி வருவதையும் மேலும் யெகோவா நமது ஊழியத்தை அதிக நிறைவாய் ஆசீர்வதித்து வருவதையும் நாம் காண்கையில் ‘செயல்படும்படி உங்கள் மனதில் அரையைக் கட்டிக்கொள்ளுங்கள்’ என்ற பேதுருவின் ஆலோசனைக்குச் செவிகொடுப்பது அவசரமானதாக இருக்கிறது.—1 பேதுரு 1:13; ஏசா. 60:22.
2 பேதுரு இந்த அறிவுரையை கொடுத்தபோது இயேசு கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தத்தினாலே நமக்குக் கிடைக்கப்போகும் இரட்சிப்பைக் குறித்து எழுதி கொண்டிருந்தான். தம்முடைய குமாரனை பரிசாக அளித்ததன் மூலமாக யெகோவா வெளிக்காட்டியிருக்கும் அன்பினால் நாம் அடைந்து வரும் நன்மைகளுக்காக நம்முடைய விசுவாசத்தையும் போற்றுதலையும் நடப்பித்துக் காட்டுவதற்கு நமக்கிருக்கும் முக்கியமான வழிகளில் ஒன்று ராஜ்யத்தின் நற்செய்தியை யாவருக்கும் அறிவிப்பதாகும். (யோ. 3:16) கடவுளால் நியமிக்கப்பட்டிருக்கும் இந்த வேலையில் இன்னும் மிக அதிக சுறுசுறுப்பாய் இருப்பதற்குரிய காலம் இந்த ஞாபகார்த்த ஆசரிப்பு காலம்.
ஞாபகார்த்த ஆசரிப்பு
3 ஞாபகார்த்த ஆசரிப்பு இந்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி சூரிய அஸ்தமனத்திற்கு பின்பு நடைபெறும். இந்த விசேஷ நிகழ்ச்சியை முன்னிட்டு யெகோவா தேவனுடனுள்ள நமது உறவையும் இயேசு கிறிஸ்துவின் தியாக பலியை எந்தளவு நாம் நினைவுகூருகிறோம் என்பதைக் குறித்து பரிசீலனை செய்து பார்ப்போமாக. நம்முடைய சிந்தனை, பேச்சு, நடத்தை ஆகியவற்றில் யெகோவா தேவனுடைய நீதியான தராதரங்களை அனுதினமும் உறுதியாக கடைப்பிடிப்பதன் மூலம் நம்முடைய விசுவாசத்தை நாம் நடப்பித்துக் காட்டுகிறோமா? ராஜ்யத்தைக் குறித்து பிரசங்கித்து சீஷராக்குவதற்கு பிரயாசப்படுவதன் மூலம் மற்றவர்கள் மீது அன்பு காட்டுகிறோமா? ஒவ்வொரு ஆண்டும் ஞாபகார்த்த ஆசரிப்பின்போது யெகோவாவும் இயேசு கிறிஸ்துவும் நமக்காக செய்திருப்பவற்றை விசேஷித்த முறையில் நாம் நினைவுகூருகிறோம். (லூக். 22:19; 1 கொரி. 11:23, 24) இப்படிப்பட்ட ஆழ்ந்த சிந்தனைக்குரிய நினைவுகூருதல் நம்முடைய தனிப்பட்ட திறமைகள் மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலைமைகளுக்கு ஏற்ப நேர்நிலையான செயல்களைச் செய்யும்படி நம்மை உந்துவிக்க வேண்டும்.
4 மார்ச் 25-ம் தேதியின்போது உலக முழுவதிலுமுள்ள பெரும்பாலான யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகள் “மெய்யான வாழ்க்கையை அடைய முயற்சிசெய்யுங்கள்!” என்ற தலைப்பில் ஒரு விசேஷ சொற்பொழிவை அளித்தனர். புதியவர்கள் சபையுடன் கூட்டுறவுகொள்ள துவங்குவதற்கு இது என்னே ஒரு சிறந்த வாய்ப்பு! விசேஷ பொதுப்பேச்சுக்கு வருகை தந்த ஆட்கள் யெகோவாவின் ஜனங்களோடு தங்களுடைய கூட்டுறவை மேலும் தொடருவதற்கு உற்சாகப்படுத்தப்பட வேண்டும்.
தனிச்சிறப்பு பத்திரிகைகளின் விநியோகிப்பை அதிகரியுங்கள்
5 காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகள் நமது பொது ஊழியத்தில் மிக முக்கியமான பாகத்தை வகிக்கின்றன. அதே சமயத்தில் ஆவிக்குரிய உணவையும் நம்மெல்லாருக்கும் காலத்துக்கேற்ற வாசிப்பு தகவலையும் அளிக்கிறது. மே மற்றும் ஜூன் காவற்கோபுரம் பத்திரிகைகளை ஆயத்தம் செய்வதற்காக செலவிடப்பட்டிருக்கும் அந்த விசேஷ பிரயாசைகளை எல்லா ராஜ்ய பிரஸ்தாபிகளும் போற்றுவார்கள். சந்தாக்களை அளிக்கும்போது நாம் இந்த இதழ்களை மேன்மைப்படுத்திக் காட்டுவோம். அதைப் பெற்றுக்கொண்ட உடனே ஒவ்வொரு இதழம் என்ன சொல்லுகிறதென்பதை முழுமையாக தெரிந்துகொள்ள முயற்சி எடுங்கள். அப்பொழுது சந்தாக்களை அளிக்கையில் மற்றும் சந்தா எடுக்காதவரிடம் தனிப்பட்ட பிரதிகளை அல்லது ஒரு புரோஷுருடன் சேர்த்து இரண்டு பத்திரிகைகளை வெளி ஊழியத்தில் அளிக்கையில் இது உங்களுடைய வைராக்கியத்தைத் தூண்டி எழுப்பும்.
6 மே, ஜூன் மாதங்களின்போது துணைப் பயனியர் சேவை செய்வதற்காக உங்களுடைய தனிப்பட்ட அட்டவணையில் நீங்கள் வழி வகுக்கக்கூடுமா? ஒரே சமயத்தில் சபையிலுள்ள அநேக பிரஸ்தாபிகள் பயனியர் செய்வதற்கு எற்பாடுகள் செய்யும்போது அதிகரிக்கப்பட்ட நடவடிக்கைக்கான இந்த விசேஷ காலப்பகுதியின்போது அவர்கள் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தலாம். எங்கே அவசியமோ அங்கே தொகுதி ஊழியத்துக்குக் கூடுதலான ஏற்பாடுகளைச் செய்வதன் மூலம் உதவியளிப்பதற்கு மூப்பர்கள் பிரியப்படுவார்கள்.
7 உங்களுடைய சொந்த சூழ்நிலைமையைக் குறித்து, அதாவது குடும்ப உத்தரவாதம், சரீர ஆரோக்கியம், உலகப்பிரகாரமான தொழில் அல்லது பள்ளி அட்டவணை பொறுப்புணர்ச்சியோடு சிந்தித்துப் பாருங்கள். இந்த முறை உங்களால் பயனியர் செய்ய முடியாவிட்டால் வெளி ஊழியத்தில் உங்களுடைய பங்கை நீங்கள் எந்தளவுக்கு அதிகரிக்க முடியும்? யெகோவா தேவன் தமக்காகவும் தம்முடைய குமாரன் இயேசுவின் விலையேறப்பெற்ற வெகுமதிக்காகவும் நமது அன்பையும் போற்றுதலையும் வெளிகாட்டுவதற்கு நாம் செய்யும் முழு ஆத்துமாவோடுக்கூடிய சேவையில் யெகோவா நிச்சயமாகவே பிரியங்கொள்கிறார். கடவுளுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் நாம் நம்மை பரிசோதித்துப் பார்த்து செயல்படுவதற்காக நாம் நமது மனதின் அரையைக் கட்டிக் கொள்வோமானால், துதியின் பலிகளை ஏற்க தகுந்த விதத்தில் யெகோவாவுக்குச் செலுத்துவதில் நம்மை பேணிக் காப்பதற்கு யெகோவாவின் ஆவி நம்முடனிருக்கும் என்பதில் நாம் திடநம்பிக்கையோடிருக்கலாம்.—எபி. 13:15.