தேவராஜ்ய செய்திகள்
கானா: இத்தேசத்தில் நம்முடைய வேலையின் பேரில் இருந்த தடை உத்தரவு இப்பொழுது நீக்கப்பட்டுவிட்டது. இது சகோதரர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொண்டு வந்திருக்கிறது, அவர்களுடைய ராஜ்ய மன்றங்கள் மறுபடியும் திறக்கப்பட்டிருக்கின்றன. தற்போது உள்ள சட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கு விண்ணப்பிப்பதற்காக அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
லைபீரியா: உள்நாட்டுப் போரின் காரணமாக அநேக மாதங்களாக மூடப்பட்டிருந்த லைபீரியா கிளைக்காரியாலயம் இப்போது திறக்கப்பட்டிருக்கிறது. கிளைக்காரியாலயத்தில் சேவை செய்வதற்கு நான்கு மிஷனரிகள் இப்போது திரும்பி வந்திருக்கின்றனர். சகோதரர்கள் தாராளமாக ஒன்றுகூடி கூட்டுறவு கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றனர்.