அக்டோபர் மாத ஊழியக் கூட்டங்கள்
அக்டோபர் 12-ல் துவங்கும் வாரம்
பாட்டு 84 (30)
15 நிமி: சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியம் பிரதியிலிருந்து பொருத்தமான அறிவிப்புகளும். “அக்கறையை மறுபடியும் தூண்டிவிடமுடியுமா?” என்ற கட்டுரையை கலந்தாலோசித்து, எவ்வாறு அப்படிப்பட்ட ஒரு சந்திப்பை செய்வது என்பதை சுருக்கமாக நடித்துக்காட்டுங்கள்.
15 நிமி: “சிருஷ்டிப்பின் தேவனை துதித்தல்.” கட்டுரையை கேள்வி பதில் மூலமாக சிந்தியுங்கள். முன்மாதிரியாயிருக்கும் இளைஞர் பாரா 4-ல் கொடுக்கப்பட்டுள்ள பிரசுரங்களை பயன்படுத்தி அனுபவங்களைக் கூறுவதற்கு முன்கூட்டியே ஏற்பாடு செய்யுங்கள், மேலும் மற்றொரு பிரஸ்தாபி பாரா 5-ல் குறிப்பிடப்பட்டுள்ள அனுபவத்தை கூறலாம். இந்த மதிப்புள்ள பிரசுரத்தை அளிப்பதில் பகுத்துணர்வை பயன்படுத்துவதற்கு அவசியமிருப்பதை வலியுறுத்திக் காட்டுங்கள்.
15 நிமி: “அக்கறையைத் தூண்டும் அளிப்புகள்.” உங்களுடைய உள்ளூர் பிராந்தியத்தில், கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை எப்படி பொருத்தலாம் என்பதை சபையாரோடு கலந்துபேசுங்கள். நடைமுறையான, நன்கு தயாரிக்கப்பட்ட இரண்டு அல்லது மூன்று நடிப்புகளை ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 96 (72), முடிவு ஜெபம்.
அக்டோபர் 19-ல் துவங்கும் வாரம்
பாட்டு 79 (50)
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையும் சங்கம் நன்கொடைக்கு நன்றிதெரிவித்து அனுப்பிய கடிதத்தையும் வாசித்துக் காட்டுங்கள். உள்ளூர் தேவைகளுக்கும் சங்கத்தின் உலகளாவிய வேலைக்கும் அளிக்கப்படும் தாராளமான ஆதரவுக்கு சபையை பாராட்டுங்கள். நேரம் அனுமதிக்குமானால், படைப்பு புத்தகத்தை அளிப்பதன் சம்பந்தமாக உள்ள தயாரிக்கப்பட்ட அனுபவங்களை கேளுங்கள்.
20 நிமி: “இரத்தமேற்றுதலிலிருந்து உங்கள் பிள்ளைகளைப் பாதுகாத்தல்.” பாராக்கள் 1-11-ன்பேரில் மூப்பர் பேச்சு கொடுக்கிறார். பாராக்கள் 5-7-ல் சொல்லப்பட்டுள்ள சூழ்நிலைமைகளின்கீழ் ஒரு மருத்துவர், தங்கள் பிள்ளைக்கு சிகிச்சையளிக்க பெற்றோர் ஒப்புக்கொள்வது, அவர்கள் விட்டுக்கொடுக்க மனமுள்ளவராயிருப்பதாக கருதப்பட வேண்டியதில்லை என்ற முடிவுக்குப் பின்னாலிருக்கும் நியாயத்தைத் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள்.
15 நிமி: “திரும்பவும் சென்று சந்திக்க நிச்சயமாயிருங்கள்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. பாரா 6-ல் சிந்திக்கப்பட்டுள்ள விஷயத்தை பயன்படுத்தி நன்கு தயாரிக்கப்பட்ட நடிப்பை கொண்டிருங்கள். அந்த மாதத்தில் முன்பு சந்தித்த அக்கறையுள்ள ஆட்களை திரும்பவும் சென்று சந்திப்பதன் அவசியத்தை முக்கியப்படுத்திக் காட்டுங்கள்.
பாட்டு 10 (18), முடிவு ஜெபம்.
அக்டோபர் 26-ல் துவங்கும் வாரம்
பாட்டு 125 (44)
5 நிமி: சபை அறிவிப்புகள். சுருக்கமான உள்ளூர் வெளி ஊழிய அனுபவத்தை கூறவும் அல்லது வெளி ஊழியத்தில் இவ்வாரம் பயன்படுத்தக்கூடிய பேச்சுக் குறிப்புகளை குறிப்பிடவும்.
15 நிமி: “இரத்தமேற்றுதலிலிருந்து உங்கள் பிள்ளைகளைப் பாதுகாத்தல்.” பாராக்கள் 12-28 கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. பாராக்கள் 12 மற்றும் 20-ல் உள்ள கேள்விகளின்பேரில் வரும் விடைகளை முக்கியப்படுத்திக் காட்டுங்கள். பெற்றோர் தங்கள் பிள்ளைக்கு மருத்துவ சிகிச்சையளிக்க முன்கூட்டியே தயார் செய்வது இரத்தமேற்றுதலை தவிர்ப்பதற்கு எப்போதும் திறவுகோலாயிருக்கிறது என்பதை வலியுறுத்திக் காட்டுங்கள்.
15 நிமி: “ஆண்கள் தகுதிபெற நாடி தகுதிபெறுவதற்கு உதவுதல்.” கேள்விகளும் பதில்களும். உள்ளூர் சபையிலுள்ள சகோதரர்கள் பொறுப்புகளை ஏற்பதற்கு தகுதிபெறுமளவுக்கு முன்னேற நடைமுறையான வழிகளை எடுத்துக்காட்டுங்கள்.
10 நிமி: சபையின் நடவடிக்கையை விமர்சியுங்கள். நடத்தும் கண்காணியும் ஊழியக் கண்காணியும் சேர்ந்து செப்டம்பரில் சங்கத்துக்கு அனுப்பிய சபை அனாலிசிஸ் அறிக்கையில் (S-10) முன்பக்கத்திலுள்ள எண்களை பயன்படுத்தி கடந்த வருடத்தில் செய்யப்பட்ட சபையின் நடவடிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை கலந்து பேசுகின்றனர். ஊழியத்தில் பிரஸ்தாபிகளும் பயனியர்களும் செய்திருக்கும் அவர்களுடைய சுய-தியாக முயற்சிகளுக்காகவும் கூட்டத்துக்கும் ஆஜராவதில் அவர்கள் காட்டியிருக்கும் உண்மைத்தன்மைக்காகவும் அனலாக பாராட்டுங்கள். எந்தெந்த அம்சங்களில் அவர்கள் முன்னேறியிருக்கிறார்கள் என்பதை குறிப்பாக சொல்லுங்கள். கோப்பில் கடந்த வருடங்களின் அறிக்கைகள் இருந்தால், அப்போது செய்திருக்கும் நடவடிக்கையோடு ஒப்பிட்டுப் பாருங்கள். மேலும், 1993 ஊழிய வருடத்தின்போது எந்தெந்த அம்சங்களில் முன்னேற்றம் செய்யப்படலாம் என்பதை குறிப்பிட்டுக் காட்டுங்கள்.
பாட்டு 43 (11), முடிவு ஜெபம்.
நவம்பர் 2-ல் துவங்கும் வாரம்
பாட்டு 51 (24)
15 நிமி: சபை அறிவிப்புகள். தேவராஜ்ய செய்திகள். வெளி ஊழியத்தில் உபயோகிப்பதற்கு எந்தப் பத்திரிகைகள் இருக்கின்றன என்பதை அறிவித்து, உள்ளூர் பிராந்தியத்தின் கவனத்தை ஈர்க்கும் ஓரிரண்டு பேச்சுக் குறிப்புகளை குறிப்பிட்டுக் காட்டுங்கள். பிற்பக்கத்தின் மேலே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் இருப்பது போன்ற ஒரு வேதப்பூர்வமான பிரசங்கத்தை உபயோகித்து சமீபத்திய பத்திரிகைகளை எவ்வாறு அளிக்கலாம் என்பதை நடித்துக்காட்டுங்கள்.
15 நிமி: “முழுக்காட்டுதல்.” நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், பக்கங்கள் 54-8. “சொற்பொருள் விளக்க”த்தின்பேரில் அறிமுக பேச்சு. முழுக்காட்டுதல் எடுப்பதற்கு தயங்கிய ஒருவரோடு மூப்பர் பேசுவதுபோல நடித்துக் காட்டுங்கள். பக்கம் 54-ல் உள்ள தகவலை முக்கியப்படுத்திக் காட்டவும். ஒப்புக்கொடுத்து அதை தண்ணீர் முழுக்காட்டுதலினால் அடையாளப்படுத்திக் காட்டுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் காட்டுங்கள். பரிசுத்த ஆவியால் முழுக்காட்டப்படுதல், மரித்தோருக்கான முழுக்காட்டுதல், அக்கினியில் முழுக்காட்டப்படுதல் என்கிற தகவல்களை சுருக்கமாக சிந்தித்து தன் பேச்சை பேச்சாளர் முடிக்கிறார்.
15 நிமி: நவம்பரின்போது பத்திரிகைகளை அளியுங்கள். விழித்தெழு! மற்றும் காவற்கோபுரம் நற்பயனை முக்கியப்படுத்திக் காட்டும் சுருக்கமான பேச்சு. பிரஸ்தாபிகள் புதிய இதழ்களை உடனே வாசிப்பதன் மூலம் மற்றவர்களிடத்தில் அவற்றை சிபாரிசு செய்யும்போதும் சந்தாக்களை அளிக்கும்போதும் அவர்கள் உற்சாகத்தோடு பேசி அளிக்கலாம். பிரஸ்தாபி பத்திரிகையை அளித்து அடுத்த இதழோடு திரும்பி செல்ல ஏற்பாடுசெய்வதன் மூலம் எவ்வாறு ஒரு பத்திரிகை ரஸ்தாவை துவங்கலாம் என்பதை நடித்துக்காட்டுங்கள்.
பாட்டு 48 (28), முடிவு ஜெபம்.