நம்முடைய பிரசுரங்களை நீங்கள் மதிக்கிறீர்களா?
1 வைரங்களும் மற்ற நவரத்தினக்கற்களும் அவற்றின் அழகினால் மட்டுமல்லாமல் அவற்றைக் கண்டடைவதற்கும் சுரங்கத்திலிருந்து எடுப்பதற்குமான அதிக விலை காரணமாகவும் அவை மதிப்புமிக்கவையாய் இருக்கின்றன. யெகோவாவையும் இயேசு கிறிஸ்துவையும்பற்றிய அறிவு அதைவிட மேம்பட்ட மதிப்புடையது; அதோடு நம்முடைய பிரசுரங்கள் மட்டுமே இந்த உலகிலேயே இந்த ஆவிக்குரிய செல்வங்களை ஆழமாகவும் தெய்வீக ஞானத்தோடும் விவரிக்கின்றன. (ரோ. 11:33; பிலிப். 3:8) நம்முடைய பிரசுரங்களுக்கு உண்மையான மதித்துணர்தலை நாம் எவ்வாறு காண்பிக்க முடியும்?
2 பல தனி நபர்களும் குடும்ப தொகுதிகளும், ராஜ்ய மன்றங்களுக்கு எடுத்துச்சென்று அங்குள்ள நன்கொடை பெட்டிகள் ஒன்றில் போடுவதற்கு ஒழுங்காக ஒரு நன்கொடை தொகையை ஒதுக்கி வைக்கிறார்கள். அதை உற்பத்தி செய்வதற்காக ஆன மொத்த செலவில் ஒரு சிறிதளவையும் உட்படுத்தாத ஒரு நன்கொடைக்கே நம்முடைய பிரசுரங்கள் பொதுமக்களுக்கு அளிக்கப்படுகின்றன. இவ்வாறு, ராஜ்ய வேலைக்காக தனி நபர்களும் சபைகளும் சங்கத்திற்கு நன்கொடைகள் அளிக்கும்போது, அது அதிக பிரசுரங்களை உற்பத்தி செய்வதற்கு உதவுகிறது.
3 நம்முடைய மதிப்புள்ள பிரசுரங்களுக்கு மதித்துணர்தல் காண்பிப்பதற்கு மற்றொரு வழி, அவற்றைப் பெற்றவுடன் வாசிப்பதும் படிப்பதுமாகும். ஒரு வருங்கால தேதிக்காக ஒத்தி வைக்காமல் உடனடியாக பங்கெடுக்கவேண்டிய உயிரளிக்கும் ஆவிக்குரிய உணவை நம்முடைய புத்தகங்களும் பத்திரிகைகளும் கொண்டிருக்கின்றன. காவற்கோபுரம் பத்திரிகை சபை கூட்டத்தில் படிக்கப்படவேண்டிய நேரம் வரையாக காத்திருப்பதற்கு மாறாக, முடிந்தளவு சீக்கிரத்தில் வாசிப்பதற்கு முயற்சி எடுக்கலாம். பிரசுரங்களை நன்கறிந்து வைத்திருப்பதால், வீட்டுக்காரருக்கு அவற்றை அளிப்பதற்கு நாம் நன்கு ஆயத்தமுள்ளவர்களாய் இருப்போம். உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரர் மூலமாக யெகோவா கொடுக்கும் பிரசுரங்களுக்கு மதித்துணர்தல் காண்பிக்கும் மூன்றாவது வழி என்னவென்றால் அவற்றை நம்முடைய வீடுகளில் சரியான விதத்தில் சேர்த்துவைத்துப் பத்திரமாக நம்முடைய பிராந்தியத்திற்கு எடுத்துச்செல்வதாகும். (மத். 24:45) வீட்டில் நம்முடைய பிரசுரங்களை நேர்த்தியாகவும், ஒருவேளை ஒரு மூடப்பட்ட அலமாரியில் அல்லது ஓர் ஈரப்பசையற்ற உலர்ந்த இடத்திலாவது வைக்கிறோமா? பிரசுரங்களையும் பத்திரிகைகளையும் பையினுள் வைக்கும்போது அல்லது வெளியே எடுக்கும்போது, கிழித்துவிடாமல் அல்லது அழுக்காக்காமல் இருப்பதில் கவனமுள்ளவர்களாய் இருப்பதன் மூலம் ஊழியத்திற்கு நம்முடைய பைகளைத் தயாரிக்கும்போது ஜாக்கிரதையாய் இருக்கிறோமா? அவ்வாறு செய்தல் நாம் எப்போதும் நேர்த்தியான, சுத்தமான பிரசுரங்களை வைத்திருக்க உதவி செய்து, அதன் மூலமாக, யெகோவாவின் ஊழியர்களாக நம்மை நல்லவிதத்தில் அறிமுகப்படுத்த முடியும்.
4 ராஜ்ய மன்றத்தில் அல்லது நம்முடைய வீட்டில் புத்தக நிலையடுக்கொன்றிலேயே வைக்கப்பட்ட பிரசுரங்கள், அவற்றின் நோக்கத்தை நிறைவேற்றுவதில்லை, மேலும் அவற்றின் மதிப்பு உணரப்படுவதில்லை. பத்திரிகைகள், புரொஷூர்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுபிரதிகள் ஆகியவற்றின் பழைய பதிப்புகள்கூட நன்கு பயன்படுத்தப்பட வேண்டும். ஏற்கனவே நம் கையிருப்பிலுள்ள பிரசுர அளவின் விவரப்பட்டியலைக் கடைசியாக எப்பொழுது எடுத்தீர்கள்? எவ்வளவு சேர்ந்திருக்கிறது என்பதைக் காண நாம் ஆச்சரியப்படக்கூடும். நாம் வைத்திருக்கும் பிரசுரங்கள் இன்னும் நல்ல நிலையில்—நாட்பட்டதால் மஞ்சள் நிறமடையாமல், கிழியாமல் அல்லது அழுக்கடையாமல் இருக்கிறதா? அப்படியானால், இவற்றை வெளி ஊழியத்தில் விநியோகிப்பதற்கு எல்லா முயற்சியையும் எடுக்கவேண்டும். பழுதடைந்த பிரசுரங்களைச் சொந்த உபயோகத்திற்காக வைத்துக்கொள்ளவோ தக்கவிதத்தில் கழித்துவிடவோ செய்யலாம். மாதத்துக்குரிய பிரசுர அளிப்பில் நாம் முக்கியமான கவனம் செலுத்தினாலும், சில நேரங்களில் மற்றொரு பிரசுரத்தைப் பயன்படுத்த நாம் தீர்மானிக்கலாம்.
5 விநியோகிப்பிற்குப் பயன்படுமுறையில் உண்மையில் எவ்வளவு பிரசுரங்கள் உங்களுக்குத் தேவை என்பதுபற்றி எப்போதும் முக்கிய கவனம் செலுத்துங்கள். நல்ல மதிப்பீடு அவசியமாயிருக்கிறது. குறிப்பாக நீங்கள் பயனியர் வேலை செய்கிறீர்களென்றால் போதிய அளவு தேவை இருந்தாலும், அதிகளவான பிரசுரங்களைக் கையிருப்பில் வைத்திருப்பது அவசியமில்லை, ஏனென்றால் ராஜ்ய மன்றத்தில் கூட்டத்திற்கு முன்னரும் பின்னரும் அதிகமான பிரசுரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். மாதத்தைத் துவங்குவதற்குப் போதிய அளவு பிரசுரங்களுடன் உங்களைத் தயார் செய்துகொண்டு, அவை தீர்ந்துவிட்டபின் அதிகத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
6 கடவுளுடைய சத்திய வார்த்தையை மதித்துணரும் மக்களின் கைகளில் நம்முடைய பிரசுரங்கள் அளிக்கப்படும்போது அவை அதிக விலைமதிப்புள்ளவையாய் இருக்கின்றன. கொடுக்கப்பட்டிருப்பவற்றை பயன்படுத்துவதில் ஞானமாகவும் விவேகமாகவும் இருப்பதன்மூலம் நாம் நம்முடைய பிரசுரங்களை எவ்வளவு உயர்வாக மதிக்கிறோம் என்பதைக் காண்பிப்போமாக.