உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 10/93 பக். 2
  • அக்டோபர் ஊழியக் கூட்டங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அக்டோபர் ஊழியக் கூட்டங்கள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1993
  • துணை தலைப்புகள்
  • அக்டோபர் 4-ல் துவங்கும் வாரம்
  • அக்டோபர் 11-ல் துவங்கும் வாரம்
  • அக்டோபர் 18-ல் துவங்கும் வாரம்
  • அக்டோபர் 25-ல் துவங்கும் வாரம்
நம் ராஜ்ய ஊழியம்—1993
km 10/93 பக். 2

அக்டோபர் ஊழியக் கூட்டங்கள்

அக்டோபர் 4-ல் துவங்கும் வாரம்

பாட்டு 225 (21)

10 நிமி:சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளும். தற்போதைய பத்திரிகைகளை உள்ளூர் பிராந்தியத்தில் பயன்படுத்தக்கூடிய முறைகளைச் சொல்லுங்கள். பத்திரிகை கொடுக்கப்பட்ட அனைவரையும் பத்திரிகை மார்க்கங்களை ஆரம்பிக்கும் நோக்கத்தோடு மீண்டும் சந்திப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திக்காட்டுங்கள். வீட்டுக்காரர்கள் உண்மையான அக்கறையுடையோராக நிரூபிக்கும்போது, சந்தாக்கள் அளிக்கப்படலாம்.

15 நிமி:“நீங்கள் உங்களுடைய வணக்க இடத்தை மதிக்கிறீர்களா?” ஜூன் 15, 1993, காவற்கோபுரம் கட்டுரையின் அடிப்படையிலான மூப்பரின் பேச்சு. உள்ளூர் சூழ்நிலைமைகளுக்குத் தகவலைப் பொருத்துங்கள். ஒரு குறிப்பிட்ட பிரச்னையைப் பேசவேண்டுமாகில், பொருத்தமான ஆலோசனைகளைச் சாதுரியமாகக் கொடுங்கள்.

20 நிமி:அக்டோபரில் உங்களுடைய வீட்டுக்கு-வீடு ஊழியத்தைத் தீவிரமாக்குங்கள். ஊழியக் கண்காணி அல்லது தகுதிவாய்ந்த மற்றொரு சகோதரர் வீட்டுக்கு-வீடு ஊழியத்தின் முக்கியத்துவத்தை சபையாரோடு கலந்தாலோசிக்கிறார். அக்டோபருக்கான பல்வேறு வகை பிரசுர அளிப்புகள் அதிகமான பலதரப்பட்ட பிரசங்கங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. நடித்துக்காட்டுங்கள்: (1) பிரஸ்தாபி தற்போதைய விழித்தெழு! அல்லது காவற்கோபுரத்திலுள்ள கட்டுரைக்கு வழிநடத்தக்கூடிய சம்பாஷணையை ஆரம்பிக்கிறார். வீட்டுக்காரர் காண்பித்த அக்கறையைப் பொருத்து, பிரஸ்தாபி புதிய பத்திரிகைகளை அல்லது அந்த நபருக்கு ஒரு துண்டுப்பிரதியை அளிக்கலாம். (2) கடவுளுக்காக மனிதவர்க்கத்தின் தேடுதல் புத்தகத்துக்கு வழிநடத்துகிற எண்ணத்துடன் பிரஸ்தாபி சம்பாஷணையை ஆரம்பிக்கிறார். சூழ்நிலைமைகளுக்கேற்றவாறு, பிரஸ்தாபி புத்தகத்தை அளிப்பதற்கோ இரண்டு பத்திரிகைகளை அளிப்பதற்கோ தீர்மானிக்கலாம். (3) சந்தர்ப்ப உரையாடலை ஆரம்பிப்பதற்குப் பிரஸ்தாபி ஒரு துண்டுப்பிரதியைப் பயன்படுத்துகிறார்; பிறகு தற்போதைய பத்திரிகைகளை அக்கறையுள்ள அந்த நபருக்கு அளிக்கிறார். (4) பத்திரிகை-மார்க்கம் சந்திப்பைச் செய்கிற பிரஸ்தாபி சந்தாவை அளிக்கத் தீர்மானிக்கிறார். இப்படி பத்திரிகை மார்க்கத்திலிருந்து சந்தாவிற்கு மாற்றிக்கொள்ளக்கூடிய திறமையானது தங்களுடைய வீட்டுக்கு வீடு ஊழியத்தை அக்டோபரில் தீவிரமாக்குவதற்கு எல்லா பிரஸ்தாபிகளையும் உற்சாகப்படுத்த வேண்டும். இந்த மாதத்தில் சபையிலுள்ள சிலர் துணைப்பயனியர்களாக சேவை செய்துகொண்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவ்விதமாகச் செய்யும் நிலையிலுள்ள மற்றவர்கள் இப்பொழுதுங்கூட துணைப்பயனியர் ஊழியத்தில் சேர்ந்துகொள்ளலாம்.

பாட்டு 42 (18), முடிவு ஜெபம்.

அக்டோபர் 11-ல் துவங்கும் வாரம்

பாட்டு 4 (19)

10 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. நன்கொடை ஒப்புகைகளை வாசித்து, உலகளாவிய வேலைக்காகவும் உள்ளூர் சபையின் பொருளாதார தேவைகளைக் கவனிப்பதற்காவும் அளித்த தயாள ஆதரவுக்காகச் சபையாரைப் பாராட்டுங்கள். அந்த வாரத்திற்கான வெளி ஊழிய ஏற்பாடுகளைச் சுருக்கமாக மறுபரிசீலனைசெய்து, பிரஸ்தாபிகளின் வைராக்கியமான ஆதரவுக்காக போற்றுதலைத் தெரிவியுங்கள்.

15 நிமி:“நம்முடைய பத்திரிகைகளை வீடு வீடாக பயன்படுத்துதல்.” சபையாரோடு கலந்தாலோசியுங்கள். வெளி ஊழியத்தில் நாம் சந்திக்கிற மக்களுக்கும் சந்தர்ப்ப சாட்சி கொடுக்கப்படுகிறவர்களுக்கும் பத்திரிகைகளை அளிப்பதற்கு ஆர்வமுள்ளவர்களாய் இருப்பதற்கு நமக்கு நல்ல காரணம் இருக்கிறது. பத்திரிகைகள் தேதியிடப்பட்டிருந்தாலும், பத்திரிகை தினத்தில் புதிய பத்திரிகைகளை முக்கியப்படுத்திக் காட்டவேண்டியிருந்தாலும், சந்தர்ப்பம் தேவைப்படுத்தும்போது பழைய பத்திரிகைகளை அளிக்க நாம் தயங்கவேண்டியதில்லை. நீங்கள் அளிக்கும் பத்திரிகைகள் சுத்தமாகவும் சேதமடையாமலும் இருப்பதைக்குறித்து நிச்சயமாயிருங்கள். பாரா 4-ல் கொடுக்கப்பட்டுள்ள அளிப்பைத் தகுதிவாய்ந்த பிரஸ்தாபியை நடித்துக்காட்டச் சொல்லுங்கள்.

20 நிமி:“உங்களுடைய பிள்ளைகள் பிரஸ்தாபிகளா?” கேள்வி பதில்மூலம் கட்டுரையைச் சிந்தித்தல். நேரம் அனுமதிக்கிறபடி, பாராக்களையும் இடக்குறிப்புக் கொடுக்கப்பட்டுள்ள வசனங்களையும் வாசியுங்கள். பெற்றோர் தங்களுடைய பிள்ளைகள் பிரஸ்தாபிகளாக இருப்பதற்கு எவ்வாறு பயிற்றுவிக்கிறார்கள் என்பதைக்குறித்து அவர்கள் சுருக்கமான குறிப்புகள் சொல்ல அனுமதியுங்கள்.

பாட்டு 157 (73), முடிவு ஜெபம்.

அக்டோபர் 18-ல் துவங்கும் வாரம்

பாட்டு 65 (36)

5 நிமி:சபை அறிவிப்புகள். தேவராஜ்ய செய்திகள்.

15 நிமி:“பட்சபாதமற்ற தன்மையை நம்முடைய ஊழியத்தில் காண்பித்தல்.” கேள்விகளும் பதில்களும். உள்ளூர் பிராந்தியத்திற்குக் குறிப்பாக அக்கறையுடையதாய் இருக்கிற இந்தப் பொருளின் அம்சங்களைச் சிறப்பித்துக் காட்டுங்கள்.

15 நிமி:“அக்கறை காண்பித்தவர்களுக்குக் கவனஞ்செலுத்துங்கள்.” சபையாரிடமாகச் சில கேள்விகள் கேட்பதுடன்கூடிய பேச்சு. பிரஸ்தாபிகள் எவ்வாறு உள்ளூர் பிராந்தியத்தில் அக்கறையை வளர்த்திருக்கிறார்கள் என்பதை நடித்துக்காட்டுங்கள், அல்லது விழித்தெழு! மற்றும் காவற்கோபுரத்தின் தனிப்பட்ட பிரதிகளை ஏற்றுக்கொண்டிருக்கிறவர்களை மீண்டும் சந்திப்பதன் மதிப்பைக் காட்டுகிற சமீபத்திய அனுபவத்தை பிரஸ்தாபி விவரிக்கும்படி சொல்லுங்கள்.

10 நிமி:சபையின் தேவைகள் அல்லது ஜூலை 1, 1993, காவற்கோபுரம் வெளியீட்டிலுள்ள முதல் கட்டுரையின் அடிப்படையிலான “பூர்வ கிறிஸ்தவர்களும் உலகமும்” என்பதன்பேரில் கிளர்ச்சியூட்டும் பேச்சு. பூர்வ கிறிஸ்தவர்களின் முன்மாதிரியை இன்று நாம் பின்பற்றவேண்டியதன் அவசியத்தை சிறப்பித்துக் காட்டுங்கள்.

பாட்டு 60 (40), முடிவு ஜெபம்.

அக்டோபர் 25-ல் துவங்கும் வாரம்

பாட்டு 75 (22)

10 நிமி:சபை அறிவிப்புகள். வாரத்திற்கான வெளி ஊழிய ஏற்பாடுகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள், மேலும் வரவிருக்கிற நாட்களில் வெளி ஊழியத்தில் பிரஸ்தாபிகள் பயன்படுத்தக்கூடிய தற்போதைய பத்திரிகைகளிலுள்ள குறிப்புகளுக்குக் கவனத்தைத் திருப்புங்கள். நேரம் அனுமதிக்குமானால், உள்ளூர் பிராந்தியத்திற்குப் பொருத்தமாய் இருக்கும் ஒன்றோ இரண்டோ பிரசங்கங்களைச் சுருக்கமாக நடித்துக்காட்டுங்கள். அக்கறை காண்பித்திருக்கிற அனைவரையும் மீண்டும் சந்திப்பதற்கான அவசியத்தைக் குறித்து நினைப்பூட்டுதல்கள் அளியுங்கள்.

15 நிமி:துக்கிப்பவர்களுக்கு ஆறுதலளிக்க ஆயத்தமாயிருங்கள் (நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், பக்கங்கள் 102-4-ன் அடிப்படையில்). (3 நிமி.) இந்தப் பகுதியைக் கையாளுகிற சகோதரர் மரணத்தோடு சம்பந்தப்பட்டுள்ள அனைத்துப் பழக்கங்களையும் யெகோவாவின் சாட்சிகள் ஒதுக்கிவிடுவதில்லை என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார். (5 நிமி.) மரித்தோருக்காகத் துக்கங்கொண்டாடுவதைப் பற்றிய சில குறிப்பிட்ட பாரம்பரிய பழக்கவழக்கங்களை ஏன் யெகோவாவின் சாட்சிகள் தவிர்க்கிறார்கள் என்பதை உடன் வேலை செய்பவர் ஒருவருக்கு ஒரு சாட்சி எவ்வாறு விளக்குவார் என்பதை நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் பக்கங்கள் 102-3-லுள்ள கலந்தாலோசிப்பின் அடிப்படையில் நடித்துக்காட்டுங்கள். (7 நிமி.) பக்கங்கள் 103-4-ல், “ஒருவர் இவ்வாறு சொன்னால்—” என்பதன்கீழுள்ள பகுதியை சபையாரோடு கலந்தாலோசியுங்கள்.

20 நிமி:“வீட்டு பைபிள் படிப்பு ஒன்றை நடத்துதல்.” கேள்வி பதில்மூலம் கட்டுரையைச் சிந்தித்தல். இடக்குறிப்புக் கொடுக்கப்பட்டுள்ள வசனம் கலந்தாலோசிக்கப்படுகிற பாராவிலுள்ள தகவலை எவ்வாறு ஆதரிக்கிறது என்பதை மாணாக்கர் புரிந்துகொள்வதற்கு உதவிசெய்கிற பிரஸ்தாபியின் நன்கு ஒத்திகைப்பார்க்கப்பட்ட நடிப்பை அளியுங்கள். அதே நடிப்பில் மாணாக்கர் சத்தியத்தைத் தனதாக்கிக்கொள்ள உதவிசெய்வதற்கு பிரஸ்தாபி துணைக் கேள்விகளைப் பயன்படுத்துகிறார். வணக்கத்தில் ஐக்கியப்பட்டிருத்தல் அல்லது என்றும் வாழலாம் புத்தகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியைப் பயன்படுத்துங்கள்.

பாட்டு 78 (29), முடிவு ஜெபம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்