நீங்கள் வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப்பேசுகிறீர்களா?
1 போருக்குச் செல்கிற ஓர் அனுபவமுள்ள படைவீரன் முழுமையாக ஆயுதந்தரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுவான். ஒரு பெரிய கட்டடத் திட்டத்தில் வேலைசெய்ய ஆயத்தம்செய்கிற கைத்திறன் வாய்ந்த ஒரு தொழிலாளி, அந்த வேலையை செய்துமுடிப்பதற்குத் தேவையான கருவிகளைக் கொண்டுசெல்வான். வெளி ஊழியத்தில் ஈடுபடுகிற யெகோவாவின் ஓர் ஊழியன் தன்னுடைய “பட்டயத்தை” கையில் வைத்துக்கொண்டு, தனக்கு வாய்ப்புக் கிடைக்கும்பொழுதெல்லாம் அதைத் திறமையாகக் கையாளுவான். (எபே. 6:17) தனிப்பட்டவிதமாக உங்களைக்குறித்ததிலும் இது உண்மையாயிருக்கிறதா? இந்த ஊழியத்தில் நீங்கள் பங்குகொள்ளும்போது, உங்களுக்குச் செவிகொடுப்பவர்களுடைய இருதயங்களைப் பரிசுத்த ஆவி தொடும்படிக்கு கடவுளுடைய வார்த்தை பேசுவதற்கு நீங்கள் அனுமதிக்கிறீர்களா?—நீதி. 8:1, 6.
2 பிரசங்கிப்பது எப்பொழுதும் ஓர் எளிதான வேலையல்ல. சில பிராந்தியங்களில் மக்கள் அபூர்வமாகவே வீடுகளில் இருக்கிறார்கள். மேலும் வீட்டிலிருப்பவர்களும் அடிக்கடி அதிக வேலையாய் இருக்கிறார்கள், இது விரிவான பைபிள் கலந்தாலோசிப்புக்கு குறைவான வாய்ப்பே அளிக்கிறது. நம்முடைய முக்கிய பாடநூல் பைபிளாக இருப்பதால், நாம் அதை எவ்வாறு ஊழியத்தில் அதிகமாகப் பயன்படுத்தி நமக்கு செவிகொடுப்பவர்களை அதன் ஏவப்பட்ட செய்தி தூண்டும்படி அனுமதிக்கலாம்?
3 எல்லா சந்தர்ப்பத்திலும்: வீட்டுக்காரரைத் தூண்டுவிக்க நாம் ஒவ்வொரு வீட்டிலும் பைபிளைப் பயன்படுத்த விரும்பலாம். அளிக்கப்படுகிற பிரசுரம் எதுவாக இருந்தாலும் சரி, இதைச் செய்வதற்கு நாம் முன்னேற்பாடுடன் இருக்கவேண்டும். அந்த நபர் அதிக வேலையாக இருந்து பைபிளைத் திறந்து ஒன்றிரண்டு வசனங்களை வாசிப்பதற்குப் போதிய நேரமில்லாதிருந்தால், பிரசுரத்தை அளிப்பதற்கு முன்பாக உங்களால் ஒரு வசனத்தை மேற்கோள் காண்பிக்கவோ சுருக்கிக்கூறவோ முடியுமா? அதுவே அந்த நபர் நின்று செவிகொடுத்துக் கேட்கும்படிச் செய்விக்கலாம்.—எபி. 4:12.
4 உதாரணமாக, டிசம்பர் 8, 1993, ஆங்கில விழித்தெழு! பத்திரிகையிலுள்ள “வியாதி இல்லாத ஓர் உலகம்” என்ற கட்டுரையை நீங்கள் சிறப்பித்துக் காட்டிக்கொண்டிருந்தால், அட்டையிலுள்ள விளக்கப்படத்தைச் சுட்டிக்காட்டிய பிறகு, “வியாதிக்கு எப்பொழுதாவது முடிவு வந்து, எல்லாரும் துடிப்பான ஆரோக்கியத்தை அனுபவித்துக்களிக்கும் காலம் இருக்குமென்று நீங்கள் நம்புகிறீர்களா?” என்ற கேள்வியை எழுப்புங்கள். பிரதிபலிப்பு என்னவாக இருந்தாலும், நீங்கள் உங்களுடைய பைபிளிலிருந்து ஏசாயா 33:24 அல்லது வெளிப்படுத்துதல் 21:4 போன்ற ஒரு வசனத்தை நேரடியாக வாசிப்பவர்களாகவோ சுருக்கிக்கூறுபவர்களாகவோ இருக்கலாம். இந்த முறையில் கடவுளுடைய வார்த்தைப் பேசுவதற்கு நீங்கள் அனுமதிக்கிறீர்கள்.
5 மறு சந்திப்புகளில்: நாம் மறு சந்திப்புகள் செய்வதற்கு முன்பாகத் தயார்செய்ய வேண்டும். இருப்பினும், கலந்தாலோசிப்பதற்கு நாம் தயார்செய்யாத பேச்சுப்பொருள்கள் அடிக்கடி எழும்பும். இந்தச் சமயத்தில் வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் ஒரு மதிப்பு வாய்ந்த கருவியாக நிரூபிக்கலாம். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்திலிருந்து நாம் மேற்கோள் காண்பிப்பது அல்லது கருத்தை ஆதரிக்கும் வசனங்களை வாசிப்பது, நாம் கடவுளுடைய ஊழியர்கள், வசனத்தை விற்பவர்கள் அல்ல என்பதை மக்கள் அறிந்துகொள்ள உதவிசெய்யும்.—2 கொ. 2:17.
6 எந்தவொரு குறிப்பிட்ட பேச்சுப்பொருளையும் கலந்தாலோசிக்காத ஆட்களைச் சந்திக்கும்போது, நீங்கள் வெறுமனே நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்திலுள்ள “இயேசு கிறிஸ்து,” “கடைசி நாட்கள்,” அல்லது “உயிர்த்தெழுதல்” போன்ற ஒரு பொருத்தமான பேச்சுப்பொருளுக்குத் திருப்பி, கலந்தாலோசிப்பைத் தொடங்குவதற்கு உபதலைப்புகளில் ஒன்றைப் பயன்படுத்தலாம். வீட்டுக்காரரைத் தங்களுடைய சொந்த பைபிளிலிருந்து சில வசனங்களை வாசிக்கச் சொல்லலாம். அந்த முறையில் அவர்களுக்கு பைபிள் அக்கறைக்குரியதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும், மேலும் அவர்கள் நீதியினிடம் மனச்சாய்வுடையவர்களாக இருப்பார்களாகில், யெகோவாவின் பரிசுத்த ஆவி பொங்கிவழியும்.
7 நற்செய்தியைப் பிரசங்கித்து துன்மார்க்கரை எச்சரிக்கும் நம்முடைய உத்தரவாதமானது ஒரு பொறுப்புணர்ச்சி வாய்ந்த ஒன்றாகும். இது யெகோவாவின் செய்தி, நம்முடையதல்ல. ஆவியின் பட்டயமாகிய அவருடைய வார்த்தை உங்களுக்கு உதவிசெய்வதாக.