மறுசந்திப்புகளைச் செய்வதன் சவால்
1 நற்செய்தியின் ஊழியர்களாக, நாம் சீஷர்களை உண்டுபண்ண கட்டளையிடப்பட்டிருக்கிறோம். (மத். 28:19, 20) இது மறுசந்திப்புகள் செய்வதை உட்படுத்துகிறது. நம்முடைய கிறிஸ்தவ சேவையின் இந்த இன்றியமையாத பாகத்தைக் குறித்து ஒரு நேர்நிலையான மனப்பான்மையைக் கொண்டிருக்கிறீர்களா? மறுசந்திப்புகள் செய்வதில் திறமைவாய்ந்தவர்களாவது உயிர்ப்பூட்டும் சவாலாயிருக்கக்கூடும்.—நீதி. 22:29.
2 சீஷராக்கும் வேலையில் பங்குக்கொள்வதை, ஒப்புக்கொடுத்த ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஒரு பொறுப்பாக கருதவேண்டும். ராஜ்ய நம்பிக்கையை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள ஓரளவு நம்முடைய சொந்த செளகரியத்தை நாம் ஒதுக்கிவைக்க வேண்டியதை இது ஒருவேளை அவசியப்படுத்தலாம். உண்மை மனமுள்ள ஆட்கள் தங்கள் ஆவிக்குரிய தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ளும்படி அவர்களுக்கு உதவிசெய்ய, மறுசந்திப்புகள் நமக்கு வாய்ப்பை அளிக்கிறது.
3 அக்கறையுடையோர் அனைவரையும் திரும்பச்சென்று சந்தியுங்கள்: ராஜ்ய செய்திக்கு அக்கறை காட்டும் அனைவரோடும் மறுசந்திப்புகள் செய்யப்படவேண்டும். பிரசுரங்களை எடுப்பதற்கு மறுத்தபோதிலுங்கூட நாம் அவர்களைச் சென்று சந்திக்கவேண்டும். அநேகர் நம்மோடு பைபிள் விஷயங்களைக் கலந்துபேசுவதற்கு மனமுள்ளவர்களாயிருப்பதன் மூலம் தங்கள் அக்கறையை வெளிக்காட்டுகின்றனர். ஜனங்களோடு குறிப்பான பைபிள் விஷயங்களின்பேரில் கலந்தாராய்வதன் மூலம் அவர்களை ராஜ்ய செய்தியின்பேரில் அக்கறைகொள்ளும்படி எப்படி செய்யலாம் என்பதை இயேசுவும் அப்போஸ்தலரும் செய்து காட்டினர்.—மாற்கு 10:21; அப். 2:37-41.
4 நாம் ஒரு பைபிள் படிப்பைத் தொடங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்களைத் திரும்பவும் சென்று சந்திக்க வேண்டும். ஒரு வீட்டு பைபிள் படிப்பு எப்படி நடத்தப்படும் என்பதை நாம் வீட்டுக்காரருக்கு நடித்துக் காட்டலாம். நேர்மைமனமுள்ள நபரைக் கண்டுபிடித்து அவரோடு படிக்க வேண்டும் என்கிற உங்களுடைய ஜெபத்துக்கு யெகோவா செவிகொடுப்பாரென நீங்கள் நிச்சயமாயிருக்கலாம். அவருடைய சேவையில் நீங்கள் எடுக்கும் ஊக்கமான முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிப்பார். ஒரு பைபிள் படிப்பைத் தொடங்க வேண்டும் என்ற இலக்கை வைத்து, யெகோவாவுடைய உதவியை நீங்கள் ஏன் நாடக்கூடாது?
5 துண்டுப்பிரதிகளை நல்லமுறையில் பயன்படுத்துங்கள்: பைபிள் படிப்புகளைத் தொடங்குவதற்குத் துண்டுப்பிரதிகளை பலன்தரும் வகையில் பயன்படுத்தலாம். மேல்பக்கத்திலுள்ள படத்தைக் காட்டி பேசுவதன் மூலம் அநேகர் ஒரு சம்பாஷணையை ஆரம்பித்திருக்கின்றனர். ஒவ்வொரு பாராவாக வீட்டுக்காரரோடு படியுங்கள். கேள்வி கேட்கும்போது, நிறுத்தி, வீட்டுக்காரர் தன் கருத்துக்களை எடுத்துச்சொல்ல அழையுங்கள். கொடுக்கப்பட்டிருக்கும் வேதவசனங்களை எடுத்துப்பார்த்து அவை எப்படி பொருந்துகின்றன என்பதை எடுத்துக்காட்டுங்கள். பிறகு, எந்தப் பிரசுரத்தில் படிப்பு நடத்தப்படுகிறதோ அதிலிருந்து படிப்பதற்கு சம்பாஷணையை தொடருங்கள்.
6 நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தை பயன்படுத்துங்கள்: நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தை பயன்படுத்தி, பலன்தரும் மறுசந்திப்புகளைச் செய்யலாம். சென்றமுறை பேசிய விஷயத்தின்பேரில் மறுபடியும் தொடர்ந்து பேசுவதற்கு முக்கிய பொருள்கள் அல்லது பொருளடக்க அட்டவணையில் கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலை பார்ப்பது சரியான விஷயத்தை நீங்கள் தெரிந்துகொள்ள உங்களுக்கு உதவக்கூடும். “அடிக்கடி தவறாக பொருத்தப்படும் வேதவசனங்கள்” என்ற பகுதி, எழும்பக்கூடிய மறுப்புகளைக் கையாள பயன்படும். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் பக்கம் 204-ல் “யெகோவாவின் சாட்சிகள் பைபிளைப்பற்றிய தங்கள் விளக்கத்தை எவ்வாறு அடைகின்றனர்?” என்ற தலைப்பின்கீழ் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை உபயோகிப்பதன் மூலம் பயனியர்கள் பைபிள் படிப்புகள் தொடங்குவதில் வெற்றிக் கண்டிருப்பதாக அறிக்கை செய்கின்றனர். பைபிள்தானேயும் அதன் சொந்த விளக்கத்தை அளிக்கும்படி நாம் விடுவதை அவர்களுக்கு எடுத்துக்காட்டுகிறார்கள். இது நல்ல பயன்தருகிறது. அநேக பைபிள் படிப்புகள் ஆரம்பிப்பதிலும் முடிவடைந்திருக்கிறது.
7 யெகோவாவின் ஆடுகளிடம் நாம் இயேசுவைப் போன்றும் அப்போஸ்தலரைப் போன்றும் உண்மையான அக்கறையைக் காட்ட வேண்டும். (லூக். 9:11) ஜனங்கள் மீதுள்ள அன்புதானே ராஜ்ய சத்தியங்களோடு அவர்களை சென்றெட்ட நமக்கு உதவிசெய்யும். (2 கொரி. 2:17) மற்றவர்களுடைய ஆவிக்குரிய நலனுக்காக நாம் நம்மையே அளிப்பதில் அதிக அவசியம் இருப்பதை உணரும்போது, மறுசந்திப்புகள் செய்வதன் சவாலை நாம் எதிர்ப்பட முடியும்.