உண்மையான வழிநடத்துதலை அளிக்கும் புத்தகம்
1 இந்த உலகம் கடந்த நூற்றாண்டின்போது திடீர் திருப்பங்களுடன் மாறிவிட்டது. தொலைத்தொடர்பு, மருத்துவம், போக்குவரத்து ஆகிய துறைகளில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும்கூட, குடும்ப வாழ்க்கைத் தரம் ஒரே சீராக வீழ்ச்சியடைந்துவிட்டது. இலட்சக்கணக்கானோர் மனிதர்களின் என்றும் மாறிவருகின்ற தத்துவங்களினால் வழிநடத்தப்பட இடமளிக்கிறார்கள்.
2 வேகமாக மாறிவரும் இந்த உலக நிலைமையில், யெகோவாவின் மக்கள் அவருடைய வார்த்தையைப் பின்பற்றுவதன்மூலம் பேரளவாக பயனடைந்திருக்கிறார்கள். பைபிள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மாறாமல் நிலைத்திருக்கிறது, மேலும் இன்று நாம் எதிர்ப்படுகின்ற பிரச்னைகளைச் சமாளிப்பதற்கு இன்னும் அதன் ஆலோசனை மிகவும் நடைமுறையானதாய் இருக்கிறது. நம்முடைய நவீன நாளுக்கு உண்மையான வழிநடத்துதலை பைபிள் அளிக்கிறது என்பதை மதித்துணருவதற்கு அக்கறையுள்ள ஆட்களுக்கு நாம் எவ்வாறு உதவிசெய்யலாம்?
3 “நீங்கள் ஏன் பைபிளை நம்பலாம்” என்ற துண்டுப்பிரதியை முதற்சந்திப்பில் விட்டுவந்திருந்தால், நீங்கள் திரும்பிச்சென்று இவ்வாறு சொல்லலாம்:
◼ “பைபிள் கடவுளிடத்திலிருந்தே வந்த ஒரு செய்தி என்றும் நாம் அதை விசுவாசித்து அது என்ன சொல்லுகிறதோ அதற்கு இசைவாக வாழ்ந்தால் அவர் நமக்கு நித்திய ஜீவனை அளிப்பார் என்றும் தெளிவாக சொல்வதால், இந்த விஷயங்களைக் குறித்து அதிகமாக ஆராய்வது பயனுள்ளதாய் இருக்குமென்றும் நீங்கள் உணருகிறீர்களா? [பதிலுக்காக அனுமதியுங்கள்.] தற்போதைய உலக காரிய ஒழுங்குமுறையைக் குறித்து பைபிள் என்ன முன்னறிவிக்கிறது என்பதைக் கவனியுங்கள். [இந்தத் துண்டுப்பிரதியின் பக்கம் 5-லிருந்து 2 தீமோத்தேயு 3:1-5-ஐ நேரடியாக வாசியுங்கள்.] இந்த வருணனை இன்றைய உலகிற்குப் பொருந்துகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? [குறிப்புச்சொல்ல அனுமதியுங்கள்.] எதிர்காலத்தில் மேம்பட்ட நிலைமைகளை எதிர்பார்ப்பதற்கு நல்ல காரணமிருக்கிறதா?” பிறகு நீங்கள் இந்தத் துண்டுப்பிரதியிலுள்ள கடைசி இரண்டு பாராக்களை கலந்தாலோசிப்பதன் மூலம் அல்லது பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? புத்தகத்திலுள்ள பக்கம் 161-ஐ உபயோகித்து, மனிதவர்க்கத்திற்காக பைபிள் அளிக்கும் அற்புதகரமான நம்பிக்கையை சிறப்பித்துக் காட்டுவதன் மூலம் மற்றொரு சந்திப்பிற்கான அடித்தளத்தைப் போடலாம்.
4 வீட்டுக்காரர் பைபிளின் நடைமுறை மதிப்பைப்பற்றி அக்கறையுடையவராக இருந்து, “பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா?” புத்தகத்தின் அதிகாரம் 12-லுள்ள திட்டவட்டமான நியமங்களை நீங்கள் சுட்டிக்காட்டியிருந்தால், நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “நமக்கு நடைமுறையானதாய் இருக்கிற காரியங்களில் நாம் இன்று அக்கறையுடையவர்களாய் இருக்கிறோம், அல்லவா? போரை முடிவுக்குக் கொண்டுவருவது நடைமுறையாய் இருக்கும் என்பதாக ஒத்துக்கொள்வீர்களா? [குறிப்புச்சொல்ல அனுமதியுங்கள்.] மக்கள் மற்ற தேசத்தாரோடு சமாதானத்துடன் ஒன்றாகசேர்ந்து வாழ கற்றுக்கொள்வார்களாகில், இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும், அல்லவா? [பதிலுக்காக அனுமதியுங்கள்.] பைபிள் சரியாகவே அதைத்தான் முன்னறிவித்திருக்கிறது. [ஏசாயா 2:2, 3-ஐ வாசியுங்கள்.] இது எப்படி சம்பவிக்கும், எப்பொழுது சம்பவிக்கும் என்று நீங்கள் எப்பொழுதாவது யோசித்திருக்கிறீர்களா?” வீட்டுக்காரருக்கு வசதியான ஒரு நேரத்தில் இந்தக் கேள்வியைக் குறித்து மேலுமாக கலந்தாலோசிக்க நீங்கள் விரும்புவதை விளக்குங்கள்.
5 ‘புதிய உலக மொழிபெயர்ப்பை’ விட்டுவந்திருந்தால், நீங்கள் திரும்பச்சென்று இவ்வாறு சொல்லலாம்:
◼ “நான் உங்களிடம் விட்டுச்சென்ற பைபிளை வாசிக்கையில், அது கடவுளுடைய தனிப்பட்ட பெயரை முழுவதுமாக பயன்படுத்துவதை நீங்கள் கவனித்திருக்கலாம். மற்ற அநேக பைபிள் மொழிபெயர்ப்புகளைவிட இது ஒரு முக்கியமான முன்னேற்றமாகும். சிலர் யெகோவா என்ற பெயரைப் பயன்படுத்த தயங்குகிறபோதிலுங்கூட, வெகு நாட்களுக்கு முன்பாக அவர் தம்முடைய பெயரை வெளிப்படுத்தினார் என்பதையும், தம்மை உண்மையும் ஜீவனுமுள்ள கடவுளாக அடையாளங்காட்டுவதற்கு தம்முடைய ஊழியர்கள் அதைப் பயன்படுத்த உற்சாகப்படுத்தினார் என்பதையும் நாம் மனதிற்கொள்ளவேண்டும். சங்கீதம் 83:17-ல் சங்கீதக்காரன் தாவீது என்ன எழுதினார் என்பதைக் கவனியுங்கள்.” அந்த வசனத்தை வாசித்து, வீட்டுக்காரர் குறிப்புச்சொல்ல அனுமதியுங்கள். வெளிப்படுத்திக்காட்டிய அக்கறைக்கு ஏற்றவாறு, நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தின் பக்கம் 191 முதற்கொண்டு “யெகோவா” என்ற தலைப்பின்கீழ் காணப்படுகிற மேலுமான தகவலை நீங்கள் பயன்படுத்தலாம்.
6 பைபிள் மட்டுமே மனிதனுக்குத் தேவையான வழிநடத்துதலை அளிக்கிறது. (எரே. 10:23) அவருடைய நோக்கங்களைக் கற்றுக்கொள்வதற்கும் அவருடைய தயவைப் பெறுவதற்குமான ஒரே வழி கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதேயாகும். ஆகவே, அதனுடைய ஞானமான அறிவுரையிலிருந்தும் நடைமுறையான ஆலோசனையிலிருந்தும் பயனடைவதற்கு மற்றவர்களை நாம் ஊக்கமாக அழைப்போமாக.