உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 12/93 பக். 2
  • டிசம்பர் ஊழியக் கூட்டங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • டிசம்பர் ஊழியக் கூட்டங்கள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1993
  • துணை தலைப்புகள்
  • டிசம்பர் 6-ல் துவங்கும் வாரம்
  • டிசம்பர் 13-ல் துவங்கும் வாரம்
  • டிசம்பர் 20-ல் துவங்கும் வாரம்
  • டிசம்பர் 27-ல் துவங்கும் வாரம்
நம் ராஜ்ய ஊழியம்—1993
km 12/93 பக். 2

டிசம்பர் ஊழியக் கூட்டங்கள்

டிசம்பர் 6-ல் துவங்கும் வாரம்

பாட்டு 205 (118)

10 நிமி:சபை அறிவிப்புகள் மற்றும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள்.

20 நிமி:“மற்றவர்கள் கடவுளுடைய குமாரன், இயேசு கிறிஸ்துவைப்பற்றி கற்றுக்கொள்ள உதவுங்கள்.” கேள்வி பதில் கலந்தாலோசிப்பு. பத்தி 2 (அனுபவம்வாய்ந்த பிரஸ்தாபியால்) மற்றும் பத்தி 4-ல் உள்ள பிரசங்கங்களை (இளம் பிரஸ்தாபியால்) நடித்துக்காட்டுங்கள். வீட்டுக்கு வீடு, சந்தர்ப்ப சாட்சிகொடுத்தல் ஆகிய இரண்டிலும் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தைச் சிறப்பித்துக் காட்ட அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.

15 நிமி:“பத்திரிகை நடவடிக்கைக்காக நேரம் ஒதுக்குங்கள்.” பேச்சு, சபையார் கலந்தாலோசிப்புடன். பத்தி 3-ஐ சிந்திக்கையில், உள்ளூர் பிராந்தியத்தில் எதிர்ப்படக்கூடிய வித்தியாசமான மக்களுக்கு தற்போதைய பத்திரிகைகளிலுள்ள பல்வகைக் கட்டுரைகளை எவ்வாறு அளிக்கலாம் என்பதை விளக்கிக்காட்டுங்கள்.

பாட்டு 169 (28), முடிவு ஜெபம்.

டிசம்பர் 13-ல் துவங்கும் வாரம்

பாட்டு 146 (80)

10 நிமி:சபை அறிவிப்புகள், கணக்கு அறிக்கை, மற்றும் நன்கொடை ஒப்புகைகள். சபை தேவைகள், சங்கத்தின் ராஜ்ய மன்ற நிதி, மற்றும் சங்கத்தின் உலகளாவிய வேலைக்கான தயாள ஆதரவுக்காக சபையாரைப் பாராட்டுங்கள். இந்த வார இறுதி வெளி ஊழியத்தில் அறிமுகக் குறிப்புகளில் பயன்படுத்தக்கூடிய பேச்சுக் குறிப்புகள் ஒன்றிரண்டை சொல்லுங்கள்.

20 நிமி:“உங்கள் பைபிள் மாணாக்கருடைய இருதயத்தைச் சென்றெட்டுங்கள்.” நடிப்புடன் கேள்வி பதில்கள். கற்பிக்கும் கலையை அபிவிருத்தி செய்ய சபையிலுள்ள அனைவரும் உழைக்க வேண்டும் என்ற குறிப்பை வலியுறுத்துங்கள். பத்தி 3-ஐ சிந்தித்தப் பிறகு, என்றும் வாழலாம் புத்தகத்தில் அதிகாரம் 1-லுள்ள 13 மற்றும் 14-வது பத்திகளிலுள்ள கேள்விகள் மற்றும் வேதவசனங்களைப் பயன்படுத்துவதன்மூலம் பைபிள் மாணாக்கருடன் எவ்வாறு நியாயங்காட்டிப் பேசுவது என்பதைப் பிரஸ்தாபி நடித்துக்காட்டுகிறார்.

15 நிமி:“வருடாந்தரப் புத்தகம்—உற்சாகத்தின் ஒரு கருவூலம்.” இடக்குறிப்புக் கொடுக்கப்பட்டுள்ள வேதவசனங்களின் பொருத்தத்தைச் சிறப்பித்துக் காட்டுகிற ஊக்கமானப் பேச்சு. கட்டுரையிலுள்ள அனுபவம், ஜனவரி 1, 1990, ஜனவரி 1, 1987, மற்றும் ஜனவரி 1, 1986 பக்கம் 32-லிருந்து அல்லது உங்கள் மொழியிலுள்ள காவற்கோபுரத்திலிருந்து பொருத்தமான அனுபவங்களை உணர்ச்சியோடு விவரிக்க நன்கு ஒத்திகைப் பார்க்கப்பட்ட பிரஸ்தாபிகளை ஏற்பாடுசெய்யுங்கள்.

பாட்டு 165 (81), முடிவு ஜெபம்.

டிசம்பர் 20-ல் துவங்கும் வாரம்

பாட்டு 189 (90)

15 நிமி:சபை அறிவிப்புகள். டிசம்பர் 25-ல் விசேஷித்த சாட்சிகொடுத்தலுக்காக சபை ஏற்பாடுகளைக் குறிப்பிடுங்கள்.

20 நிமி:“டிசம்பரில் பைபிள் படிப்புகள் ஆரம்பித்தல்.” சபையாரோடு கலந்தாலோசிப்பு. பத்தி 4-ஐ சிந்திக்கையில், ஒரு பைபிள் படிப்பை மறுசந்திப்பின்போது எவ்வாறு ஆரம்பிப்பது என்பதை நடித்துக்காட்டுங்கள். கூடுமானால், ஒவ்வொரு மாதமும் ஒரு வீட்டுப் பைபிள் படிப்பை நடத்துவதற்கு ஒவ்வொருவரையும் உற்சாகப்படுத்துங்கள்.

10 நிமி:“புதிய வட்டார அசெம்பிளி நிகழ்ச்சிநிரல்.” கேள்வி பதில் கலந்தாலோசிப்பு. இப்படிப்பட்ட அசெம்பிளிகளுக்கு ஆஜராவதன் நன்மைகளைக் குறிப்பிடுங்கள் மற்றும் வரவிருக்கிற தொடர் நிகழ்ச்சிகளின் சிறப்புக்குறிப்புளைச் சுட்டிக்காட்டுங்கள். தங்களுடைய அசெம்பிளி தேதிகள் அறிவிப்பு செய்தவுடனேயே ஆஜராவதற்கு திட்டங்கள் செய்யும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.

பாட்டு 61 (13), முடிவு ஜெபம்.

டிசம்பர் 27-ல் துவங்கும் வாரம்

பாட்டு 37 (94)

10 நிமி:சபை அறிவிப்புகள். தேவராஜ்ய செய்திகள். ஜனவரி 1-க்கான விசேஷித்த சாட்சிகொடுத்தல் ஏற்பாடுகளை அறிவியுங்கள். ஜனவரியில் முக்கியப்படுத்திக் காட்டப்படுகிற பிரசுரங்களை உள்ளூரில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நடித்துக்காட்டுங்கள்.

20 நிமி:போதைப் பொருட்களை பயன்படுத்திப் பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது? போதைப் பொருட்கள் பள்ளியில் பரவலாகப் பயன்படுத்தப்படுவதை இரண்டு பருவ வயது பிரஸ்தாபிகள் ஒரு மூப்பருடன் கலந்தாலோசிக்கிறார்கள். போதைப் பொருட்களை எப்பொழுதாவது பயன்படுத்துவதில் தவறு ஒன்றுமில்லை என்று சில இளைஞர் காண்பதை அவர்கள் குறிப்பிடுகின்றனர். தான் பள்ளிக்குச் சென்ற நாட்களிலிருந்து காரியங்கள் சீர்கேடடைந்துவிட்டன என்பதை மூப்பர் ஒத்துக்கொள்கிறார். பைபிளில் போதைப் பொருட்கள் குறிப்பாகச் சொல்லப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காண்பிக்கிறார், ஆனால் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதன்பேரில் நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், பக்கங்கள் 106-12-ல் சிறந்த வழிகாட்டுக் குறிப்புகளைக் காணலாம். வசனங்களை இளைஞர் வாசிக்கின்றனர்; ஒவ்வொரு வசனமும் வாசித்து முடிக்கப்படுகையில், மூப்பர் அவர்களுடன் விஷயங்களை நியாயங்காட்டிப் பேசுகிறார். சகாக்களின் அழுத்தத்தைத் தடுத்துநிறுத்துவதற்குத் தனிப்பட்ட விதமாக தங்களுக்கு உதவியளிக்கக்கூடிய வித்தியாசமான வழிகளைக்குறித்து இளைஞர் தங்களுடைய சொந்த ஆலோசனைகளைக் கொடுக்கின்றனர்.

15 நிமி:சபை தேவைகள் அல்லது “முதியோருக்குக் கிறிஸ்தவர்கள் எவ்வாறு உதவிசெய்யலாம்,” காவற்கோபுரம் ஆகஸ்ட் 15, 1993, பக்கங்கள் 27-30, மாதம் இருமுறை வெளிவரும் பதிப்புகளின் (ஆங்கிலம் உட்பட) அடிப்படையில் மூப்பரின் பேச்சு. காவற்கோபுரம் மாதம் ஒருமுறை அச்சிடப்படுகிற மொழியைப் பயன்படுத்துகிற சபைகள் அக்டோபர் 1, 1993 இந்திய மொழியில் மாதாந்திர இதழிலுள்ள, “காத்திருக்க கற்றுக்கொள்வதன் பிரச்னை” என்ற கட்டுரையின் அடிப்படையில் பேச்சை அமைக்கலாம். (இந்தக் கட்டுரை அக்டோபர் 15, 1993 ஆங்கில மற்றும் மாதம் இருமுறை வெளிவரும் பதிப்புகளில் காணப்படுகிறது.)

பாட்டு 120 (26), முடிவு ஜெபம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்