உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 2/94 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1994
நம் ராஜ்ய ஊழியம்—1994
km 2/94 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் பிப்ரவரி: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம். பெரிய அளவு புத்தகம் 40.00 ரூபாய், சிறிய அளவு புத்தகம் 20.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். மார்ச்: இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் (இது ஆங்கிலம், மலையாளம் மற்றும் தமிழில் கிடைக்கிறது) 20.00 ரூபாய் நன்கொடைக்கு. இது கிடைக்காத இடங்களில், நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்தை 40.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம், (சிறிய அளவு புத்தகம் 20.00 ரூபாய்). கூடுதலாக, பழைய 192-பக்க விசேஷ அளிப்பு புத்தகங்கள் ஒவ்வொன்றையும் 6.00 ரூபாய்க்கு அளிக்கலாம். ஏப்ரல் மற்றும் மே: காவற்கோபுரம் பத்திரிகைக்கு ஒரு வருட சந்தா 60.00 ரூபாய். ஆறு மாத சந்தாக்களும் மாதாந்தரப் பதிப்புகளுக்கான ஒரு வருட சந்தாக்களும் 30.00 ரூபாய். (மாதாந்தரப் பதிப்புகளுக்கு ஆறு மாத சந்தாக்கள் கிடையாது.) குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள அளிப்புத் திட்டத்திற்கான பிரசுரங்கள் எதையும் இன்னும் ஆர்டர் செய்யாத சபைகள் தங்களுடைய அடுத்த புத்தக ஆர்டர் நமூனாவில் (S-14) ஆர்டர் செய்யவேண்டும்.

◼ காரியதரிசியும் ஊழியக் கண்காணியும் அனைத்து ஒழுங்கான பயனியர்களின் நடவடிக்கையை மறுபார்வை செய்யவேண்டும். தேவைப்படுத்துகிற மணிநேரங்களைப் பூர்த்திசெய்வதில் எவருக்காவது பிரச்னையிருக்குமானால், உதவியளிக்கப்படுவதற்கு மூப்பர்கள் ஏற்பாடு செய்யவேண்டும். ஆலோசனைகளுக்காக, அக்டோபர் 1, 1993, அக்டோபர் 1, 1992 தேதியிடப்பட்ட (S-201) சங்கத்தின் கடிதங்களை மறுபார்வை செய்யுங்கள். அதோடு, அக்டோபர் 1986 நம் ராஜ்ய ஊழியம் உட்சேர்க்கை, பாராக்கள் 12-20-ஐப் பாருங்கள்.

◼ நினைவு ஆசரிப்பு மார்ச் 26, 1994 சனிக்கிழமை அன்று ஆசரிக்கப்படும். முன்னதாகவே பேச்சு ஆரம்பிக்கிறபோதிலும், நினைவு ஆசரிப்பு அப்பமும் திராட்சரசமும் பரிமாறுவது சூரிய அஸ்தமனத்திற்கு முன் ஆரம்பிக்கக் கூடாது என்பதை தயவுசெய்து நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய பகுதியில் சூரிய அஸ்தமனம் எப்பொழுது நிகழும் என்பதைத் தீர்மானிக்க உள்ளூர் செய்திமூலத்திடம் சரிபார்த்துக்கொள்ளுங்கள். வெளி ஊழியத்திற்கான கூட்டங்களைத் தவிர வேறு எந்தக் கூட்டங்களும் அந்தத் தேதியில் நடத்தப்படக் கூடாது. உங்களுடைய சபையானது வழக்கமாக சனிக்கிழமை அன்று கூட்டங்களை வைத்திருந்தால், ராஜ்ய மன்றம் கிடைக்குமானால் அவற்றை நீங்கள் அந்த வாரத்தில் மற்றொரு நாளில் மாற்றிக்கொள்ள விரும்பலாம்.

◼ மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் துணைப் பயனியர்களாக சேவைசெய்ய விருப்பமுள்ள பிரஸ்தாபிகள் தங்களுடைய திட்டங்களை இப்பொழுதே செய்து, விண்ணப்பத்தை முன்னதாகவே சமர்ப்பிக்க வேண்டும். மூப்பர்கள் தேவையான வெளி ஊழிய ஏற்பாடுகளைச் செய்வதற்கும் கையிருப்பில் போதுமான பிரசுரங்களைக் கொண்டிருப்பதற்கும் இது உதவிசெய்யும். ஏப்ரலில் துணைப் பயனியர் சேவையில் பங்குகொள்ள விசேஷித்த முயற்சிசெய்யும்படி நாங்கள் அனைத்து பிரஸ்தாபிகளையும் உற்சாகப்படுத்துகிறோம்.

◼ பைபிள் ஆராய்ச்சியை எளிதாக்குவதற்கு, ஆங்கிலத்தில் பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன் மற்றும் வேதவசனங்கள்பேரில் உட்பார்வையின் இரண்டு தொகுதிகளை கம்ப்யூட்டர் டிஸ்கட்டுகள் (diskettes) தொகுப்பில் விரைவில் நாங்கள் கிடைக்கும்படி செய்வோம். அந்தத் தொகுப்பு 5 1/4 அங்குலம் 1.2-மெகாபைட் டிஸ்கட்டுகளிலோ 3-1/2 அங்குலம் 1.44-மெகாபைட் டிஸ்கட்டுகளிலோ கிடைக்கும். இதற்கு குறைந்தபட்சமாக 512 கிலோபைட்டுகள் வேண்டுமிடம் அணுகு நினைவகத்துடனும் (random access memory), 18 மெகாபைட்டுகள் இயல்பான இடைவெளியுள்ள கடினத் தட்டுடனும்கூடிய (hard disk) ஒரு IBM PC ஏற்புடைய, டாஸில் இயங்குகிற (running DOS) கம்ப்யூட்டர் தேவைப்படுகிறது. இவை நிரந்தரமாக இருப்பிலிருக்கக்கூடிய பொருட்கள் அல்ல, ஆகையால் இந்தக் கருவிகளை விரும்புகிற நபர்கள் தங்களுடைய சபையின் காரியதரிசியிடம் உடனடியாகத் தங்களுடைய ஆர்டரைக் கொடுக்கவேண்டும். காரியதரிசி தொகுப்புகளின் தேவையான எண்ணிக்கையையும் மாதிரியையும் (அளவு) ஒரு வெள்ளைத் தாளில் எழுதி மார்ச் 1, 1994-க்கு முன்பாக எங்களுக்கு அனுப்பவேண்டும்—மார்ச் 1-க்குப் பிறகு அனுப்பப்படுகிற ஆர்டர்களை நாங்கள் பூர்த்திசெய்யும் நிலையில் இல்லை. முன்னதாக வந்த இந்த ஆர்டர்களைப் பெற்றவுடனேயே, எத்தனை தொகுப்புகள் தேவைப்படுகின்றன என்பதையும் அதன்மூலம் அதன் விலை என்னவாக இருக்கும் என்பதையும் நாங்கள் தீர்மானிப்போம். அதைத் தொடர்ந்து நம் ராஜ்ய ஊழியத்தில், ஒவ்வொரு தொகுப்பிற்கான விலையையும் உங்களுடைய தீர்மானமான ஆர்டர்களை எப்பொழுது செய்யவேண்டும் என்பதையும் நாங்கள் அறிவிப்போம்.

◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:

ஆங்கிலம்: யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தின் பிரஸ்தாபிகள். ‘தெய்வீக போதனை’ மாவட்ட மாநாட்டில் வெளியிடப்பட்ட இந்தப் புதிய 750-பக்கப் புத்தகம், பிரஸ்தாபிகளுக்கும் பொதுமக்களுக்கும் 120.00 ரூபாய், பயனியர்களுக்கு 90.00 ரூபாய். பெங்காளி, ஆங்கிலம், குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மராத்தி மற்றும் தெலுங்கு: வாழ்க்கையின் நோக்கம் என்ன? அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? கடந்த வருட மாநாடுகளில் வெளியிடப்பட்ட இந்தப் புதிய 32-பக்க சிற்றேடும்கூட, பிரஸ்தாபிகளுக்கும் பொதுமக்களுக்கும் 4.00 ரூபாய், பயனியர்களுக்கு 3.00 ரூபாய். பிரெஞ்சு: சமாதானமான புதிய உலகம்—அது வருமா? (A Peaceful New World—Will It Come?) (துண்டுப்பிரதி எண் 17; விசேஷமாக யூதர்களுக்காக); யெகோவாவின் சாட்சிகள்—அவர்கள் நம்புவதென்ன? (Jehovah’s Witnesses—What Do They Believe?) (துண்டுப்பிரதி எண் 18; விசேஷமாக யூதர்களுக்காக). ஹிந்தி: கலந்து பேசுவதற்கான பைபிள் பேச்சுப் பொருள்கள்.

◼ மீண்டும் கிடைக்கக்கூடிய பிரசுரங்கள்:

மலையாளம்: பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம்; மராத்தி: வாழ்க்கைக்கு இன்னும் அதிகம் இருக்கிறது!

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்