தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து முழுமையாகப் பயனடைதல்
1 பைபிள் சத்தியங்களைப் பயன்தரும் முறையில் மற்றவர்களுக்குக் கற்பிக்கும்படி, நம்மைக் ‘கற்பிக்கும் கலையில்’ பயிற்றுவிப்பதில் தேவராஜ்ய ஊழியப் பள்ளி கருவியாக இருந்திருக்கிறது. (2 தீ. 4:2, NW) ஒவ்வொரு வாரமும் பல்வேறு பைபிள் பொருள்களில் பெருமதிப்பு வாய்ந்த உட்பார்வையைப் பெறுகிறோம். இந்தப் பள்ளி அளிக்கும் இன்றியமையாத போதனையிலிருந்து முழு நன்மையையும் பெறும்படி நாம் எவ்வாறு நிச்சயப்படுத்திக் கொள்ளலாம்?
2 அந்தக் கூட்டத்தின்போது நீங்கள் கற்றுக்கொள்ளவிருக்கிற அக்கறையூட்டும் குறிப்புகள் சிலவற்றைப் பள்ளிக் கண்காணி முதன்மையாக எடுத்துக் கூறுகையில் அவருடைய அந்தத் தொடக்கக் குறிப்புகளுக்குக் கூர்ந்த கவனம் செலுத்துங்கள். அவர் எழுப்பக்கூடிய ஏதாவது கேள்விகளைப்பற்றியும் அவற்றின் பதில்களை உங்கள் ஊழியத்தில் எவ்வாறு நீங்கள் பொருத்திப் பயன்படுத்தலாமென்பதைப் பற்றியும் சிந்தியுங்கள்.
3 போதகப் பேச்சு அச்சடிக்கப்பட்ட பொருளின் வெறும் மறுபார்வையிடுதல் அல்ல. அந்தத் தகவலின் நடைமுறையான பயனின்பேரிலும் தனிப்பட்டவராக உங்களுக்கு அது எவ்வாறு நன்மைபயக்கக்கூடும் என்பதன்பேரிலும் கவனத்தை ஒருமுகப்படுத்துகிறது. முன்னதாகவே தயார் செய்வது முக்கியக் குறிப்புகளின்பேரில் மனதை ஊன்றவைக்கவும் அதைப் பின்தொடரும் வாய்முறையான மறுபார்வையிடுதலில் பங்குகொள்ளவும் உங்களுக்கு உதவிசெய்யும்.
4 வாராந்தர பைபிள் வாசிப்பைத் தவறாமல் ஒழுங்காய்ச் செய்துவருவது கடவுளுடைய வார்த்தையின்பேரில் உங்கள் மதித்துணர்வை ஆழமாக்கும். கூடுதலான ஆராய்ச்சி புதிய மற்றும் அக்கறையைத் தூண்டும் பல நுட்பவிவரங்களை வெளிப்படுத்தும், இவை சத்தியத்தின்பேரில் உங்கள் தெளிந்துணர்வை மிகைப்படுத்தும். பைபிளின் சிறப்புக் குறிப்புகளை எடுத்துக் கூறுவது பைபிள் விவரத்தையே திரும்ப எடுத்துக் கூறுவதைப் பார்க்கிலும் அதிகப்பட்டது. முழுப் பகுதியையும் உள்ளிட்ட சுருக்கமான மறுபார்வையிடுதலுக்குப் பின், நியமிக்கப்பட்ட பகுதியிலிருந்து முக்கியமான சிறப்புக்கூறுகளைப் பேச்சாளர் எடுத்துக் குறிப்பிட்டு, அவை நம்முடைய வாழ்க்கைக்கும் வணக்கத்துக்கும் எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளனவெனக் காட்டுவார். பைபிள் போதனையை மேம்பட்ட முறையில் பொருத்திப் பயன்படுத்துவது எவ்வாறென்பதைக் கற்றுக்கொள்ளும்படி கவனமாய்ச் செவிகொடுங்கள்.—சங். 119:105.
5 உங்களுக்கு மாணாக்கர் பேச்சு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தால், நீங்கள் தற்போது உழைத்துவரும் அறிவுரை குறிப்பைக் கவனியுங்கள். பள்ளி துணைநூல் (School Guidebook) புத்தகத்தில், அந்தப் பேச்சுப் பண்பைக் கையாளும் பகுதியில் கொடுத்துள்ள ஆலோசனைகளைத் திரும்ப வாசித்து, அவற்றைப் பொருத்திப் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். உங்கள் பேச்சுக்குக் குறிப்புகளைத் தெரிந்தெடுக்கையில், வெளி ஊழியத்தில் நடைமுறையில் பயன்படுத்தக்கூடிய குறிப்புகளை அறிவுறுத்துங்கள்.—sg பக். 96-9.
6 பேச்சு எண் 3-ஐ அல்லது பேச்சு எண் 4-ஐக் கொடுக்கும்படி நியமிக்கப்பட்ட ஒரு சகோதரியாக நீங்கள் இருந்தால், அந்தத் தகவலை மெய்ம்மையாகவுள்ள ஒரு சூழமைவில் கொடுக்கும்படி முயற்சி செய்யுங்கள். வீட்டுக்காரர் நீங்கள் சொல்லும் எல்லாவற்றையும் ஒப்புக்கொள்ளலாம் அல்லது ஒப்புக்கொள்ளாமலும் இருக்கலாம்; அடிப்படையாயுள்ள பைபிள் நியமங்களின்பேரில் நியாயமான முறையில் பகுத்து சிந்திக்க அந்த நபருக்கு உதவிசெய்யும் முறையைக் காட்ட முயற்சி செய்யுங்கள். (sg பக். 153-8) இது வெளி ஊழியத்தில் இதைப்போன்ற மறுப்புகளை எதிர்ப்பட்டால் அவற்றைக் கையாளுவது எவ்வாறென்று காண சபையாருக்கு உதவிசெய்கிறது. முன்னதாகவே நன்றாய்த் தயாரித்து, உங்கள் வீட்டுக்காரரோடு முன்கூட்டியே ஒத்திகை செய்துகொள்வதற்கு ஏற்பாடு செய்யுங்கள். கூட்டம் தொடங்கின பின்பு ஒத்திகை செய்வதற்கு அவசியம் இருக்கக்கூடாது.
7 பேச்சுக்களைக் கொடுக்கும் மாணாக்கர்கள் மன்றத்தின் முன்பகுதியில் உட்காரும்படி ஊக்குவிக்கப்படுகின்றனர். இது நேரம் வீணாகாமலிருக்கச் செய்கிறது மற்றும் பள்ளிக் கண்காணி தன் குறிப்புகளைத் தனிப்பட்ட முறையில் கொடுக்கவும் உதவிசெய்கிறது. பள்ளி துணைநூல் ஆனதை ஆதாரமாகக்கொண்டு அவர் கொடுக்கும் தயவான, தனிப்பட்ட ஆலோசனைகளிலிருந்து எல்லாரும் பயனடையலாம். பேச்சு ஆலோசனை சீட்டில் கொடுக்கப்பட்ட வரிசை ஒழுங்கில் அந்தப் பேச்சுக் குறிப்புகளை அவர் பின்பற்றாமலிருக்கலாம்; மிகச் சிறந்த முன்னேற்றம் செய்வதற்கு உங்களுக்குத் தற்போது தேவைப்படுவதை ஆதாரமாகக் கொண்டு ஓர் ஆலோசனைக் குறிப்பைத் தெரிந்தெடுப்பார்.
8 ஒவ்வொரு வாரமும் தேவராஜ்ய ஊழியப் பள்ளிக்காகத் தயாரித்து வந்திருக்கும்படி இவை யாவும் நமக்கு நல்ல காரணங்கள். நாம் பெறும் போதனை, நம்முடைய ஊழியத்தில் ஞானமாயும் திறம்பட்டோராயும் இருக்கும்படி நமக்கு உதவிசெய்யக்கூடும்.—நீதி. 1:5.