மே மாத ஊழியக் கூட்டங்கள்
மே 2-ல் துவங்கும் வாரம்
பாட்டு 20 (74)
5 நிமி:சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து பொருத்தமான அறிவிப்புகளும். தெரு ஊழியம் அல்லது சாயங்கால ஊழியம் போன்ற வெளி ஊழிய நடவடிக்கைகளை விரிவாக்குவதற்குரிய எதாவது ஏற்பாடுகளைத் திரும்பக் கூறுங்கள்.
15 நிமி:“கோடைக்காலத்தின்போது தேவராஜ்ய நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுங்கள்.” கேள்வி பதில்மூலம். துணைப் பயனியர் ஊழியம் செய்கையில் அல்லது சந்தர்ப்ப சாட்சிகொடுக்கையில் சிலர் அனுபவித்து மகிழ்ந்த அனுபவங்களைக் கூறுங்கள்.
10 நிமி:“நான் தொடர்ந்து மாற்றுவது தேவைப்படுகிறதா?” இரண்டு மூப்பர்கள் கலந்துரையாடல். வெளி ஊழியத்தில் தவறாமல் பங்குகொள்வதன் நன்மைகளை அறிவுறுத்துங்கள்.
15 நிமி:“சத்தியத்தைப் பகிர்ந்துகொள்ள பத்திரிகைகளைப் பயன்படுத்துங்கள்.” சபையாரோடு கலந்தாலோசியுங்கள். நம்முடைய பத்திரிகைகளை வேறுபடுத்துவது எதுவென்பதையும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவற்றை அளிக்கும்படி இது ஏன் நமக்கு உள்நோக்கத் தூண்டுதல் அளிக்க வேண்டும் என்பதையும் விளக்குங்கள். சுருக்கமான இரண்டு நடிப்புகளை ஒழுங்குசெய்யுங்கள்.
பாட்டு 128 (89), முடிவு ஜெபம்.
மே 9-ல் துவங்கும் வாரம்
பாட்டு 214 (82)
10 நிமி:சபை அறிவிப்புகள். வீடுவீடாகச் செய்யும் ஊழியத்தில் அவற்றை அளிக்கையில், சந்தாக்கள் பெறும் எல்லா வாய்ப்புகளுக்கும் நாம் விழிப்புள்ளோராக இருக்க வேண்டும். சந்தா சீட்டை எவ்வாறு நிரப்பி மூன்று பிரதிகள் எடுப்பதென்பதை விளக்குங்கள்.
20 நிமி:“ஊழியத்துக்காக பைபிள் மாணாக்கர்களை ஆயத்தம் செய்யுங்கள்.” கேள்வி பதில்மூலம். 4-ம் 5-ம் பாராக்களுக்கு வருகையில், கதவண்டை சாட்சி கொடுப்பதற்குத் தயாரிக்கும்படி மாணாக்கருக்கு உதவிசெய்வது எவ்வாறெனக் காட்டும் சுருக்கமான நடிப்பைக் கொண்டிருங்கள். மாணாக்கர் சங்கீதம் 37:11-ஐப் பயன்படுத்தி எளிதான பிரசங்கம் கொடுப்பதோடு தொடங்குகிறார். கற்பிப்பவர் தடுத்து: “எனக்கு என் சொந்த மதம் இருக்கிறது” என்று சொல்கிறார். மாணாக்கருக்கு என்ன சொல்வதென்று தெரிகிறதில்லை. இருவரும் நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தை எடுத்து 18-ம் 19-ம் பக்கங்களுக்குத் திருப்பி, ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ள பதில்கள் சிலவற்றை மறுபார்வையிட்டு, மாணாக்கர் எளிதாக உணரும் ஒன்றைத் தெரிந்தெடுக்கின்றனர். மாணாக்கர் திரும்பவும் பேசத்தொடங்கி நல்ல பதிலைக் கொடுக்கிறார், அதன் பலன்களால் ஊக்குவிக்கப்பட்டவராக உணருகிறார்.
15 நிமி:புதிய வருடாந்தரப் புத்தகத்தைக் குடும்பம் பயன்படுத்துதல். 1994 வருடாந்தரப் புத்தகத்தின் முதல் 33 பக்கங்களிலுள்ள அறிமுக செய்தியின் ஊக்கமூட்டும் மறுபார்வையிடுதலில் குடும்பத் தலைவர் குடும்பத்தாரை வழிநடத்துகிறார். ஒவ்வொரு வாரமும் வருடாந்தரப் புத்தகத்திலிருந்து சில பக்கங்களை வாசிக்கும்படி குடும்பத்தாருக்கு ஏற்பாடுகளைத் திட்டமிடுவதால் முடிக்கிறார்.
பாட்டு 139 (74), முடிவு ஜெபம்.
மே 16-ல் துவங்கும் வாரம்
பாட்டு 173 (45)
10 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையையும் நன்கொடை ஒப்புகைகளையும் வாசியுங்கள். தற்போது அளிக்கும் தற்போதைய பத்திரிகைகளில் பேச்சுக் குறிப்புகளைக் குறிப்பிடுங்கள்.
17 நிமி:“அக்கறை காட்டியவரை மறுபடியும் சந்தியுங்கள்.” கேள்வி பதில் மூலம். குறிப்பிடப்பட்ட பிரசங்கங்களில் ஒன்று அல்லது இரண்டை நடித்துக் காட்ட செய்யுங்கள்.
18 நிமி:“தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து முழுமையாகப் பயனடைதல்.” பேச்சும் பள்ளிக் கண்காணி சபையாரோடு கலந்தாராய்தலும். பேச்சு நியமிப்புகளை ஏற்று நிறைவேற்றும்படி எல்லாரையும் ஊக்கப்படுத்துங்கள். வாரந்தோறும் வாசிக்கவேண்டிய பைபிள் வாசிப்பில் முன்னேறிக்கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை அறிவுறுத்துங்கள். மாணாக்கருக்குக் கொடுக்கப்படும் ஆலோசனையிலிருந்து முழு சபையும் எவ்வாறு பயன்பெறலாம் என்பதை விளக்குங்கள்.
பாட்டு 53 (27), முடிவு ஜெபம்.
மே 23-ல் துவங்கும் வாரம்
பாட்டு 192 (103)
10 நிமி:சபை அறிவிப்புகள். தற்போதைய பத்திரிகைகளில் சிறப்பான கட்டுரைகளை மறுபார்வையிட்டு, ஒன்று அல்லது இரண்டு சுருக்கமான பிரசங்க அளிப்புகளை ஏற்பாடு செய்யுங்கள். வாரமுடிவு வெளி ஊழிய ஏற்பாடுகளைக் குறிப்பிடுங்கள்.
20 நிமி:“ஆலோசனை கொடுக்கையில் நீங்கள் மற்றவர்களை மதிக்கிறீர்களா?” பிப்ரவரி 1, 1994-ன் காவற்கோபுரம் (மாதம் இருமுறை வரும் பதிப்புகள்) பக்கங்கள் 25-9-ஐ ஆதாரமாகக் கொண்ட மூப்பரின் பேச்சு.
15 நிமி:1994-ன் வருடாந்தரப் புத்தகத்திலிருந்து நன்மையடைதல். 1994-ன் வருடாந்தரப் புத்தகம், பக்கங்கள் 10-18-ல் உள்ள தகவலின்பேரில் மூப்பரும் உதவி ஊழியரும், தேவராஜ்ய அமைப்புக்கு மதித்துணர்வைக் கட்டியெழுப்புவதற்குப் பயன்படுத்தக்கூடிய ஊக்கமூட்டும் குறிப்புகளைக் கலந்தாலோசிக்கின்றனர்.
பாட்டு 19 (111), முடிவு ஜெபம்.
மே 30-ல் துவங்கும் வாரம்
பாட்டு 204 (109)
10 நிமி:சபை அறிவிப்புகள். தேவராஜ்ய செய்திகள்.
15 நிமி:ஜூன் மாதத்திற்குரிய புத்தக அளிப்பை மறுபார்வையிடுதல்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் அல்லது உயிர்—அது எவ்வாறு இங்கு வந்தது? பரிணாமத்தின் மூலமா படைப்பின் மூலமா? (Life—How Did It Get Here? By Evolution or by Creation?) இரு புத்தகங்களிலுமுள்ள கவர்ச்சிகரமான படங்களுக்கு படைப்பு புத்தகத்தின் பக்கங்கள் 6, 236, 243, மற்றும் 245 போன்றவற்றிற்கு கவனம் செலுத்த வையுங்கள். இந்தப் படங்கள் ஒன்றை ஆதாரமாகக் கொண்டு, வெளிப்படுத்துதல் 21:4-ஐ பயன்படுத்தி சுருக்கமான பிரசங்க அளிப்பைத் திறம்பட்ட பிரஸ்தாபி நடித்துக் காட்ட செய்யுங்கள். வரும் வாரத்தில் வெளி ஊழியத்துக்கான ஏற்பாடுகளைக் குறிப்பிடுங்கள்.
20 நிமி:சபை தேவைகள் அல்லது (மாதம் இருமுறை வரும்பதிப்புகள்) காவற்கோபுரம் ஏப்ரல் 15 பக்கம் 19-ல் உள்ள “உண்மையில் அது திருடுதானா?” என்ற கட்டுரையை ஆதாரமாகக்கொண்டு, தகுதிபெற்ற மூப்பரின் பேச்சு. இதே கட்டுரை மாதாந்தர பதிப்புகளில் ஏப்ரல் 1 வெளியீட்டின் பக்கம் 31-ல் தோன்றியது.
பாட்டு 12 (52), முடிவு ஜெபம்.