உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 5/94 பக். 3
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1994
நம் ராஜ்ய ஊழியம்—1994
km 5/94 பக். 3

அறிவிப்புகள்

◼ புத்தக அளிப்புகள் மே: காவற்கோபுரம் அல்லது விழித்தெழு! ஓர் ஆண்டு சந்தா 60.00 ரூபாய். மாதம் இருமுறைவரும் பதிப்புகளுக்கு ஆறுமாத சந்தாக்களும் மாதாந்தர பதிப்புகளுக்கு ஓர் ஆண்டு சந்தாக்களும் 30.00 ரூபாய். (மாதாந்தர பதிப்புகளுக்கு ஆறுமாத சந்தாக்கள் இல்லை.) ஜூன்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்ற புத்தகம் 40.00 ரூபாய் நன்கொடைக்கு. இது ஏற்கப்படாத இடத்தில், 192 பக்க புத்தகம் ஏதாவது வழக்கமான வீதமாகிய 12.00 ரூபாய்க்கு அளிக்கலாம். ஆங்கிலத்தில், உயிர்—அது எவ்வாறு இங்கு வந்தது? பரிணாமத்தின் மூலமா படைப்பின் மூலமா? என்ற புத்தகத்தையும் 40.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். ஜூலை: 32-பக்க சிறுபுத்தகங்கள் ஏதாவது மூன்று ஒன்றுசேர 3.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். எங்களிடம் கிடைக்கக்கூடிய சிறுபுத்தகங்களின் ஒரு பட்டியலுக்கு, தயவுசெய்து ஏப்ரல் நம் ராஜ்ய ஊழியத்தைப் பாருங்கள். குறிப்பிட்ட ஒரு மொழியில் சிறுபுத்தகங்கள் கிடைக்கக்கூடியவையாக இல்லையெனில், ஒரு சிற்றேட்டைப் பயன்படுத்தலாம். ஆகஸ்ட்: நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்? என்ற சிற்றேடு 4.00 ரூபாய் நன்கொடைக்கு. இது கிடைக்காத இடத்தில், அல்லது மற்றொரு பொருள் அதிகப் பொருத்தமாகவுள்ள இடத்தில், பள்ளி சிற்றேடு அல்லாமல் மற்ற எந்தச் சிற்றேட்டையாகிலும் பயன்படுத்தலாம்.

◼ வரவிருக்கிற “தேவ பயம்” மாவட்ட மாநாடுகளுக்காக அறை வேண்டுகோள் நமூனாக்கள் தேவைப்படும் சபைகள் தங்கள் ஆர்டரை இந்த அலுவலகத்துக்குச் சாதாரண காகிதத் தாளில் எழுதி, ‘கன்வென்ஷன் டெஸ்க்’ என்று குறிக்கப்பட்ட ஓர் உறையில் அனுப்ப வேண்டும்.

◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:

ஆங்கிலம்: உவாட்ச் டவர் பப்ளிக்கேஷன்ஸ் இன்டெக்ஸ் 1991-1992, பயனியர்களுக்கு 8.00 ரூபாய், பிரஸ்தாபிகளுக்கும் பொதுவானோருக்கும் 12.00 ரூபாய். குஜராத்தி மற்றும் ஹிந்தி: என்னுடைய பைபிள் கதை புத்தகம். குஜராத்தி, மராத்தி மற்றும் நேப்பாளி: ஒரே உண்மையான கடவுளுடைய வணக்கத்தில் ஒன்றுபடுதல். கன்னடா, மராத்தி மற்றும் தெலுங்கு: தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல் ஆனதன் 21-லிருந்து 37 வரையான அதிகாரங்கள் அடங்கிய ஒரு சிறுபுத்தகம், பயனியர்களுக்கும் பிரஸ்தாபிகளுக்கும் பொதுவானோருக்கும் 2.00 ரூபாய். (இது நம் ராஜ்ய ஊழியம் ஏப்ரல் பிரதியின் 7-ம் பக்கத்திலுள்ள பெட்டியில் கொடுத்திருக்கும் அறிவிப்பின் திருத்தம் ஆகும். இந்தப் பொருளுரை நம் ராஜ்ய ஊழியத்தில் உட்சேர்க்கையாக இப்போது வராது, ஆனால் ஒரு சிறுபுத்தகமாக நிலையான கையிருப்பாக இருக்கும்.)

◼ மறுபடியும் கிடைக்கக்கூடிய பிரசுரங்கள்:

ஆங்கிலம்: அமெரிக்கன் ஸ்டான்டர்ட் வர்ஷன் பைபிள் (bi11); ஆதரைஸ்ட் வர்ஷன் பைபிள் (கிங் ஜேம்ஸ் வர்ஷன்) (bi10); பரிசுத்த வேதவாக்கியங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பின் விரிவான சொல்விளக்கப்பட்டியல் (Comprehensive Concordance of the New World Translation of the Holy Scriptures); மகிழ்ச்சி—அதைக் கண்டடைவது எவ்வாறு (Happiness—How to Find It); வாசிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்ளுங்கள் (Learn to Read and Write); உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல்; பரிசுத்த வேதவாக்கியங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு (New World Translation of the Holy Scriptures), டீலக்ஸ் (கறுப்பு); யெகோவாவுக்குத் துதிபாடுங்கள் (Sing Praises to Jehovah) (சிறியது); புதிய பூமிக்குள் தப்பிப்பிழைத்தல்; தி எம்ஃபாட்டிக் டயக்ளாட்; தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்; உண்மையான சமாதானமும் பாதுகாப்பும்—இதை நீங்கள் எவ்வாறு கண்டடையலாம்?

◼ கையிருப்பிலிராத பிரசுரங்கள்:

ஆங்கிலம்: பரிசுத்த வேதவாக்கியங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு, பொதுவானது, (bi12).

◼ காவற்கோபுர மாதாந்தர வெளியீடுகளின் மே, 1994 பிரதியிலுள்ள படிப்புக் கட்டுரைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்பதைத் தயவுசெய்து கவனியுங்கள். அந்தப் பத்திரிகையில் வரவிருக்கிற முதல் இரண்டு படிப்பு கட்டுரைகள் அடுத்த மூன்று கட்டுரைகளைப் படித்தப் பின்பு படிக்கப்படும். பக்கம் 2-ல் தோன்றும் படிப்புகளுக்கான அட்டவணை திருத்தமான தேதிகளையும் படிக்கவேண்டிய கட்டுரைகளையும் கொடுக்கிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்