உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 7/94 பக். 3
  • கேள்விப் பெட்டி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேள்விப் பெட்டி
  • நம் ராஜ்ய ஊழியம்—1994
  • இதே தகவல்
  • கேள்விப் பெட்டி
    நம் ராஜ்ய ஊழியம்—1991
  • முன்நின்று வழிநடத்தும் கண்காணிகள்—செயலர்
    நம் ராஜ்ய ஊழியம்—1998
  • யெகோவாவைக் கனப்படுத்துவதில் உங்களால் அதிகத்தைச் செய்யமுடியுமா?
    நம் ராஜ்ய ஊழியம்—1993
  • பயனியர் ஊழியத்தின் ஆசீர்வாதங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1994
km 7/94 பக். 3

கேள்விப் பெட்டி

◼ ஒழுங்கான பயனியர் ஒருவர் தங்கள் சபைக்கு இடம் மாறி வருகையில் சபை செயலாளர் என்ன செய்ய வேண்டும்?

சபை செயலாளர், சபை அறிக்கை கார்டின் (S–1) பின்பக்கத்தில் விடப்பட்டுள்ள வெற்றிடத்தைப் பயன்படுத்தி, அதைச் சங்கத்துக்குத் தெரிவிக்க வேண்டும். இதற்காக ஒரு பத்தி அளிக்கப்படாதபோதிலும், அந்தப் பயனியர் விட்டுவந்த அவருடைய அந்த முந்திய சபையின் பெயரும் காட்டப்பட வேண்டும். அந்தப் பயனியரின் முந்தின சபையின் செயலாளரோடு உடனடியாகத் தொடர்புகொண்டு, அந்தப் பயனியருக்காக வைத்துள்ள கோப்பிலுள்ள சபை-பிரஸ்தாபி பதிவு கார்டுகள் (S–21) எல்லாவற்றையும், அவற்றோடுகூட சபை ஊழிய ஆலோசனைக் குழுவினிடமிருந்து அறிமுகக் கடிதம் ஒன்றையும் கேட்டு வாங்க வேண்டும்.

ஒரு பயனியர் முற்றிலும் புதியதான ஓர் இடமாற்றத்தைச் செய்கையில், அவர் அங்கு குடியேறி காரியங்களை ஒழுங்குபடுத்தியமைத்து, ஊழியம் செய்ய ஒரு நல்ல நடைமுறையொழுங்கை ஸ்தாபிப்பதற்குச் சில சிக்கல்கள் பெரும்பாலும் இருக்கலாம். புதிய சபைக்கு மாறின இந்த மாற்றம் கூடியவரை இக்கட்டில்லாமலிருக்கும்படி மூப்பர்கள் அவருக்கு அன்புள்ள உதவியை அளிக்க முன்வருகையில் ஒரு பயனியர் அதை வெகு நன்றியோடு மதிக்கிறார்.

நினைப்பூட்டுதல்: ஒழுங்கான பயனியர் மாறி வருகையில், அந்தப் பயனியரின் முந்திய சபையின் செயலாளர் S–1 கார்டில் எந்தக் குறிப்பும் செய்யக்கூடாது. அந்தப் பயனியர் மாறிவந்துள்ள சபையின் செயலாளராலேயே அந்தக் குறிப்பு செய்யப்பட வேண்டும். அவ்வாறே, ஒரு பயனியர் சகோதரி மணம் செய்து மற்றொரு சபைக்கு இடம் மாறி சென்றால், அந்தப் பயனியரின் முந்தின சபையின் செயலாளர் சங்கத்துக்குத் தெரிவிக்க வேண்டியதில்லை, ஆனால் அந்தப் பயனியர் இடம் மாறிச் சென்றுள்ள அந்தச் சபையின் செயலாளரே அதைச் சங்கத்துக்குத் தெரிவிக்க வேண்டும். அந்தப் பயனியரின் பெயர் மாற்றத்தையும், அதாவது, பழைய மற்றும் புதிய பெயர்களையும், சபையின் மாற்றத்தையும், அதாவது, அந்தப் பயனியரின் முந்திய மற்றும் தற்போதைய சபையின் பெயர்களையும் காட்ட வேண்டும்.

ஒழுங்கான பயனியர் ஒருவர் அந்த முழுநேர சேவையை விட்டு விலகுகையில் அல்லது ஏதோ காரணத்திற்காக நீக்கப்படுகையில், S–1 கார்டின் பின்புறத்தில் எந்தக் குறிப்பும் எழுதக்கூடாது. அந்தப் பயனியர் சேவித்துக்கொண்டிருந்த அந்தச் சபையின் செயலாளர், ஒழுங்கான பயனியர் சேவையை நிறுத்திவிடுவதற்கான அறிவிப்பு நமூனா (S–206) ஒன்றைச் சங்கத்துக்கு அனுப்ப வேண்டும். இத்தகைய இரண்டு நமூனாக்கள் ஒவ்வொரு சபைக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. மூலப்படிவங்கள் சபையின் நிலையான கோப்பில் வைக்கப்பட வேண்டும், பிரதிகள் தேவைப்பட்டாலும் தேவைப்படுகையிலும் நிழற்பட பிரதிகள் எடுத்துக்கொள்ளலாம். தற்போது இந்த நமூனா உங்களிடம் கோப்பில் இல்லையெனில், பயன்படுத்துவதற்குப் பிரதிகள் எப்போதாவது தேவைப்பட நேரிடக்கூடியதை முன்னிட்டு, கோப்பில் வைப்பதற்கு இரு நமூனாக்கள் அனுப்பும்படி சங்கத்துக்கு எழுதி கேட்கலாம்.

சேவையை நிறுத்திவிடுவதைக் குறித்து சங்கத்துக்குத் தெரிவிக்கையில், அந்த நமூனாவைக் கவனமாக வாசித்து எல்லா பத்திகளையும் நிரப்புங்கள். சேவையை நிறுத்திவிடும் அறிவிப்போடுகூட பயனியரின் அடையாள அட்டையையும் சேர்த்தனுப்புங்கள். அந்தப் பயனியர் தன் அடையாள அட்டையை இழந்துவிட்டிருந்தால் இதை அந்த நமூனாவில் குறிப்பிடுங்கள்.

ஒழுங்கான பயனியர் ஒருவரின் சேவையைக் குறித்ததில் ஏதாவது மாற்றங்களைச் சங்கத்துக்குத் தெரிவிக்கையில், உடனடியாகவும் திருத்தமாகவும் அதைச் செய்து, நுட்பவிவரங்களையும் கொடுங்கள். ‘எங்கள் சபையில் பயனியர் ஒருவர் சேவையை நிறுத்திவிட்டார்’ என்று மட்டுமே கூறி பெயரைக் குறிப்பிடாத ஒரு கடிதம் சிலசமயங்களில் எங்களுக்குக் கிடைக்கிறது. ஒழுங்கான பயனியர் ஒருவர் புதிய சபை ஒன்றுக்கு இடம் மாறிச் சென்று அங்கே அவர் பயனியர் சேவையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறபோதிலும் (S–206) நமூனா எங்களுக்கு அனுப்பப்படுகிறது. ஒரு பயனியர் உங்கள் சபையிலிருந்து இடம் மாறிச் சென்று, மற்றொரு சபையில் ஒழுங்கான பயனியராக அவர் தொடர்ந்து சேவித்துக்கொண்டிருக்கையில் (S–206) நமூனாவை அனுப்பாதீர்கள். அந்தப் பயனியரின் புதிய சபை செயலாளர் இந்தச் சபை மாற்றத்தையும், பெயர் மாற்றம் ஏற்பட்டிருந்தால் அதையும் எங்களுக்குத் தெரியப்படுத்துவார். மேலும் விசேஷித்தப் பயனியர்களின் நடவடிக்கையை சபை அறிக்கை (S–1) கார்டில் தயவுசெய்து அறிவிக்காதீர்கள். இந்தக் கார்டு, சபை பிரஸ்தாபிகள், துணைப் பயனியர்கள், மற்றும் ஒழுங்கான பயனியர்களின் நடவடிக்கைகளை அறிவிப்பதற்கு மாத்திரமே உள்ளது. விசேஷித்தப் பயனியர்கள் தங்கள் அறிக்கைகளை நேரிடையாகச் சங்கத்துக்கு அனுப்புகின்றனர்.

இந்தக் காரியங்களுக்கு நீங்கள் கவனம் செலுத்துவது எங்கள் பதிவுகளை ஒழுங்காக வைத்துவர எங்களுக்கு உதவியாக இருந்து, பிராந்தியத்தின் தேவைகளை நாங்கள் மேம்பட்ட முறையில் பூர்த்திசெய்யும்படி சேவிப்பதைக் கூடியதாக்கும். அதிகரிக்கப்பட்ட வேலையின் அக்கறைகளுக்காகவே இதெல்லாம் செய்யப்படுகிறது. இது யெகோவாவுக்கு மகிமையைக் கொண்டுவரும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்