சத்தியத்தைக் கற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உதவிசெய்யுங்கள்
1 சத்தியத்துக்குச் சாட்சி பகரும்படி இயேசு பூமிக்கு வந்தார். சத்தியம் மற்றவர்களுக்குப் பிரசங்கிக்கப்படும்படி செய்வதற்கு, அவர் தம்முடைய சீஷர்களைப் போதகர்களாக இருக்கும்படி பயிற்றுவித்தார். மற்றவர்களுக்குப் போதிப்பதில் அவர்கள் வெற்றிபெறுவதைப்பற்றி அவர் அவ்வளவு நம்பிக்கையுடன் இருந்ததால் அவர்களைப் ‘பொது போதகர்கள்’ என்றழைத்தார். (மத். 13:52, NW) தான் எடுத்துப் பயன்படுத்தும்படி உண்மையான பொக்கிஷ சேமிப்பையுடைய கற்றுத்தேர்ந்த ஒரு மனிதனுக்கு அவர்கள் ஒவ்வொருவரையும் அவர் ஒப்பிட்டார். இன்று இயேசுவின் சீஷர்கள், ராஜ்ய பிரசங்க ஊழியத்தை விரைவுபடுத்த, அச்சடிக்கப்பட்ட பிரசுரங்களைப் பயன்படுத்துகின்றனர். உதாரணமாக, மற்றவர்கள் சீஷராவதற்கு உதவிசெய்வதில் பயன்படுத்த நமக்கு பல்வேறு சிறு புத்தகங்கள் இருக்கின்றன. இந்த மதிப்புவாய்ந்த கருவிகளை எவ்வாறு பயன்படுத்தலாம்?
2 “பாதுகாப்பான ஓர் எதிர்காலம்—இதை நீங்கள் எப்படிக் கண்டடையலாம்” என்ற சிறு புத்தகத்தை அளிப்பதற்கு வழிநடத்தும் ஓர் உரையாடலைத் தொடங்க நீங்கள் இவ்வாறு கேட்கலாம்:
◼ “மனிதனுடைய எல்லா முயற்சிகளும் இருந்தும், ஏன் பாதுகாப்பான ஓர் எதிர்காலத்திற்கான நம்பிக்கைகள் அதிகம் ஏதும் இல்லாதவையாகத் தோன்றுகிறது என நீங்கள் என்றாவது சிந்தித்ததுண்டா? [பதில்சொல்ல அனுமதியுங்கள்.] இத்தனை முயற்சிகளும் தோல்வியடைந்திருப்பது ஏன் என்பதை பைபிள் விளக்குகிறது.” சங்கீதம் 146:3, 4-ஐ வாசியுங்கள். பாரா 6-ல் உள்ள தகவலின்பேரில் வீட்டுக்காரரோடு காரணம்காட்டி பேசினபின்பு, நீங்கள் இவ்வாறு கேட்கலாம்: “நீண்டகால பாதுகாப்பை யார் நமக்கு உண்மையில் அளிக்கக்கூடியவராக இருக்கிறார்?” வீட்டுக்காரரின் பதிலின்பேரில் சார்ந்து, பாரா 7-லிருந்து பொருத்தமான குறிப்புகளைக் கலந்துபேச நீங்கள் தீர்மானிக்கலாம் அல்லது அடுத்த சந்திப்பில் அதைச் செய்ய ஏற்பாடு செய்யலாம்.
3 “அக்கறையுள்ள ஒரு கடவுள் இருக்கிறாரா?” என்ற சிறு புத்தகத்தை நீங்கள் பயன்படுத்துவதற்கு இது ஒரு வழி:
◼ “இந்த இரண்டு படங்களின் கீழுள்ள குறிப்பில் தோன்றுகிற இந்தக் கேள்வியை பலர் கேட்டிருக்கிறார்கள்? [பக்கங்கள் 6-லும் 7-லும் அடியில் கொடுக்கப்பட்டுள்ள கேள்வியை வாசித்து, பதில்சொல்வதற்கு அனுமதியுங்கள்.] அன்புள்ள கடவுள் ஒரே சமயத்தில் நல்லதையும் கெட்டதையும் செய்யமாட்டாராதலால், இங்கே ஏசாயா 65:21-24-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள அவருடைய வாக்கைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” ஓரளவு அக்கறையைக் காட்டும் ஒரு பதில் உங்களுக்குக் கிடைத்தால், பாரா 37-க்குத் திருப்பி, கடவுளுடைய ராஜ்யம் நிறைவேற்றவிருப்பதை விளக்கிக் கூறுங்கள்.
4 “வாழ்க்கைக்கு இன்னும் அதிகம் இருக்கிறது!” என்ற சிறு புத்தகத்தை அளிக்கையில் நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “பலருடைய வாழ்க்கைத்தரம் மகிழ்ச்சியற்ற, சலிப்பூட்டும் சோர்வான நிலையை எட்டியுள்ளது. வாழ்க்கையை மேலும் பயனுள்ளதாக்க என்ன தேவை என நீங்கள் நினைக்கிறீர்கள்? [வீட்டுக்காரர் தன் எண்ணத்தை வெளிப்படுத்தட்டும்.] கடவுள் நமக்கு மேம்பட்ட காரியங்களை எதிர்காலத்தில் வைத்திருக்கிறாரென பைபிள் காட்டுகிறது. இங்கே வெளிப்படுத்துதல் 21:4, 5-ல் அவர் சொல்வதைப் பாருங்கள்.” பொருத்தமாயிருந்தால், இந்தச் சிறு புத்தகத்தின் 42-ம் பாராவிலுள்ள குறிப்புகளைக் கொண்டு கலந்துபேசுதலைத் தொடருங்கள்.
5 “பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!” என்ற சிற்றேட்டைப் பயன்படுத்தி, ஓர் இளம் பிரஸ்தாபி இவ்வாறு கேட்கலாம்:
◼ “இதைப்போன்ற பரதீஸான பூமியில் வாழ உங்களுக்கு விருப்பமா? [முன்பக்க பின்பக்க அட்டைகளைக் காட்டி, குறிப்புசொல்ல அனுமதியுங்கள்.] இங்கே யோவான் 17:3-ல் பைபிள் இவ்வாறு சொல்வதனால் என் குடும்பத்தாரும் நானும் அங்கே வாழ்வதற்கு ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.” அக்கறை காட்டுவதாகக் கவனித்தால் இந்த வசனத்தை வாசித்தப் பின்பு அந்த ஆள் வாசிப்பதற்கு இந்தச் சிற்றேட்டை அளியுங்கள்.
6 இந்த மாதம் உங்கள் ஊழியத்தில் வேறு சிறு புத்தகங்களையோ சிற்றேடுகளையோ நீங்கள் பயன்படுத்தினால், முன்கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளின்பேரில் உங்கள் அறிமுகங்களையும் பிரசங்கங்களையும் வகுத்தமைக்கலாம். சுருக்கமாகவும், வீட்டுக்காரர்களின் அக்கறையைத் தூண்டுவதற்கு நம்பகமான மற்றும் கட்டியெழுப்பும் குறிப்புகளைச் சொல்லவும் வேண்டுமென்பதை நினைவில் வையுங்கள்.
7 யெகோவா நமக்குச் சத்தியத்தைக் கொடுத்திருக்கிறார். அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு நமக்கு முன் வைக்கப்படும் வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பிரசுரங்களின் மூலமும் நம் உரையாடல்களின் மூலமும் அதை நாம் சந்திக்கும் ஆட்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். இவ்வகையில் மற்றவர்களுக்கு நிலையான நன்மையுண்டாக நம்மைப் பொது போதகர்களாக நிரூபிக்கிறோம்.—மத். 28:19, 20.