மறுசந்திப்பு செய்யப்படுபவரின் அக்கறையை வளர்த்தல்
1 பொருத்தமாகவே ஊழியம் பயிர்த்தொழிலுக்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது, மறுசந்திப்புகள் செய்வது பண்படுத்துதலுக்கும் நீர்ப்பாய்ச்சுதலுக்கும் ஒப்பிடப்பட்டிருக்கிறது. (மத். 13:23; லூக். 10:2; 2 கொ. 9:10) ‘தேவனுக்கு உடன்வேலையாட்களாக’ புதிதாக முளைத்துவரும் எந்த விதையும் முதிர்ச்சியினிடமாக வளர்ந்து கனிகொடுப்பவையாக மாற உதவிசெய்யும் உத்தரவாதம் நமக்கிருக்கிறது. (1 கொ. 3:6, 9) நாம் எவ்வாறு இதைத் திறம்பட்டவிதத்தில் செய்யலாம்?
2 உடனடியாக அக்கறை காட்டக்கூடிய அனைவரையும் மறுசந்திப்புகள் செய்யுங்கள். உங்கள் வீட்டுக்கு வீடு பதிவுச் சீட்டை மறுபார்வைசெய்து, யாரை சந்திப்பது, எதைக் கலந்தாலோசிப்பது என்பதை தீர்மானியுங்கள். பொதுவாக உங்கள் கலந்தாலோசிப்பிற்கான தலைப்புப்பொருள் நீங்கள் முதல் சந்திப்பில் கலந்தாலோசித்ததைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும். மற்ற வேதப்பூர்வ கருத்துக்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என்பதை மனதில் கொண்டவர்களாக இசைந்துகொடுப்பவராய் இருங்கள். இருதயத்தைச் சென்றெட்டும் பைபிளின் வல்லமையை உணர்ந்தவர்களாக அதை எப்பொழுதும் உபயோகிப்பது நல்லது.—எபி. 4:12.
3 நம்முடைய பிரச்னைகள் சிற்றேட்டை ஏற்றுக்கொண்ட ஆட்களிடத்தில் எவ்வாறு பலன்தரும் மறுசந்திப்புகளைச் செய்யலாம் என்பதற்கான ஆலோசனைகளுக்கு ஆகஸ்ட் 1992, நம் ராஜ்ய ஊழியத்தில் பக். 4-ஐப் பார்க்கவும்.
“கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?” சிற்றேட்டை அளித்திருந்தால், இதுபோன்ற ஒன்றைச் சொல்வதன்மூலம் நீங்கள் ஆரம்பிக்கலாம்:
◼ “அநேக உண்மை மனமுள்ள ஆட்கள் கடவுள் இந்தப் பூமியை அழிக்கப்போகிறார் என்று நம்புகையில் மற்றவர்கள், மனிதனே அவ்வாறு செய்துவிடுவான் என்று பயப்படுகிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? [பதிலளிக்க அனுமதியுங்கள்.] பூமியை அழிப்பதற்கு பதிலாக, கடவுள் அதிலுள்ள அநீதியான காரியங்களை சுத்தப்படுத்தி அதை சமாதானத்துக்கும் பாதுகாப்புக்குமான ஓர் இடமாக ஆக்கப்போகிறார் என்று பைபிள் நமக்குச் சொல்லுகிறது.” பக்கம் 22-க்குக் கவனத்தைத் திருப்பி, அங்கு மேற்கோள் காட்டப்பட்டிருக்கிற நீதிமொழிகள் 2:21, 22-ஐ வாசியுங்கள். அக்கறைகாட்டப்பட்டால், வீட்டு பைபிள் படிப்பு ஏற்பாட்டைப்பற்றி விளக்குங்கள் அல்லது சமீப பத்திரிகைகளை அளித்துவிட்டு கடவுளுடைய வாக்குப்பண்ணப்பட்ட புதிய உலகத்தைப்பற்றி மேலுமாக கலந்தாலோசிப்பதற்காக மீண்டும் வருவதற்கு சந்திப்புத்திட்டமிடுங்கள்.
4 நீங்கள் “இதோ!” சிற்றேட்டை அளித்திருந்தால், இவ்வாறு சொல்லலாம்:
◼ “நான் போனமுறை வந்தபோது, உங்களிடம் கொடுத்துவிட்டுப் போன அந்தச் சிற்றேட்டின் அட்டைப் படத்தில் காட்டப்பட்டுள்ளதைப் போலவே பூமியைப் பரதீஸாக்கப்போவதைப் பற்றிய கடவுளுடைய வாக்கை நாம் பைபிளில் படித்தோம். கடவுளுடைய சித்தம் என்ன என்பதையும் அது நம்மை எப்படி பாதிக்கிறது என்பதையும் அதிகமாக கற்றுக்கொள்வதன்மூலம் நாம் இந்த ஆசீர்வாதங்களை அனுபவிக்கலாம்.” யோவான் 17:3-ஐ வாசித்துவிட்டு, பக்கம் 27-ல் உள்ள பாராக்கள் 52, 53-க்குத் திருப்புங்கள். கடவுளுடைய வார்த்தையின் திருத்தமான அறிவை ஏன் உட்கிரகிக்க வேண்டிய தேவையிருக்கிறது என்பதை சுருக்கமாக சிந்தியுங்கள்.
5 “வாழ்க்கையின் நோக்கம்” சிற்றேட்டை அளித்திருந்த, சர்ச்சுக்குச் செல்லும் பின்னணியையுடைய ஒருவரை மறுசந்திப்பு செய்கையில், இவ்வாறு சொல்வதை நீங்கள் பொருத்தமானதாக காணலாம்:
◼ “பெரும்பாலும் கர்த்தருடைய ஜெபத்தை அநேக தடவைகள் நீங்கள் திரும்பத் திரும்ப சொல்லியிருக்கிறீர்கள். கடவுளுடைய ராஜ்யம் வரவேண்டும் என்று நீங்கள் கேட்கும்போது நீங்கள் எதை அர்த்தப்படுத்துகிறீர்கள்?” வீட்டுக்காரருடைய பதிலைத் தொடர்ந்து, பக்கம் 26-ல் உள்ள பாராக்கள் 8, 9-ஐக் குறிப்பிட்டு, பிறகு தானியேல் 2:44-ஐ வாசியுங்கள். கடவுளுடைய ராஜ்யம் வருவது துன்மார்க்கத்திற்கும் துன்பத்திற்கும் ஒரு முடிவைக்குறிக்கும் என்பதை விளக்குவதன்மூலம் ஒருவேளை நீங்கள் உங்கள் சம்பாஷணையைத் தொடரலாம். நாம் கடவுளுடைய பார்வையில் நீதிமான்களாக இருந்தால், நாம் இந்தப் பூமியின் பரதீஸில் நித்திய ஜீவனை அனுபவித்து மகிழலாம் என்பதைக் குறிப்பிடுங்கள்.
6 பிரசுரங்கள் அளிக்கப்பட்டிருந்தாலும், அளிக்கப்படாதிருந்தாலும் செவிகொடுக்க விருப்பமுள்ளவராயிருந்த யாரிடமும் மறுசந்திப்பு செய்யலாம் என்பதை நினைவில்கொள்ளுங்கள். ஒவ்வொரு வாரமும் மறுசந்திப்புகள் செய்வதற்காக திட்டமான நேரத்தைக் கொண்டிருக்க முயற்சிசெய்யுங்கள். நீங்கள் கண்டடைந்த அக்கறையை வளர்ப்பதில் உங்களுடைய ஊக்கந்தளரா முயற்சியை யெகோவா ஆசீர்வதிப்பார். அவருக்கு துதியுண்டாக அது கனிகொடுப்பதாக.—யோவா. 15:8.