ஆகஸ்ட் மாத ஊழியக் கூட்டங்கள்
ஆகஸ்ட் 1-ல் துவங்கும் வாரம்
பாட்டு 159 (67)
15 நிமி:சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து பொருத்தமான அறிவிப்புகளும். இந்த வார இறுதி நாட்களில் வெளி ஊழியத்தில் சிறப்பித்துக்காட்ட சமீப பத்திரிகைகளிலுள்ள பேச்சுக் குறிப்புகளை நடித்துக்காட்டவும்.
15 நிமி:“நம்பிக்கையான மனநிலையைக் காத்துக்கொள்ளுங்கள்.” கேள்விகளும் பதில்களும். பிராந்தியத்தில் அசட்டை மனப்பான்மை அல்லது எதிர்ப்பின் மத்தியிலும் நம்பிக்கையான மனநிலையை எப்படிக் காத்துக்கொள்ள முடிந்திருக்கிறது என்பதை சொல்லமுடிந்த பயனியரையோ நீண்டகாலமாக பிரஸ்தாபியாக இருப்பவரையோ சுருக்கமாக பேட்டிகாணுங்கள்.
15 நிமி:“சிற்றேடுகள்—ஊழியத்திற்கான மதிப்புவாய்ந்த கருவிகள்.” சபையாரோடு கலந்தாலோசிப்பு. ஆலோசனை அளிக்கப்பட்டுள்ள பிரசங்கங்களின் நன்கு தயாரிக்கப்பட்ட இரண்டு நடிப்புகளை ஏற்பாடு செய்யுங்கள். ஆகஸ்ட் மாதத்தில் உபயோகிக்கவிருக்கும் சில சிற்றேடுகளை காட்டுங்கள். இந்த வாரத்தில் ஊழியத்தில் உபயோகிக்க பிரதிகளை பெற்றுச் செல்லுமாறு சபையாருக்கு நினைப்பூட்டுங்கள்.
பாட்டு 142 (93), முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 8-ல் துவங்கும் வாரம்
பாட்டு 216 (49)
10 நிமி:சபை அறிவிப்புகள். தேவராஜ்ய செய்திகள்.
15 நிமி:“உங்கள் சகோதரர்களை நன்கு அறிந்தவர்களாயிருங்கள்.” கேள்விகளும் பதில்களும். பாரா 6-ல் உள்ள ஆலோசனைகளைப் பொருத்திப் பிரயோகித்ததன்மூலம் மற்றவர்களை நன்கறிய முடிந்தவர்களாக ஆனார்கள் என்பதைக் காட்டும் சுருக்கமான அனுபவங்களைச் சபையார் சொல்லும்படி அழைக்கவும்.
20 நிமி:சந்தர்ப்ப சாட்சி கொடுத்தலில் அதிகத்தைச் செய்தல். இந்த ஊழியத்தில் தங்கள் பங்கை எவ்வாறு விரிவுபடுத்தலாம் என்பதை மூன்றோ நான்கோ பிரஸ்தாபிகள் தொகுதியாக கலந்தாராய்கின்றனர். அவர்கள் காவற்கோபுரம், ஜூலை 1, 1988 பக்கங்கள் 21-6-ஐ உபயோகித்து மற்றவர்கள் என்ன செய்திருக்கின்றனர் என்பதை மறுபார்வை செய்து, இவ்வகையான வேலையில் எவ்வாறு தாங்கள் அதிகத்தைச் செய்ய திட்டமிடுகின்றனர் என்பதைப் பற்றி அவர்கள் பேசுகின்றனர். ஊழியத்தின் இந்த அம்சத்தில் சபையார் எவ்வாறு பங்குகொள்ளலாம் என்பதை சிந்திக்கும்படி அக்கிராசனர் அவர்களை உற்சாகப்படுத்துகிறார்.
பாட்டு 182 (97), முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 15-ல் துவங்கும் வாரம்
பாட்டு 166 (90)
5 நிமி:கணக்கு அறிக்கையும் நன்கொடைக்கான நன்றிதெரிவிப்புகளும் உட்பட்ட சபை அறிவிப்புகள்.
15 நிமி:“மறுசந்திப்பு செய்யப்படுபவரின் அக்கறையை வளர்த்தல்.” சபையாரோடு கலந்தாலோசிப்பு. மறுசந்திப்புகள் செய்வதற்கு எப்படி பிரசங்கங்கள் உபயோகப்படுத்தப்படலாம் என்பதைக் காட்டும் இரண்டு 3-நிமிட நடிப்புகளை சேர்த்துக்கொள்ளுங்கள். பைபிள் படிப்புகள் ஆரம்பிக்க முயற்சிசெய்யும்படி உற்சாகப்படுத்துங்கள்.
25 நிமி:“ஒழுங்கான நடைமுறையொழுங்கில் முன்னேறுகிறவர்களாய் தொடர்ந்து நடங்கள்.” கேள்விகளும் பதில்களும்.
பாட்டு 96 (13), முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 22-ல் துவங்கும் வாரம்
பாட்டு 218 (19)
10 நிமி:சபை அறிவிப்புகள்.
20 நிமி:நான் கடவுளிடம் எப்படி நெருங்கிவரக்கூடும்? நடிப்பு. இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்தில் அதிகாரம் 39-ல் உள்ள பொருளைப் பெற்றோர் தங்கள் பருவவயதுப் பிள்ளைகளுடன் கலந்தாலோசிக்கிறார்கள். பக்கங்கள் 315-18-ல் உள்ள “கடவுளுடன் உள்ள உன் நட்பை வெளியரங்கமாக அறிவித்தல்,” என்ற உபதலைப்பை கையாளவும். பிள்ளைகள் வீட்டுக்கு வீடு போவதற்கு வெட்கப்படுவதாகவும் கூட்டங்களை விவரிக்கையில் எப்போதும் ஒரே காரியத்தை கொண்டிருப்பதாகவும், அதிக அடிக்கடி செல்லவேண்டியிருப்பதாகவும் குறைகூறுகின்றனர். பெற்றோர் கனிவான முறையில் அவர்களுக்கு காரியங்களை விளக்கி, யெகோவாவுடன் ஒரு நல்ல உறவை அவர்கள் காத்துக்கொள்ள வேண்டுமென்றால் இத்தகைய நடவடிக்கைகள் அவசியமானவை என்பதற்கு வேதப்பூர்வ நியமங்களை காட்டுகின்றனர்.
15 நிமி:சபையின் தேவைகள். அல்லது ஆங்கில காவற்கோபுரம், ஜூலை 1, 1991 பக்கங்கள் 28-30-ல் உள்ள “நற்செய்தியுடன் மும்முரமாக ஈடுபட்டிருத்தல்” என்ற கட்டுரையின் பேரில் பேச்சுக்கொடுங்கள்.
பாட்டு 184 (36), முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 29-ல் துவங்கும் வாரம்
பாட்டு 199 (105)
13 நிமி:சபை அறிவிப்புகள். வார இறுதி நாட்களுக்கான வெளி ஊழிய ஏற்பாடுகளை குறிப்பிடவும். கோடை கால மாதங்களில் துணைப் பயனியராக சேவித்த அல்லது தங்கள் நடவடிக்கைகளை அதிகரிக்கச் செய்த ஓரிரண்டு பிரஸ்தாபிகளை பேட்டி காணவும். அனுபவித்து மகிழ்ந்த சில சந்தோஷங்களைப் பற்றிக் கூறவும்.
15 நிமி:“நீங்கள் மீண்டும் அணியில் சேர்ந்துகொள்ள முடியுமா?” சபையாருடன் கலந்தாலோசிப்பு. எப்படி ஒருவர் பயனியர் ஊழியத்திற்குள் மீண்டும் பிரவேசித்திருக்கிறார் என்பதை அல்லது இந்தச் சிலாக்கியத்தை அனுகூலப்படுத்திக்கொள்ள குடும்ப அங்கத்தினர் ஒருவருக்கு உதவுவதன்மூலம் ஒரு குடும்பம் எப்படி ஒத்துழைத்திருக்கிறது என்பதை காட்டும் ஏதேனும் உள்ளூர் அனுபவங்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
17 நிமி:செப்டம்பர் மாதத்தில் என்றும் வாழலாம் புத்தகத்தை அளியுங்கள். செப்டம்பர் மாதத்தில் இந்தப் புத்தகத்தை அளித்து படிப்புகளை ஆரம்பிக்க உணர்ச்சியார்வமிக்க முயற்சிகளை எடுக்கும்படி உற்சாகப்படுத்துங்கள். இது 1982-ல் வெளியிடப்பட்டது, அதுமுதல் பைபிள் படிப்புகளை நடத்துவதற்கு பிரதான கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் செய்தியை பிரதிகள் வெளியிடப்பட்ட மாவட்ட மாநாடுகள் கொண்டிருந்தன: “நாம் கொண்டிருக்கும் அதே நம்பிக்கையை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு உதவ எது தேவையோ அதையே இந்தப் புதிய படிப்புப் புத்தகம் கொண்டிருக்கிறது. . . . யெகோவாவிற்கு தங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து, ஏற்கத்தகுந்த விதத்தில் சேவிப்பதற்கு புதியவர்கள் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான பைபிள் சத்தியங்கள் அனைத்தையும் இது கொண்டிருக்கிறது.” 1983-ல் 26,52,323-ல் இருந்து 1993-ல் 47,09,889 பிரஸ்தாபிகளாக அதிகரித்திருக்கின்றனரென்று விளைவுகள் காட்டுகின்றன. இந்தப் புத்தகத்தைப் படிப்பதன்மூலம் எவ்வாறு சத்தியத்தைக் கற்றுக்கொண்டனர் என்பதையோ அதை மற்றவர்களுடன் படிப்பதன்மூலம் எப்படி அவர்களுக்கு உதவிசெய்தனர் என்பதையோ கூறும்படி தனிப்பட்டவர்களை அழையுங்கள். நேரம் அனுமதிக்குமேயானால், இதை அளிக்கையில் சிறப்பித்துக்காட்ட இயலும் இப்புத்தகத்திலுள்ள மற்ற அம்சங்களை குறிப்பிடுங்கள்.
பாட்டு 161 (110), முடிவு ஜெபம்.