உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 6/95 பக். 2
  • ஜூன் ஊழியக் கூட்டங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜூன் ஊழியக் கூட்டங்கள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1995
  • துணை தலைப்புகள்
  • ஜூன் 5-ல் துவங்கும் வாரம்
  • ஜூன் 12-ல் துவங்கும் வாரம்
  • ஜூன் 19-ல் துவங்கும் வாரம்
  • ஜூன் 26-ல் துவங்கும் வாரம்
நம் ராஜ்ய ஊழியம்—1995
km 6/95 பக். 2

ஜூன் ஊழியக் கூட்டங்கள்

ஜூன் 5-ல் துவங்கும் வாரம்

பாட்டு 7 (19)

12 நிமி:சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளும். “மழைக்காலம் மறுபடியும் வந்துவிட்டது!” என்பதை கலந்தாலோசியுங்கள்.

15 நிமி:“யெகோவா வல்லமையை அளிக்கிறார்.” கேள்விகளும் பதில்களும். மே 1, 1992, காவற்கோபுரம், பக்கம் 32-ல் உள்ள அனுபவத்தை விவரியுங்கள்.

18 நிமி:“யெகோவாவே நம் படைப்பாளர்.” சபையாருடன் கலந்தாலோசியுங்கள். படைப்பு (ஆங்கிலம்) புத்தகத்திற்கான பிரசங்கத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் காட்டுகிற ஒரு நடிப்பையும், உள்ளூரில் அளிக்கப்படுகிற 192-பக்க புத்தகங்கள் எதையாகிலும் அளிப்பதைப் பற்றிய மற்றொரு நடிப்பையும் கொண்டிருங்கள். ஏப்ரல், மே மாதங்களில் விநியோகிக்கப்பட்ட ராஜ்ய செய்தியைப் பெற்றுக்கொண்டவர்களைச் சந்தித்து, எவ்வாறு மறுசந்திப்புகள் செய்வது என்பதைப் பற்றிய சுருக்கமான ஆலோசனைகள் சிலவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பாட்டு 17 (12), முடிவு ஜெபம்.

ஜூன் 12-ல் துவங்கும் வாரம்

பாட்டு 221 (73)

10 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.

17 நிமி:“கிறிஸ்து இளைஞருக்கு ஓர் மாதிரியாக.” கேள்விகளும் பதில்களும். செப்டம்பர் 1, 1986, ஆங்கில காவற்கோபுரம், பக்கங்கள் 4-6-லிருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

18 நிமி:“விசுவாசம் இல்லாதவர்களுக்கு உதவுங்கள்.” சபை புத்தகப் படிப்பு நடத்துனர் இரண்டு அல்லது மூன்று பிரஸ்தாபிகளுடன் கட்டுரையை மறுபார்வை செய்து, அந்தப் பொருளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் கலந்தாலோசிக்கிறார். பிரசங்கங்களை ஒருவருக்கொருவர் நடித்துக் காண்பிப்பதன்மூலம் அவர்கள் பழகிப்பார்க்கிறார்கள்.

பாட்டு 122 (94), முடிவு ஜெபம்.

ஜூன் 19-ல் துவங்கும் வாரம்

பாட்டு 80 (8)

10 நிமி:சபை அறிவிப்புகள். இந்த வார வெளி ஊழியத்தில் பயன்படுத்தக்கூடிய சுருக்கமான, இரண்டு அல்லது மூன்று பத்திரிகை அளிப்புகளை நடித்துக்காட்டுங்கள்.

18 நிமி:மற்றவர்களுக்குப் போற்றுதலைத் தெரிவியுங்கள். டிசம்பர் 1, 1994, காவற்கோபுரம், பக்கங்கள் 28-30-ன் பேரில் மூப்பரால் கொடுக்கப்படும் பேச்சு. சபையிலுள்ள மற்றவர்களுக்கு மரியாதையையும் அன்பான அக்கறையையும் காண்பிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திக் கூறுங்கள்.

17 நிமி:“உங்கள் நேரத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்.” கேள்விகளும் பதில்களும். டிவி பார்ப்பதில் செலவழிக்கப்படுகிற நேரம் சம்பந்தமாக, ஜூன் 8, 1992, விழித்தெழு! பக்கம் 11-ல் “கட்டுப்பாடு செய்தல்” என்ற உபதலைப்பின் கீழுள்ள ஆலோசனைகளை மறுபார்வை செய்யுங்கள்.

பாட்டு 208 (105), முடிவு ஜெபம்.

ஜூன் 26-ல் துவங்கும் வாரம்

பாட்டு 75 (58)

15 நிமி:சபை அறிவிப்புகள். மறுசந்திப்புகள் செய்வதன் முக்கியத்துவத்தைச் சுருக்கமாக கலந்தாலோசியுங்கள். நம்முடைய கற்பிக்கும் வேலையின் முக்கியமான பாகம், அக்கறையை வளர்ப்பதற்கு நாம் மீண்டும் செல்லும்போது செய்யப்படுகிறது. பிரசுரங்களை மாத்திரம் வைத்து அநேகர் ஆவிக்குரிய முன்னேற்றத்தைச் செய்ய முடியாது. நாம் மீண்டும் செல்லத் தவறும்போது, அவர்களுக்கு உதவி செய்வதற்கான நம்முடைய மிகச் சிறந்த வாய்ப்பைத் தவறவிடுகிறோம். மறுசந்திப்புகள் பைபிள் படிப்புகளை உருவாக்குகின்றன. ஒரு வாரம் காத்திருப்பதற்குப் பதிலாக, ஓரிரண்டு நாட்களுக்குள்ளாகவே மீண்டும் சந்திக்கச் செல்வதன் மூலம் அநேக பிரஸ்தாபிகள் மிகச் சிறந்த பலன்களைப் பெற்றிருக்கிறார்கள்.—நம் ஊழியம் புத்தகம், பக்கங்கள் 88-9-ஐக் காண்க.

15 நிமி:கேள்விப் பெட்டி. கேள்விகளும் பதில்களும், இது காவற்கோபுர படிப்பு நடத்துனரால் கையாளப்படும். பள்ளி துணைநூல் (ஆங்கிலம்), பக்கங்கள் 91-2-ன்பேரில் கூடுதலான குறிப்புகள் சொல்லுங்கள்.

15 நிமி:ஜூலை மாத பிரசுர அளிப்பை மறுபார்வை செய்யுங்கள். சபையில் கையிருப்பிலுள்ள சிற்றேடுகளின் குறிப்பிடத்தக்க அம்சங்களைக் கலந்தாலோசியுங்கள். வீடுகளில் அவற்றை எவ்வாறு அளிக்கலாம் என்பதை பிரஸ்தாபிகள் சுருக்கமாக நடித்துக்காட்டும்படி செய்யுங்கள். உதாரணமாக: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? (பக்கங்கள் 26-7-க்குத் திருப்பி, விளக்கப்படங்களைச் சுட்டிக்காண்பியுங்கள். பின்பு, வரவிருக்கிற பரதீஸைப் பற்றி சொல்லுகிற வசனங்களில் ஒன்றை கலந்தாலோசியுங்கள்.) வாழ்க்கையின் நோக்கமென்ன—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? (பக்கங்கள் 30-1-க்குத் திருப்பி, மேற்கோளாக கொடுக்கப்பட்டுள்ள வசனங்களில் ஒன்றை சிந்தியுங்கள். பின்பு விளக்கப்படத்தைக் கலந்தாலோசியுங்கள்.) நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில். (பக்கம் 2-ல் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்குக் கவனத்தைத் திருப்பி, பக்கம் 31-ல் காணப்படுகிற ஆறுதலளிக்கும் வேதப்பூர்வமான கருத்துக்கள் ஓரிரண்டின் பேரில் குறிப்பு சொல்லுங்கள்.) தற்சமயம் கையிருப்பில் என்ன சிற்றேடுகள் உள்ளன என்பதை சபையாருக்குத் தெரியப்படுத்துங்கள்.

பாட்டு 225 (18), முடிவு ஜெபம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்