உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 10/95 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1995
நம் ராஜ்ய ஊழியம்—1995
km 10/95 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் அக்டோபர்: விழித்தெழு! அல்லது காவற்கோபுரத்துக்கு சந்தாக்கள். மாதம் இருமுறை வரும் பதிப்புகளுக்கு ஓராண்டு சந்தா 70.00 ரூபாய். மாதாந்தர பதிப்புகளுக்கு ஓராண்டு சந்தாக்களும் மாதம் இருமுறை வரும் பதிப்புகளுக்கு ஆறு-மாத சந்தாக்களும் 35.00 ரூபாய். மாதாந்தர பதிப்புகளுக்கு ஆறு-மாத சந்தாக்கள் கிடையா. சந்தாக்களைப் பெறும்போது, (மாதம் ஒருமுறை வெளிவருகிற) உருது, பஞ்சாபி மொழிகள் தவிர, காவற்கோபுரம் இப்பொழுது இந்திய மொழிகள் அனைத்திலும் நேப்பாளியிலும் மாதம் இருமுறை கிடைக்கிறது என்பதை நினைவிற்கொள்ளுங்கள். விழித்தெழு! மலையாளத்திலும் தமிழிலும் மாதம் இருமுறை வருகிறது, ஆனால் கன்னடம், குஜராத்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் மாதம் ஒருமுறை வருகிறது. விழித்தெழு! பத்திரிகைக்கான தனிப்பட்ட சந்தாக்கள் பெங்காலி, மராத்தி, ஹிந்தி, அல்லது நேப்பாளி மொழிகளில் கிடையா, ஆனால் இந்த நான்கு மொழிகளிலும் விநியோகஸ்தருக்கான காலாண்டு பிரதிகள் சபைகளுக்கு கிடைக்கும். நவம்பர்: கூடியபோதெல்லாம், பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை, பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? என்ற புத்தகத்தோடு சேர்த்து 75.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்க வேண்டும். அல்லது கடவுளுக்காக மனிதவர்க்கம் தேடுதல் என்ற ஆங்கில புத்தகத்தை 45.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். மற்ற மொழிகளில் உள்ள மாற்று வகையான அளிப்புகளின் பேரிலான ஆலோசனைகளுக்கு, ஆகஸ்ட் 1995, நம் ராஜ்ய ஊழியத்தைப் பாருங்கள். டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை 45.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். மாற்று வகையாக, என்னுடைய பைபிள் கதை புத்தகம் அல்லது நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை அதே நன்கொடைக்கு அளிக்கலாம் (என்றும் வாழலாம் புத்தகம் சிறிய அளவு 25.00 ரூபாய்). ஜனவரி: விசேஷ அளிப்பாக நம் ராஜ்ய ஊழியத்தில் முன்பு பட்டியலிடப்பட்டுள்ள 192-பக்க புத்தகங்கள் எவற்றையும் 8.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். இவை கிடைக்காத மொழிகளில், 1995 நவம்பர் மாதத்திற்காக கொடுக்கப்பட்டுள்ள அதே மாற்று வகையான பிரசுரங்களைப் பயன்படுத்தலாம்.

◼ நம் ராஜ்ய ஊழியத்தின் இந்த வெளியீட்டில் உள்ள உட்சேர்க்கை, “1996-க்குரிய தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை” ஆகும், 1996-ம் ஆண்டு முழுவதும் பார்வையிட வைத்துக்கொள்ள வேண்டும்.

◼ இந்தியாவுக்கான மாதாந்தர வெளி ஊழிய அறிக்கையை புரூக்லினுக்கு நாங்கள் அனுப்ப வேண்டிய தேதிக்குப் பின்பாக, ஒவ்வொரு மாதமும் அதிகளவான எண்ணிக்கையில் சபை அறிக்கை (S-1) அட்டைகள் எங்களுக்கு வந்துகொண்டிருக்கின்றன. ஆகவே, பிரஸ்தாபிகள் தங்களுடைய வெளி ஊழிய அறிக்கையை ஒவ்வொரு மாதத்தின் கடைசியில் உடனடியாக கொடுக்கும்படி நினைப்பூட்டுகிறோம். என்றபோதிலும், சபை அறிக்கையை தொகுப்பதற்கு முன்பாக எல்லா பிரஸ்தாபிகளும் தங்களுடைய வெளி ஊழிய அறிக்கைகளைக் கொடுக்கும்வரை செயலாளர்கள் காத்திருக்கக் கூடாது. எப்படியிருந்தாலும் சரி, அடுத்த மாதம் ஆறாம் தேதிக்குப் பிந்தாமல், S-1 அட்டையை கூடுமானவரை எங்களுக்கு அவர்கள் அனுப்ப வேண்டும். அதற்குப் பின்பு வந்துசேர்ந்த நபர்களுடைய அறிக்கைகள், அடுத்த மாத சபை அறிக்கையுடன் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். காலதாமதமாக வந்த அறிக்கைகளைச் சேர்ப்பதும் பிழைகளைத் திருத்துவதும் அடுத்த மாத சபை அறிக்கையில் சபை செயலாளர் செய்ய வேண்டும்—சபை அறிக்கையை அனுப்பிய பிறகு திருத்தப்பட்ட அறிக்கையை சங்கத்திற்கு அனுப்ப வேண்டாம்.

◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:

சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை (T-15) —திபெத்து

1994-க்குரிய காவற்கோபுரம், விழித்தெழு! பவுண்ட் தொகுப்புகள் —ஆங்கிலம்

◼ மறுபடியும் கிடைக்கும் பிரசுரங்கள்:

பாதுகாப்பான ஓர் எதிர்காலம்—இதை நீங்கள் எப்படிக் கண்டடையலாம் —குஜராத்தி, தமிழ், மராத்தி, மலையாளம்

கடவுளுக்கு உண்மையான கீழ்ப்படிதலுக்கான காலம் (முஸ்லிம்களுக்கு) —ஆங்கிலம்

மரணத்தின் மேல் வெற்றி—உங்களுக்குச் சாத்தியமா? —தமிழ்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்