உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 12/95 பக். 5-6
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
  • நம் ராஜ்ய ஊழியம்—1995
நம் ராஜ்ய ஊழியம்—1995
km 12/95 பக். 5-6

தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை

செப்டம்பர் 4 துவங்கி டிசம்பர் 18, 1995 வரையுள்ள வாரங்களின்போது தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சிந்திக்கப்பட்ட பகுதிகளின்பேரில் புத்தகங்களைப் பார்க்காமல் நடத்தப்படும் மறுபார்வை. கொடுக்கப்பட்ட நேரத்தில் உங்களால் கூடிய அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை எழுத ஒரு தனி தாளைப் பயன்படுத்தவும்.

[கவனிக்கவும்: எழுத்துமுறை மறுபார்வையின்போது எந்தக் கேள்விக்கும் விடையளிக்க பைபிளை மட்டுமே உபயோகிக்கலாம். கேள்விகளைப் பின்தொடர்ந்து குறிக்கப்பட்டுள்ள பிரசுரங்கள் உங்களுடைய தனிப்பட்ட ஆராய்ச்சிக்காக. காவற்கோபுர மேற்கோள்கள் எல்லாவற்றிற்கும் பக்கம் மற்றும் பாரா எண்கள் கொடுக்கப்படா.]

பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றும் சரியா தவறா என்று விடையளியுங்கள்:

1. ஏசாயா 66:7-ல் குறிப்பிடப்பட்டுள்ள “ஆண் பிள்ளை,” மேசியானிய ராஜ்யம் 1914-ல் பிறந்ததைக் குறிக்காமல், அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களாலான ஆவிக்குரிய தேசம் 1919-ல் பிறந்ததைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL90 5/1 பக். 15-ஐக் காண்க.]

2. உண்மையுள்ள மன்றாட்டுகள், யெகோவா மற்றபடி செய்யாமலிருந்திருப்பதைச் செய்யும்படியாகத் தூண்டக்கூடும் என்பதைப் புரிந்துகொள்ள ஏசாயா 38:5 நமக்கு உதவி செய்கிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL95 4/1 பக். 14-ஐக் காண்க.]

3. பூமியிலுள்ள அற்ப மனுஷன் சர்வலோகச் சிருஷ்டிகரை வருத்தப்படுத்தவோ சந்தோஷப்படுத்தவோ முடியும். (ஏசா. 63:10) [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL93 6/15 பக். 15.]

4. கருவுறுதலின்போதே உயிர் ஆரம்பிப்பதைப் பற்றி பைபிள் குறித்துக்காட்டுவதை எரேமியா 1:5 ஆதரிக்கிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w89 6/15 பக். 29-ஐக் காண்க.]

5. மற்றவர்களுடைய பாவங்களை மூடுவதற்காக இயேசு கிறிஸ்து ஒரு மீட்கும் பலியாக மரிப்பார் என்று ஏசாயா 53:5, 12 முன்னறிவித்தது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL93 4/1 பக். 14-ஐக் காண்க.]

6. கடவுளுடைய வார்த்தையை நம்முடைய வாழ்க்கையில் அப்பியாசிக்கவும் அதில் காணப்படும் நியமங்கள் உண்மையில் பலனளிப்பவை என்று நேரடியான அனுபவத்தின் வாயிலாக உணரவும் ஏசாயா 48:17 உண்மையில் நமக்குச் சொல்லுகிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL95 3/1 பக். 12-ஐக் காண்க.]

7. யெகோவாவின் சாட்சிகள் அரசியல் நடவடிக்கைகளில் எவ்விதத்திலும் பங்கெடுக்காமல் இருந்தாலும், அரசியல் கட்சியைச் சேர்தல், பதவிக்காகப் போட்டியிடுதல், அல்லது தேர்தலில் ஓட்டுப்போடுதல் போன்ற மற்றவர்கள் செய்யும் காரியங்களில் தலையிடுகிறதில்லை. [uw_TL பக். 166 பா. 12]

8. கிறிஸ்துவுக்கு முன்னான காலத்திலிருந்த கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்களுக்கு, நாம் நம்பிக்கொண்டிருக்கும் புதிய உலகைப் பற்றி எவ்வித அறிவுமில்லை. [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL95 2/15 பக். 11-ஐக் காண்க.]

9. கோரேசின்மேல் சொல்லர்த்தமான எண்ணெய் ஊற்றப்பட்டதாக எந்த அத்தாட்சியும் இல்லாவிட்டாலும்கூட அவர் யெகோவாவால் ‘அபிஷேகம் பண்ணப்பட்டவராக’ ஆனார். (ஏசா. 45:1) [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL93 2/15 பக். 30-ஐக் காண்க.]

10. முழு பக்தியுடனும் கடவுளைச் சேவிப்பதற்கு, சாத்தானின் பூமிக்குரிய ஒழுங்குமுறையை யெகோவா எப்பொழுது அழிப்பார் என்று அந்த நாளையும் மணிநேரத்தையும் கிறிஸ்தவர்கள் அறிந்திருப்பது அவசியம். [uw_TL பக். 176 பா. 2]

பின்வரும் கேள்விகளுக்கு விடையளியுங்கள்:

11. ஒரு கிறிஸ்தவர், இரத்தத்திற்கு விலகி இருப்பது குறித்த தன் தீர்மானத்தைக் குறித்து எப்போது தன் மருத்துவரிடம் பேசவேண்டும்? [uw_TL பக். 158 பா. 9]

12. என்ன வழியில் இயேசு உலகத்தின் பாகமாக இருக்கவில்லை? [uw_TL பக். 161 பா. 2]

13. கடவுளுடைய வார்த்தையைத் தைரியமாகப் பேசுவது எதை அர்த்தப்படுத்துவதில்லை? [uw_TL பக். 175 பா. 13]

14. நாம் உண்மையிலேயே நற்செய்தியை ஏற்றிருந்தால், நமக்கு என்ன பொறுப்பு இருக்கிறது? [uw_TL பக். 169 பா. 2]

15. பூமியிலுள்ள எல்லா ஜனங்களிலும், கடவுளிடமாக ‘உண்மையுள்ள நடத்தையைக் காக்கும் நீதியுள்ள ஜனம்’ எது, மேலும் அந்த ஜனத்துடன் யார் சேர்க்கப்பட்டு வருகின்றனர்? (ஏசா. 26:2, 15, NW) [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL95 1/1 பக். 10-11-ஐக் காண்க.]

16. ஏசாயா 32:1, 2-ன்படி மூப்பர்கள் என்ன முக்கிய பாகத்தை வகிக்கிறார்கள்? [வாராந்தர பைபிள் வாசிப்பு; w93 4/1 பக். 30-ஐக் காண்க.]

17. உலகெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் தெளிவாகக் கண்டுணரக்கூடிய என்ன பலனை தெய்வீகப் போதனை உண்டாக்கியிருக்கிறது? (ஏசா. 54:13) [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL94 3/1 பக். 17-ஐக் காண்க.]

18. ‘இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவை’ (NW) அடையாளங்காட்டும் கூட்டு அடையாளத்தைப்பற்றி மூன்று சுவிசேஷங்கள் எந்தப் புத்தகங்களிலும் அதிகாரங்களிலும் தகவல் அளிக்கின்றன? [uw_TL பக். 178 பா. 5]

19. சனகெரிப்பின் சரித்திரப் பதிவில், யூதேய அரணாகிய லாகீசை முற்றுகையிட்டதன் சம்மந்தமாக பெருமை பாராட்டியதைப்போல, யூத தலைநகராகிய எருசலேமின்மீது வெற்றிகொண்டதாக ஏன் அவனால் பெருமை பாராட்ட முடியவில்லை? (ஏசா. 37:36) [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL93 6/1 பக். 6-ஐக் காண்க.]

20. ஏசாயா 27:1-லுள்ள “லிவியாதான்” என்பதால் சித்தரிக்கப்படுவது யார் மற்றும் என்ன? [வாராந்தர பைபிள் வாசிப்பு; w86 8/15 பக். 31-ஐக் காண்க.]

பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றையும் பூர்த்திசெய்ய தேவைப்படும் சொல் (சொற்கள்) அல்லது சொற்றொடரை அளியுங்கள்:

21. ஒரு கிறிஸ்தவர் மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது, இரத்தம் பயன்படுத்தப்படவேண்டாம் என்று அவர் _________________________ கேட்டுக்கொள்ளவேண்டும்; மேலும் அவர், தன் சிகிச்சையைக் கையாளப்போகும் மருத்துவரிடம் அதைக் குறித்து நேரடியாக _________________________ வேண்டும். [uw_TL பக். 158 பா. 9, தமிழ் புத்தகத்தில் காணப்படுவதன்பேரில் இந்தத் திருத்தத்தைத் தயவுசெய்து கவனியுங்கள்.]

22. நாம் யெகோவாவில் சார்ந்திருப்பதைக் காண்பிக்கும் இரு வழிகள் எவையென்றால் ஒழுங்காக _________________________ வருவதும் தவறாமல் ஒழுங்காய் _________________________ அவரிடம் அணுகுவதுமே ஆகும். [uw_TL பக். 170-172 பா. 5-7]

23. இயேசு யூதர்களுக்கு _________________________ கல்லாக இருந்தார், ஆனால் அஸ்திவாரத்தின் _________________________ அவர் ஆனார்; ஏசாயா 8:14 மற்றும் 28:16-ன் நிறைவேற்றமாக யெகோவா தம்முடைய ஆவிக்குரிய வீட்டை அதன்மேல் கட்டுகிறார். [si பக். 123 பா. 36]

24. எபேசியர் 1:9, 10, (NW)-வில் குறிப்பிடப்பட்டுள்ள நிர்வாகம் _________________________ சுற்றி அமைகிறது, அவர் மூலமாய், மனிதர் கடவுளுக்கு முன்பாக _________________________ நிலைமைக்குள் கொண்டுவரப்படுகிறார்கள், சிலர் _________________________ வாழும் எதிர்பார்ப்புடன், மற்றவர்கள் _________________________ வாழும் எதிர்பார்ப்புடன். [uw_TL பக். 186 பா. 6]

25. ரோமர் 8:19-21-ல் குறிப்பிடப்பட்டுள்ள “தேவனுடைய புத்திரர்,” _________________________ பரிசை அடைந்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட குமாரர்கள்; அவர்கள் இந்தப் பொல்லாத காரிய ஒழுங்குமுறையை _________________________ கிறிஸ்துவோடு பங்குகொண்டு, நடவடிக்கையில் இறங்கியிருப்பதன் அத்தாட்சியை _________________________ உள்ள மனிதர்கள் காணும்போது அவர்கள் வெளிப்படுத்தப்படுவார்கள். [uw_TL பக். 188 பா. 11]

பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றிலும் சரியான விடையைத் தெரிந்தெடுங்கள்:

26. பூர்வ கிறிஸ்தவர்கள், மனிதகுலத்தை வெறுப்பவர்களென ஏளனஞ்செய்யப்பட்டார்கள், ஏனென்றால் அவர்கள் (அவிசுவாசிகளிடம் பேசமாட்டார்கள்; விக்கிரகங்களை வணங்குவதில்லை; வன்முறையும் ஒழுக்கக்கேடுமான பொழுதுபோக்குகளைத் தவிர்த்து விலகியிருந்தார்கள்). [uw_TL பக். 163 பா. 7]

27. மத்தேயு 13:36-43-லுள்ள இயேசுவின் உவமையில், கோதுமை (பூர்வ காலத்து உண்மையுள்ள மனிதர்களை; திரள் கூட்டத்தை; அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களை) குறிக்கிறது; மாறாக, களைகள் (விசுவாசத்தில் இல்லாத அனைவரையும்; போலிக் கிறிஸ்தவர்களை; வேதபாரகரையும் பரிசேயரையும்) குறிக்கின்றன. [uw_TL பக். 179 பா. 7]

28. அரசியல் ஆட்சியாளர் பொய் மதத்தை அழித்தபிறகு, அவர்கள் (வர்த்தக அமைப்பிற்கு; ஐக்கிய நாடுகளுக்கு; யெகோவாவின் பேரரசுரிமையை ஆதரிக்கிறவர்களுக்கு) எதிராகப் பகைமையுடன் திரும்புவார்கள். [uw_TL பக். 182 பா. 13]

29. 1914-ல் சுமார் (1,100; 5,100; 10,100) பேர் சுறுசுறுப்பாக பிரசங்கித்து வந்தனர். [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL94 9/1 பக். 16-ஐக் காண்க.]

30. (தானியேலை; ஏசாயாவை; மோசேயை) தவிர, வேறு எந்தப் பண்டைய தீர்க்கதரிசிகளுடையதைக் காட்டிலும் அதிக முழுமையாக ஏரேமியாவின் வாழ்க்கை சரித்திரத்தை நாம் கொண்டிருக்கிறோம். [si பக். 124 பா. 5]

பின்வரும் வேதவசனங்களைக் கீழ்க்கண்ட கூற்றுகளோடு பொருத்துங்கள்:

லேவி. 17:11, 12; ஏசா. 43:10; எரே. 7:31; யோவா. 8:41, 44, 47; அப். 4:13

31. குறைந்தளவு உலகப்பிரகாரமான கல்வி, ஒருவரை நற்செய்தியின் பயமற்ற அறிவிப்பாளராவதற்கு தகுதியற்றவராக ஆக்குவதில்லை. [uw_TL பக். 172 பா. 8]

32. இரத்தத்தை வேதப்பூர்வமான வகையில் பயன்படுத்தக்கூடிய ஒரே உபயோகம், அதன் பரிசுத்தத்தன்மையைச் சிறப்பித்துக் காட்டி, கிறிஸ்துவுடைய பலியின் மதிப்பை அறிவுறுத்துகிறது. [uw_TL பக். 159 பா. 11]

33. ஒருவருடைய வார்த்தைகளைவிட அவருடைய செயல்களும் அவர் காண்பிக்கும் மனநிலையும் அவருடைய ஆவிக்குரிய தந்தை யார் என்பதை மிகத் தெளிவாக வெளிக்காட்டுகின்றன. [uw_TL பக். 185 பா. 5]

34. யெகோவாவுக்கு முந்தியவர் கிடையாது; அவருக்கு முன்னால் ஒரு கடவுளும் இருக்கவில்லை, அவருக்குப் பின் ஒருவரும் இருக்கப்போவதில்லை; ஏனென்றால் அவர் நித்தியர், ஈடற்ற உன்னதப் பேரரசர். [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL92 4/15 பக். 22-ஐக் காண்க.]

35. இன்று பெரும்பாலான வயதுவந்த பெரியவர்கள் தங்கள் பிள்ளைகளை விக்கிரகங்களுக்குப் பலியாகச் செலுத்துவதைக் குறித்து எண்ணிக்கூட பார்க்கமாட்டார்கள்; இருந்தாலும் பல லட்சக்கணக்கான குழந்தைகள் கருச்சிதைவின் மூலமாக வேண்டுமென்றே அழிக்கப்படுகின்றன, மேலும் லட்சக்கணக்கான இளைஞர்கள் போருக்கு அனுப்பப்பட்டு உயிரிழந்திருக்கின்றனர். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w88 1/15 பக். 31-ஐக் காண்க.]

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்