அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள்
டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை 45.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். மாற்றுவகையாக என்னுடைய பைபிள் கதை புத்தகம் அல்லது நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை அதே நன்கொடைக்கு அளிக்கலாம் (என்றும் வாழலாம் புத்தகம் சிறிய அளவு 25.00 ரூபாய்).
ஜனவரி: விசேஷ அளிப்பாக நம் ராஜ்ய ஊழியத்தில் முன்பு பட்டியலிடப்பட்டுள்ள 192-பக்க புத்தகங்கள் எவற்றையும் 8.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். இந்த வகையைச் சேர்ந்த பின்வரும் புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கின்றன: ஆங்கிலம்: இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா?, மனிதன் வந்தது பரிணாமத்தினாலா படைப்பினாலா? கன்னடம்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக,” “கடவுளால் பொய்ச் சொல்லக் கூடாததாயுள்ள காரியங்கள்;” குஜராத்தி: “உம்முடைய ராஜ்யம் வருவதாக,” நற்செய்தி—உங்களை மகிழ்விப்பதற்கு, நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம்; தமிழ்: இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா?, “உம்முடைய ராஜ்யம் வருவதாக;” தெலுங்கு: இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா?, உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல்; மராத்தி: “உம்முடைய ராஜ்யம் வருவதாக,” பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்; ஹிந்தி: “உம்முடைய ராஜ்யம் வருவதாக,” நற்செய்தி—உங்களை மகிழ்விப்பதற்கு. நம்முடைய பிரச்னைகள், அல்லது “இதோ!” சிற்றேட்டை பெங்காலி மற்றும் பஞ்சாபி தெரிந்தோருக்கு கொடுக்கலாம். வாழ்க்கையை அனுபவியுங்கள் சிற்றேட்டை நேப்பாளி தெரிந்த ஆட்களிடம் அளிக்கலாம். உன் இளமை—அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல் என்ற புத்தகத்தை மலையாளம் விருப்பப்படும் ஆட்களுக்கு 15.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். இந்தப் புத்தகத்தை விசேஷ விலைக்கு அளிக்கக்கூடாது என்பதை தயவுசெய்து கவனியுங்கள்.
பிப்ரவரி: வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! என்ற புத்தகத்தை 50.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். மறுபட்சத்தில், விசேஷ அளிப்பாக நம் ராஜ்ய ஊழியத்தில் முன்பு பட்டியலிடப்பட்டுள்ள 192-பக்க புத்தகங்கள் எவற்றையும் 8.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம்.
மார்ச்: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகம் 25.00 ரூபாய் நன்கொடைக்கு (பெரிய அளவு 45.00 ரூபாய்.)
குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள வெளியீடுகளை இதுவரை தருவித்திராத சபைகள், தங்களுடைய அடுத்த பிரசுர ஆர்டர் நமூனாவில் (S-AB-14) ஆர்டர் செய்யவேண்டும்.
◼ நடத்தும் கண்காணியோ அல்லது அவரால் நியமிக்கப்பட்ட வேறு ஒருவரோ டிசம்பர் 1 அல்லது அதற்கு பிறகு கூடிமானவரை சீக்கிரத்தில் சபையின் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும். இதை செய்தவுடன் சபைக்கு அறிவிக்க வேண்டும்.
◼ 1996-ன் வருடாந்தர வசனம்: “வார்த்தையின்படி செய்வோராகுங்கள்.”—யாக்கோபு 1:22, NW. சபைகள் முன்னதாகவே தங்களுடைய வருடாந்தர வசனப் பலகையை, புதிய வசனத்துடன் ஜனவரி 1, 1996 அன்றோ அல்லது அதற்கு பின்னர் கூடிய விரைவிலோ மாட்ட ஏதுவாக தயார் செய்தால் நலமாயிருக்கும்.
◼ ஒரு வருடத்திற்குத் தேவையான ஊழிய நமூனாக்கள் எல்லா சபைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. எல்லா சபை செயலர்களும் தகுந்த நமூனாக்களை அதற்குரிய சகோதரர்களிடம் கொடுக்க, சரிபார்க்கும் பட்டியல் ஒன்று நமூனாக்களுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த நமூனாக்களை அதற்குரிய நோக்கத்திற்காகத்தான் பயன்படுத்த வேண்டும், வீணாக்கக் கூடாது. பாக்கெட் கிடைத்தவுடன், தயவுசெய்து நமூனாக்கள் அடுத்த வருடத்திற்கு போதுமா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். கூடுதலான நமூனாக்கள் தேவையானால், ஜனவரியிலேயே ஆர்டர் செய்ய வேண்டும். தயவுசெய்து, டிசம்பர் 1996 வரை நீடிக்குமளவு மாத்திரமே ஆர்டர் செய்யவும்.
◼ மறுபடியும் கிடைக்கும் பிரசுரங்கள்:
கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? —மலையாளம்
நீங்கள் ஏன் பைபிளை நம்பலாம் (துண்டுப்பிரதி எண் 13) —தமிழ்
மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை? (துண்டுப்பிரதி எண் 16) —ஆங்கிலம், மலையாளம்
வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? —மலையாளம்