சிலரைக் காப்பாற்ற திரும்பவும் செல்வீர்
1 “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்,” கடவுள் சித்தமுள்ளவராக இருக்கிறார். (1 தீ. 2:4) உதவி செய்வதற்காக நாம் என்ன செய்யலாம்? சத்தியத்தை போதிக்கவேண்டும் என்ற குறிக்கோளுடன் மறுசந்திப்புகளை செய்யுங்கள். நீங்கள் என்ன சொல்வீர்கள்? கீழே உள்ள ஆலோசனைகள் ஒருவேளை உங்களுக்கு உதவக்கூடும்.
2 “நற்செய்தி—உங்களை மகிழ்விக்க” என்ற புத்தகத்தை பெற்றுக்கொண்ட ஒருவரை சென்று பார்க்கையில், மீண்டும் பக்கம் 4-ல் உள்ள படத்தை நீங்கள் காண்பித்து, வீட்டுக்காரரிடம் கேட்கலாம்:
◼ “நான் உங்களிடம் விட்டுச்சென்ற புத்தகத்தை மேற்கொண்டு ஆராய்ந்துபார்த்து, பரதீஸ் பூமிக்கான கடவுள் அளித்துள்ள வாக்குறுதியைச் சிந்தித்தப் பிறகு, மனிதவர்க்கத்திற்காகக் கடவுள் செய்துள்ள இந்த அற்புதமான வாக்குறுதிகளைப் பற்றி நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்?” வீட்டுக்காரரின் பதிலை ஆமோதித்துவிட்டு, அதன்பேரில் சுருக்கமான குறிப்பை சொல்லிய பிறகு, 2-ம் அதிகாரத்தினிடமாகக் கவனத்தை திருப்பலாம், இத்தகைய வாக்குறுதிகள் எவ்வாறு நம்பகமான முறையில் நமக்கு கடத்தப்பட்டிருக்கின்றன என்பதைப் பற்றி கலந்தாராய்வதற்கான ஆலோசனையை அளியுங்கள். மறுபடியும் சந்திப்பதற்கான ஏற்பாட்டை செய்துகொள்ளுங்கள்.
3 “இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா?” என்ற புத்தகத்தை நீங்கள் விட்டுவந்திருந்தால், சம்பாஷணையை இவ்விதமாகத் தொடரலாம்:
◼ “நான் சென்றமுறை இங்கு வந்தபோது, சமாதானமான புதிய உலகை உருவாக்குவதற்கான கடவுளின் நோக்கத்தைப் பற்றியும் அதில் மரணம் இருக்காது என்பதைப் பற்றியும் நாம் பேசினோம். அத்தகையதோர் நம்பிக்கை நம் வாழ்க்கைக்கு உண்மையான நோக்கத்தையும் அர்த்தத்தையும் அளிக்கக்கூடும் என்பதைப்பற்றி நாம் கலந்தாராய்ந்தோம். இப்போது கேள்வி என்னவென்றால், இந்த ஆசீர்வாதங்களுக்கு எல்லாம் நம்மை தகுதியுள்ளவர்களாக ஆக்கிக்கொள்வதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? இந்தக் கேள்விக்கு நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?” பதிலளிக்க அனுமதியுங்கள். பக்கம் 218-ஐ திறந்து, பத்தி 2-லுள்ள கருத்துக்களை கலந்தாலோசியுங்கள், கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதன் மூலம் திடமான விசுவாசத்தை கட்டுவதற்கான தேவையை அழுத்திக்காட்டுங்கள். நம்முடைய பைபிள் படிப்பு திட்டத்தை பயன்படுத்திக்கொள்வதன் மூலம் இதை எவ்வாறு செய்யலாம் என்பதை விளக்குங்கள்.
4 “உம்முடைய ராஜ்யம் வருவதாக,” என்ற புத்தகத்தை அளித்தப்பின், இந்த அணுகுமுறையைப் பின்பற்றலாம்:
◼ “முன்பு நான் வந்தபோது உங்களுடைய கவனத்தை, தம்முடைய ராஜ்யத்தின் மூலம் உலகத்திலுள்ள துன்பத்திற்கும் வன்முறைக்கும் ஒரு முடிவைக் கொண்டுவரவிருக்கும் கடவுளுடைய வாக்குறுதியின் பக்கமாகத் திருப்பினேன். இன்று மனிதவர்க்கத்திற்கு இவ்வளவு அதிகமான துன்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் மத அமைப்புகளையும் அரசியல் அமைப்புகளையும் கடவுள் ஒரு முடிவுக்குக் கொண்டுவருவார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ‘அரசர் அர்மகெதோனில் போரிடுகிறார்’ என்ற 17-ம் அதிகாரத்தை நீங்கள் வாசிக்கலாம். இந்த அதிகாரத்தில் கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை உங்களுடன் கலந்தாராய சில நிமிடங்களை எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்.” ஒருவேளை அந்த நபர் ஒத்துக்கொள்ளக்கூடியவராக இருந்தால், நீங்கள் வசனங்களை வாசித்து, 191-6 வரையுள்ள பக்கங்களில் பத்திகள் 17-24 வரை கொடுக்கப்பட்டுள்ள பொருளை கலந்துபேசலாம்.
5 “உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல்” என்ற புத்தகத்தைப் பெற்றுக்கொண்டவரிடத்தில் நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “நான் மறுபடியும் வந்து, ஒரு நித்திய எதிர்காலத்திற்காக உங்களுடைய குடும்பத்தை நீங்கள் எவ்வாறு தயாரிக்கலாம் என்பதைப்பற்றி இன்னும் அதிகம் சொல்லவேண்டும் என்று இருந்தேன்.” பக்கம் 189-ல் கொடுக்கப்பட்டுள்ள படத்தினிடமாகத் திருப்புங்கள், பக்கம் 188-ல் 15-17 பத்திகளை வாசித்துவிட்டு, இந்த வாக்குறுதியை எவ்வாறு கடவுளுடைய ராஜ்யம் நிறைவேற்றும் என்பதை சுருக்கமாக விளக்குங்கள். ஓர் இலவச வீட்டு பைபிள் படிப்புக்கு அழைப்பு கொடுங்கள்.
6 பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க வேண்டும் என்பதே நாம் மறுசந்திப்பு செய்வதன் இலக்கு என்பதை நினைவில் வையுங்கள். நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகம் விசேஷமாக படிப்புகள் நடத்துவதற்கென்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. பழைய புத்தகங்களைப் பெற்றுக்கொண்டவரை நாம் மீண்டும் சந்தித்து ஒரு பைபிள் படிப்பை உண்மையில் தொடங்கிவிட்டால், இந்தப் புத்தகத்தினிடமாகக் கவனத்தை திருப்புவது நல்லது. பைபிள் படிப்பவர்கள் இரட்சிப்புக்காக யெகோவாவின் நாமத்தை தொழுதுகொள்ள கற்றுக்கொள்கையில் அதிக சந்தோஷத்தை நாம் காணலாம்.—அப். 2:21.