உட்பார்வையோடு பிரசங்கிப்பீர்
1 உட்பார்வையை உடையவர்களாய் இருத்தல் என்பது, நாம் பிரசங்கிக்கும் மக்களைப் பற்றி சிறிதளவேனும் புரிந்துகொள்வதைத் தேவைப்படுத்துகிறது. ஏன்? ஏனென்றால், மக்கள் ஏற்கத்தக்க விதத்தில் ராஜ்ய செய்தியை அளித்திடும் நம் திறமையில் தான், அவர்களுடைய இருதயங்களைச் சென்றெட்டுவதில் நமது வெற்றியே சார்ந்திருக்கிறது. ஜனவரி மாதத்தில், இன்னும் சபையின் கைவசமிருக்கும் விதவிதமான பைபிள் படிப்பு புத்தகங்களை நாம் அளிக்கவிருக்கிறோம். மற்றபடி, உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் என்ற புத்தகத்தை பிரஸ்தாபிகள் பயன்படுத்தலாம், ஆயினும், இதை தெலுங்கில் தவிர, விசேஷ அளிப்புக்கான விலையில் கொடுக்கக்கூடாது. பின்வரும் ஆலோசனைகள் பிரயோஜனமாக இருக்கலாம்.
2 “நற்செய்தி—உங்களை மகிழ்விக்க” (ஆங்கிலம்) என்ற புத்தகத்தை அளிக்க தெரிவு செய்தால், பக்கம் 4-ல் உள்ள படத்தை காட்டிவிட்டு இவ்வாறு சொல்லலாம்:
◼ “பூமிக்காகக் கடவுள் கொண்டிருக்கும் நோக்கத்தைப் பற்றி பைபிள் என்ன கற்பிக்கிறது என்பதை சித்தரிக்கும் ஒரு கலைஞனுடைய படம் இது. ஒரு பரதீஸ் பூமியில் நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ வேண்டுமென்றால் எதை தேவைப்படுத்தும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? [பதிலளிக்க அனுமதியுங்கள்.] வெகு விரைவில், பூமி முழுவதிலும் உண்மையான சமாதானமும் பாதுகாப்பும் மெய்மையான ஒன்றாக இருக்கும் என்றும், பரதீஸ் மீண்டும் நிலைநாட்டப்படும் என்றும் பைபிள் காட்டுகிறது. [சங்கீதம் 37:10, 11-ஐ வாசியுங்கள்.] கடவுள் என்ன செய்ய சித்தங்கொண்டுள்ளாரோ அதிலிருந்து நன்மையடைய நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் புத்தகம் காட்டக்கூடும். இந்தப் பிரதியை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.” பிறகு புத்தகத்தை கொடுங்கள், ஒருவேளை மற்றொரு புத்தகத்துடன் சேர்த்து விசேஷ அளிப்பு விலையில் கொடுக்கலாம்.
3 “இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா?” என்ற புத்தகத்தை அளிப்பீர்களானால், இதைப்போல் சொல்லலாம்:
◼ “உலகமுழுவதிலும் இலட்சக்கணக்கான ஆட்கள் மகிழ்ச்சிக்காக ஏங்குகிறார்கள், அதை கண்டடைவதற்கான அவர்களுடைய அனைத்து முயற்சிகளின் மத்தியிலும், அது அவர்களிடமிருந்து நழுவிவிடுவதைப்போல் தோன்றுகிறது. வாழ்க்கையைப் பலர், சில குறுகிய ஆண்டுகள் வாழ்வதும், பிள்ளைகளை வளர்ப்பதும், மரணம் அணுகும் முன்பே நல்லது நடப்பதற்காக எதிர் நோக்கும் ஒரு காரியமாகக் காண்கிறார்கள்.” பிறகு பக்கம் 168, 2 முதல் 5 பத்திகளில் உள்ள கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள், சங்கீதம் 37:11-ஐ வாசிக்கவும், பக்கம் 164-ல் விவரிக்கப்பட்டுள்ளதைப் போன்று, பரதீஸாகிய ஒரு புதிய உலகை உருவாக்க கடவுள் நோக்கம் கொண்டுள்ளார் என்பதை சுருக்கமாகக் காட்டுங்கள். வீட்டுக்காரரின் குறிப்புக்களைப் பெறுவதற்காகப் பின்வருவதைப்போன்ற ஒரு கேள்வியைக் கேளுங்கள்: “இந்த எதிர்பார்ப்பைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?” பதிலளிக்க அனுமதித்துவிட்டு, அந்தப் புத்தகத்தை மாத்திரம் ரூ. 8.00-க்கு அளிக்கவும் அல்லது மற்றொரு புத்தகத்துடன் சேர்த்து, ரூ. 16.00 நன்கொடைக்கு அளிக்கவும்.
4 ஒருவேளை வீட்டுக்காரர் பைபிள் அறிவு உள்ளவராக இருந்தால், “உம்முடைய ராஜ்யம் வருவதாக,” என்ற புத்தகத்தை நீங்கள் பயன்படுத்தலாம், சமுதாயத்தில் தீர்க்கப்படாமலிருக்கும் பிரச்சினையின் பேரிலுள்ள அப்போதைய செய்தியைச் சொல்வதன்மூலம் ஆரம்பித்து, பிறகு கேளுங்கள்:
◼ “உலகத் தலைவர்களால் இந்தப் பிரச்சினையை எப்போதாவது ஒரு நாள் தீர்க்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? [வீட்டுக்காரரை பதிலளிக்க விட்டுவிட்டு, அதை ஆமோதியுங்கள்.] இந்த விதமான பிரச்சினை இல்லாத உலகில் வாழ்வதை நாம் அனைவரும் போற்றுவோம். நாம் ஜெபிக்கும் கடவுளுடைய அரசாங்க ஆட்சியின் கீழ், இதன் தீர்வு மெய்மையான ஒன்றாக இருக்கும்.” ஏசாயா 32:17, 18-ஐ வாசித்துவிட்டு, கடைசியாக சமாதானமும் பாதுகாப்பும் எவ்வாறு அடையமுடியும் என்பதைக் காட்டுங்கள். பக்கம் 5-ல் ஆரம்பமாகும் முதல் பத்தியையும் வாசியுங்கள், பூமிக்காக கடவுள் கொடுத்திருக்கும் வாக்குறுதிகள் கூடியவிரைவில் நிறைவேறும் என்பதற்கான வேதப்பூர்வ ஆதாரத்தை இந்தப் புத்தகம் அளிக்கிறது என்று விளக்குங்கள். புத்தகத்தை தனிப்பிரதியாக அல்லது பொருத்தமாக இருக்குமென்றால், மற்றொரு புத்தகத்துடன் சேர்த்து அளியுங்கள்.
5 “உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல்” என்ற புத்தகத்தை உபயோகித்து ஒரு சுருக்கமான அறிமுகத்தை அளிக்க நீங்கள் விரும்பினால், புத்தகத்தின் 4-ம் பக்கத்தைத் திறந்து இவ்வாறு கேளுங்கள்:
◼ “குடும்ப ஏற்பாட்டின் மதிப்பீடுகள் மீது எறியப்படும் இன்றைய தாக்குதல்களை அது தாக்குப்பிடிக்குமா?” வீட்டுக்காரரின் பதிலை ஆமோதியுங்கள், பிறகு 5-ம் பக்கத்திலுள்ள முதல் பத்தியை வாசியுங்கள். புத்தகத்தை ரூ. 15.00 நன்கொடைக்கு அளியுங்கள். (தெலுங்குப் பிரதியை மாத்திரம் விசேஷ அளிப்பு விலையாகிய ரூ. 8.00-க்கு அளிக்கவும்.)
6 நல்ல உட்பார்வையைக் கொண்டிருப்பது நாம் சந்திக்கும் ஆட்களின் அக்கறைகளையும் தேவைகளையும் கணிப்பதற்கு உதவும். இதை நீதிமொழிகள் 16:23 நமக்கு உறுதியளிக்கிறது, அது சொல்வதாவது: “ஞானியின் இருதயம் அவன் வாய்க்கு அறிவை யூட்டும்; அவன் உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும்.”