தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஜனவரி 1 முதல் ஏப்ரல் 22, 1996 வரையுள்ள வாரங்களின்போது தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சிந்திக்கப்பட்ட பகுதிகளின்பேரில் புத்தகங்களைப் பார்க்காமல் நடத்தப்படும் மறுபார்வை. கொடுக்கப்பட்ட நேரத்தில் உங்களால் கூடிய அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை எழுத ஒரு தனி தாளைப் பயன்படுத்தவும்.
[கவனிக்கவும்: எழுத்துமுறை மறுபார்வையின்போது எந்தக் கேள்விக்கும் விடையளிக்க பைபிளை மட்டுமே உபயோகிக்கலாம். கேள்விகளைப் பின்தொடர்ந்து குறிக்கப்பட்டுள்ள பிரசுரங்கள் உங்களுடைய தனிப்பட்ட ஆராய்ச்சிக்காக. காவற்கோபுர மேற்கோள்கள் எல்லாவற்றிற்கும் பக்கம் மற்றும் பாரா எண்கள் கொடுக்கப்படா.]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றும் சரியா தவறா என்று விடையளியுங்கள்:
1. ஒரு கிறிஸ்தவர் தன்னைப் பொருத்தவரை தான் சரியான காரியத்தை செய்வதாக உணருகையில், அவருடைய தீர்மானங்கள் நல்லதாக இருக்கும். (நீதி. 14:12) [uw-TL பக். 8 பாரா 8(2)]
2. திரித்துவ போதனை கிறிஸ்தவமண்டலத்திலிருந்து ஆரம்பமானது. [uw-TL பக். 15 பாரா 8]
3. மோசேயின் நியாயப்பிரமாணம் ஒழிந்துவிட்டபோதிலும், முடிவுக்கு வந்ததில் பத்துக் கட்டளைகளும் உட்பட்டிருந்தன என்பதற்கு பைபிள் எந்தவித குறிப்பையும் கொடுக்கிறதில்லை. [rs-TL பக். 348 பாரா 2]
4. ரோமர் 8:16-ஐ ரோமர் 1:2-உடன் ஒப்பிடுவதன் மூலம், மனிதவர்க்கத்தினர் அனைவரையும் ‘தேவனுடைய பிள்ளைகள்’ என்று பவுல் குறிப்பிட்டார் என்பதை புரிந்துகொள்ளலாம். [uw-TL பக். 26 பாரா 12(3)]
5. எரேமியா 31:31, 33-ல் குறிப்பிடப்பட்டுள்ள உடன்படிக்கை, இயேசு தம்மை பின்பற்றும் அபிஷேகம் செய்யப்பட்டவர்களுடன் செய்கிற ஒரு ராஜ்யத்திற்கான உடன்படிக்கையைக் குறிக்கிறது. [si பக். 129 பாரா 38]
6. புலம்பல் புத்தகம் ஐந்து கீர்த்தனைப் பாட்டுகளால் இயற்றப்பட்டுள்ளது, அவற்றில் நான்கு கரந்துறைப் பாட்டு (acrostic) முறையில் இயற்றப்பட்டுள்ளன. [si பக். 130 பாரா 6]
7. இயேசு தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பின், பல்வேறு விதங்களில் தோன்றினார்—ஆனால் தம்முடைய சீஷர்களின் முன்னிலையில் மட்டுமே. [rs-TL பக். 334 பாரா 2]
8. உண்மை கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் பலியில் விசுவாசத்தை காண்பிப்பதன் மூலமும் அவர்கள் தங்களைத் தாங்களே நியாயப்படுத்த முயற்சிக்கிற கிரியைகளிலிருந்து விலகியிருப்பதன் மூலமும் கடவுளுடைய ஓய்வுக்குள் பிரவேசிக்கிறார்கள். (எபி. 4:10) [rs-TL பக். 350 பாரா 1]
9. வெளிப்படுத்துதல் 20:5-ல் (NW) “மரணமடைந்த மற்றவர்கள்” உயிரடைவதைப் பற்றிய அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ள கூற்று, வேறே ஆடுகளின் பூமிக்குரிய உயிர்த்தெழுதலைக் குறிக்கிறது. [rs-TL பக். 338 பாரா 2-பக். 339 பாரா 2]
10. நியாயப்பிரமாணத்திலேயே எந்தக் கட்டளை பிரதானமானது என்ற கேள்விக்கு இயேசு பதிலளித்தபோது, பத்துக் கட்டளைகளிலுள்ள எந்தக் கட்டளையையும் அவர் மேற்கோள் காண்பிக்கவில்லை. (மத். 22:35-40) [rs-TL பக். 348 பாரா 1]
பின்வரும் கேள்விகளுக்கு விடையளியுங்கள்:
11. யெகோவாவினுடைய பெரிதான அன்பு தம்முடைய குமாரனை அனுப்பி அவருடைய ஜீவனை நமக்காக கொடுப்பதற்குத் தூண்டியதால், கடவுளுக்கான நம்முடைய அன்பு என்ன செய்யும்படி நம்மைத் தூண்ட வேண்டும்? (2 கொ. 5:14, 15) [uw-TL பக். 14 பாரா 6]
12. யெகோவாவின் பெயரில் நடத்தல் என்பது எதை அர்த்தப்படுத்துகிறது? [uw-TL பக். 18 பாரா 14]
13. புலம்பல் புத்தகத்தை வாசிப்பதன்மூலம் யெகோவாவின் பண்புகளைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (புல. 3:22, 23, 32) [si பக். 132 பாரா. 13, 15]
14. எசேக்கியேல் மற்றும் இயேசு கிறிஸ்து சம்பந்தமாக என்ன பதம் திரும்பத் திரும்ப பயன்படுத்தப்பட்டிருக்கிறது? [si பக். 133 பாரா 2]
15. பூமியில் ஜீவனுக்காக உயிர்த்தெழுப்பப்படுகிறவர்கள், அவர்களுடைய எதிர்கால செயல்களின் அடிப்படையிலேயே நியாயந்தீர்க்கப்படுவார்கள் என்று நம்புவது ஏன் நியாயமானதாயிருக்கிறது? (ரோ. 6:7) [rs-TL பக். 337 பாரா 5]
16. யெகோவாவின் ஜனங்கள் இன்று அனுபவிக்கிற ஐக்கியத்திற்கு பங்களிக்கிற நான்கு பிரதான காரணிகள் யாவை? [uw-TL பக். 8-9 பாரா. 8, 9]
17. கிறிஸ்துவினுடைய வந்திருத்தலுடன் தொடர்புடைய சம்பவங்கள் அநேக ஆண்டுகளடங்கிய ஒரு காலப்பகுதியில் நடைபெறுகின்றன என்று நாம் ஏன் சரியாகவே சொல்ல முடியும்? (மத். 24:37-39) [rs-TL பக். 341 பாரா 1]
18. யெகோவாவின் குறிப்பிடத்தக்க பண்புகளாகிய அன்பு, நீதி, ஞானம், வல்லமை ஆகியவற்றோடுகூட, யாத்திராகமம் 34:6, சங்கீதம் 86:5, மற்றும் அப்போஸ்தலர் 10:34, 35-ல் இருந்து அவருடைய கவரத்தக்க ஆளுமையைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? [uw-TL பக். 13 பாரா 3]
19. யோவான் 14:9, 10-ஐ லூக்கா 5:12, 13-உடன் ஒப்பிட்ட பிறகு, அவதியுறுகிற மனிதவர்க்கத்தினிடமாக யெகோவா கனிவான இரக்கமுள்ளவராயிருக்கிறார் என்று நாம் ஏன் முடிவுசெய்யலாம்? [uw-TL பக். 25 பாரா 12(1)]
20. கிறிஸ்தவர்கள் ஏன் வாராந்தர ஓய்வுநாளைக் கடைப்பிடிக்கவேண்டிய கடமையில் இல்லை? (ரோ. 10:4) [rs-TL பக். 345 பாரா. 2, 3]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றையும் பூர்த்திசெய்ய தேவைப்படும் சொல் (சொற்கள்) அல்லது சொற்றொடரை அளியுங்கள்:
21. எபெத்மெலேக்_________________________படமாக இருந்தார், இவர்கள்_________________________-ல் பாதுகாக்கப்படுவார்கள், ஏனெனில் அவர்கள் கிறிஸ்துவினுடைய சகோதரர்களாகிய_________________________நட்புகொண்டு உதவிசெய்தார்கள். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w82 10/1 பக். 27 பாரா 11-ஐக் காண்க.]
22. இயேசு ‘ஒரு தேவனாக’ பேசப்பட்டிருக்கிறபோதிலும், யோவான் 17:3-ல் யெகோவாவை அவர்_________________________மெய் தேவன்’ என்பதாக அழைத்தார். யோவான் 20:17-ல் யெகோவாவை_________________________தேவன்,_________________________தேவன்’ என்று குறிப்பிட்டார். [uw-TL பக். 18 பாரா 12]
23. எரேமியா 52:5-11-ல் விவரிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் பொ.ச.மு._________________________-ல் நடந்தன. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w88 4/1 பக். 14 பாரா 18-ஐக் காண்க.]
24. கிறிஸ்துவினுடைய வருகையைத் தொடர்ந்து, ‘கண்கள் யாவும் அவரைக் காணும்’ என்பதாக வெளிப்படுத்துதல் 1:7 குறிப்பிடுகையில்,_________________________பார்வையை அல்ல, ஆனால் மனதின்பிரகாரமாக_________________________குறிப்பிட்டுக் காட்டுகிறது. [rs-TL பக். 343 பாரா 2]
25. இயேசு தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பின் எப்பொழுதும் அதே_________________________தோன்றவில்லை, ஒருவேளை அப்பொழுது அவர்_________________________இருந்தார் என்ற உண்மையை சீஷர்களுடைய மனதில் ஊன்றச்செய்வதற்காகும், அதனால் அவருடைய நெருங்கிய தோழர்களாலும்கூட உடனடியாக அவரை_________________________முடியவில்லை. [rs-TL பக். 335 பாரா 1]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றிலும் சரியான விடையைத் தெரிந்தெடுங்கள்:
26. பைபிள் கடவுளுடைய வார்த்தை, ஏனெனில் (மொழிபெயர்ப்பாளர்கள் அவ்விதமாக அழைத்தனர்; பக்தியுள்ள மனிதர் அதை எழுதினர்; அது எழுதப்படுவதை கடவுள் செயல்படுத்தி வழிநடத்தினார்). [uw-TL பக். 20 பாரா 2]
27. நீங்கள் ஒவ்வொரு நாளும் பைபிளில் வெறுமனே (ஒன்று; இரண்டு; நான்கு) பக்கங்களை வாசித்தால், அதை சுமார் (ஆறு மாதங்களில்; ஒன்பது மாதங்களில்; ஒரு வருடத்தில்) முடித்துவிடலாம். [uw-TL பக். 24 பாரா 9]
28. ஒழுக்க சம்பந்தமான தடைகள், பத்துக் கட்டளைகளை உள்ளிட்ட மோசேயின் நியாயப்பிரமாணத்துடன் முடிவடைந்துவிடவில்லை, ஏனெனில் கிறிஸ்தவ ஏற்பாட்டில் (ஒவ்வொரு சமுதாயமும் அதன் சொந்த ஒழுக்க தராதரங்களடங்கிய தொகுப்பை ஏற்படுத்தும்; மனிதர் தங்களுடைய மனச்சாட்சியின்படி மட்டுமே வழிநடத்தப்பட வேண்டும்; பத்துக் கட்டளைகளில் உள்ள ஒழுக்கத் தராதரங்களில் பெரும்பாலானவை கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் மீண்டும் குறிப்பிடப்பட்டிருந்தன). [rs-TL பக். 349 பாரா 1]
29. யெகோவா எரேமியாவை ‘நகைப்புக்குள்ளாக்கியது,’ (ஆக்கினைத்தீர்ப்பின் செய்தியை பிரசங்கிக்கும்படி ஏமாற்றுவதன் மூலம்; அவர் தன்னுடைய சொந்த பலத்தினால் செய்திருக்க முடியாததை செய்துமுடிப்பதற்கு அவரை பயன்படுத்துவதன் மூலம்; எரேமியா தீர்க்கதரிசனமுரைத்த அழிவைக் கொண்டுவராததன் மூலம்). (எரே. 20:7) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w89 5/1 பக். 31-ஐக் காண்க.]
30. யோவான் 5:28-ல் (NW) காணப்படுகிற ‘ஞாபகார்த்த கல்லறைகள்’ என்ற வார்த்தை (தனிநபர்களுடைய பிரேதக் குழிகளை; மனிதவர்க்கத்தின் பொதுவான பிரேதக் குழியை; மரித்த ஆள் கடவுளால் நினைவுகூரப்படுவதை) குறிக்கிறது. [rs-TL பக். 339 பாரா 3]
பின்வரும் வேதவசனங்களைக் கீழ்க்கண்ட கூற்றுகளோடு பொருத்துங்கள்: நீதி. 3:5, 6; எரே. 23:33; 32:9, 10; புல. 3:44; வெளி. 15:3, 4
31. வணக்கத்தில் உண்மையான ஐக்கியத்திற்கான அடிப்படை, யெகோவாவை அறிந்து, அவருடைய நீதியான வழிகளுக்கு இசைவாக வாழ்வதாகும். [uw-TL பக். 5 பாரா 1]
32. நம்முடைய முழு வாழ்க்கைப் போக்கும்—நாம் எங்கிருந்தாலும் சரி, நாம் என்ன செய்துகொண்டிருந்தாலும் சரி—நம்முடைய சிந்தையும் நம்முடைய உள்ளெண்ணங்களும் கடவுளை மையமாக கொண்டிருக்கின்றன என்பதற்கு அத்தாட்சியளிக்க வேண்டும். [uw-TL பக். 10 பாரா 11]
33. துன்மார்க்கருடைய ஜெபங்களுக்கு யெகோவா செவிகொடுப்பதில்லை. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w87 7/15 பக். 15-ஐக் காண்க.]
34. கடவுளுடைய வார்த்தையிலிருந்து வரும் பாரமான தீர்க்கதரிசன செய்தி, கிறிஸ்தவமண்டலத்திற்கு விரைவில் வரவிருக்கிற அழிவை அறிவிக்கும் தெய்வீக நியாயத்தீர்ப்புடன் சுமரும் கடும் பாரமாகும். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL94 3/1 பக். 12 பாரா. 18, 20-ஐக் காண்க.]
35. யெகோவாவின் உடன் வணக்கத்தாருடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, எழுதப்பட்ட ஒரு ஒப்பந்தம் பிற்காலத்தில் எழும் தப்பபிப்பிராயங்களை தடுக்க முடியும். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL95 5/1 பக். 30-ஐக் காண்க.]