உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 4/96 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1996
நம் ராஜ்ய ஊழியம்—1996
km 4/96 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள்

ஏப்ரல், மே: காவற்கோபுரம் அல்லது விழித்தெழு! சந்தாக்கள். மாதம் இருமுறை வரும் பதிப்புகளுக்கு ஒரு வருட சந்தா ரூ. 90.00. மாதாந்தர பதிப்புகளுக்கான ஒரு வருட சந்தாக்கள், மாதம் இருமுறை வரும் பதிப்புகளுக்கான ஆறு மாத சந்தாக்கள் ரூ. 45.00. மாதாந்தர பதிப்புகளுக்கு ஆறு மாத சந்தா இல்லை. சந்தா மறுக்கப்பட்டால், பத்திரிகைகளின் தனிப்பிரதிகள் ஒவ்வொன்றும் 4.00 ரூபாய்க்கு அளிக்கப்பட வேண்டும். எங்குத் தகுந்த சந்தர்ப்பம் இருக்குமோ அங்கு குடும்ப வாழ்க்கை புத்தகத்தை அளிக்கலாம்.

சந்தாக்களை எடுக்கும்போது, மாதம் ஒருமுறை வரும் பஞ்சாபி, உருது ஆகிய மொழிகளைத் தவிர அனைத்து இந்திய மொழிகளிலும், நேப்பாளியிலும் காவற்கோபுரம் மாதம் இருமுறை வருகிறது என்பதைத் தயவுசெய்து நினைவில் வையுங்கள்.

விழித்தெழு! தமிழிலும் மலையாளத்திலும் மாதம் இருமுறையும், ஆனால் கன்னடத்திலும் குஜராத்தியிலும் தெலுங்கிலும் மாதம் ஒருமுறையும் வருகிறது. பெங்காலி, மராத்தி, அல்லது நேப்பாளி ஆகிய மொழிகளில் விழித்தெழு! பத்திரிகைக்குத் தனி சந்தாக்கள் கிடைப்பதில்லை, ஆனால் காலாண்டு விநியோகிப்போர் பிரதிகள் இந்த நான்கு மொழிகளிலும் சபைகளுக்குக் கிடைக்கின்றன.

ஜூன்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகம் நன்கொடை ரூ. 15.00-க்கு அளிக்கலாம். மாற்றளிப்பாக, நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை நன்கொடை ரூ. 25.00-க்கு அளிக்கலாம் (பெரிய அளவு ரூ. 45.00). எங்குத் தகுந்த சந்தர்ப்பம் கிடைக்குமோ அங்கு குடும்ப வாழ்க்கை புத்தகத்தை மேலே சொல்லப்பட்டிருக்கும் புத்தகங்களில் ஏதேனும் ஒன்றுடன் சேர்த்தும் அளிக்கப்படலாம்.

ஜூலை, ஆகஸ்ட்: பின்வரும் 32 பக்க சிற்றேடுகளில் எதைவேண்டுமானாலும் நன்கொடை ரூ. 5-க்கு அளிக்கலாம்: “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறையுள்ளவராக இருக்கிறாரா?, கடவுளுடைய பெயர் என்றென்றுமாக நிலைத்திருக்கும், நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?, நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்! வாழ்க்கையின் நோக்கம் என்ன—அதை நீங்கள் எப்படிக் கண்டிபிடிக்கலாம்?

குறிப்பு: என்றும் வாழலாம் மற்றும் குடும்ப வாழ்க்கை புத்தகங்களை நன்கு உபயோகிக்கும்படி அனைத்து சபைகளையும் நாங்கள் உற்சாகப்படுத்துகிறோம். இந்தப் புத்தகங்களின் பிரதிகளை, பிரஸ்தாபிகள் தங்களுடன் வருடம் முழுவதும் எப்போதும் எடுத்துச்செல்லவும், ஒவ்வொரு தகுந்த சந்தர்ப்பத்திலும் அவற்றை அளிக்கவும் உற்சாகப்படுத்தப்படலாம். மேற்குறிப்பிட்ட அளிப்புத் திட்டப்பிரசுரங்களை இதுவரை தருவிக்காத சபைகள் தங்களுடைய அடுத்த பிரசுர ஆடர் நமூனாவில் (S-AB-14) தருவிக்கலாம்.

◼ பகல் நேரங்கள் நீளுவதால், எங்கு நடைமுறைக்கு ஏற்ப இருக்குமோ அங்கு மாலைநேர ஊழியத்தில் இன்னும் அதிக நேரத்தைச் சபை செலவிடுவதற்கான ஏற்பாடுகளை மூப்பர்கள் செய்யவேண்டும்.

◼ பயனியர் சேவை அடையாள அட்டை மாற்றீடு செய்யும் முறையில் ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதுமுதற்கொண்டு, ஒழுங்கான பயனியர்கள் இடம்மாறி சென்றால், தங்கள் பெயரை மாற்றினால், தங்கள் அட்டையைத் தொலைத்துவிட்டால் அல்லது நியமிப்பை மாற்றும்படி விண்ணப்பித்தால், ஒழுங்கான பயனியர்களின் மாற்றீடு செய்யப்படும் அட்டைகள், மாதாந்தர விவர அறிக்கையுடன் (statement) சங்கத்தால் அனுப்பிவைக்கப்படும். ஒழுங்கான பயனியர்களின் தேவையான விவரம்பற்றிய எந்தவொரு மாற்றமானாலும், சங்கத்திற்கு உடனுக்குடன் அனுப்பப்படவேண்டும், அதனால், எங்களுடைய கோப்புகளைத் திருத்தமாகவும் நடப்பு விவரத்துடனும் வைத்திருக்க முடியும். மாதாந்தர சபை அறிக்கையில் (S-1), ஒழுங்கான பயனியர் பெயரில் நிகழும் மாற்றங்களைப்பற்றிய பொருத்தமான விவரத்தை செயலாளர் எழுதி அனுப்பும் அதே வழக்கமான முறையில் செய்யப்படவேண்டும். ஒழுங்கான பயனியர் ஒருவர் இடம்மாறி வேறொரு சபைக்குச் சென்றால், அவர் சென்றிருக்கும் சபையின் செயலாளர் அடுத்த S-1-ல் சங்கத்திற்கு அறிவிப்பாரே அன்றி, அந்த ஒழுங்கான பயனியர் விட்டுவந்த சபையின் செயலாளர் அல்ல. மேலும், ஒழுங்கான பயனியர் ஒருவர் சேவையை நிறுத்திவிட்டாலோ, சேவையிலிருந்து நீக்கப்பட்டாலோ, S-206 நமூனாவின் பிரதியைப் பூர்த்திசெய்து, தாமதமின்றி சங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

◼ பிப்ரவரி விவர அறிக்கைகளுடன் ஒவ்வொரு சபைக்கும் வருடாந்தர அயிட்டங்களைத் தருவிக்கும் இரண்டு விசேஷ விண்ணப்ப நமூனாக்கள் அனுப்பிவைக்கப்பட்டன. சபையில் தனிநபர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட குறிப்பான ஆடர்களின் பட்டியலை, ஒவ்வொரு அயிட்டத்துடன் தயவுசெய்து சமன் செய்யுங்கள் மற்றும் நமூனாக்களை முழுமையாகப் பூர்த்திசெய்யுங்கள். ஒரு பிரதியை சங்கத்திற்கு ஏப்ரல் 1, 1996-ல் அனுப்பிவைக்கவும், மற்றொன்றை உங்கள் கோப்புகளுக்காக வைக்கவும்.

◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:

மே 1996 முதல் நம் ராஜ்ய ஊழியம் பஞ்சாபியில் கிடைக்கும் என்பதை அறிவிப்பதில் நாங்கள் சந்தோஷப்படுகிறோம். சபைகள் தங்களுக்குத் தேவைப்படும் எண்ணிக்கையை உடனே எங்களுக்குத் தெரியப்படுத்த ஆரம்பிக்கலாம்.

நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் —பஞ்சாபி

பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம் —பஞ்சாபி

பைபிள் சம்பாஷணைகளை எவ்வாறு ஆரம்பித்து, தொடருவது (நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்திலிருந்து பக்கங்கள் 9-24) —பஞ்சாபி

◼ மறுபடியும் கிடைக்கும் பிரசுரங்கள்:

என்னுடைய பைபிள் கதை புத்தகம் —மிசோ (லுஷாய்)

“ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி” —உருது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்