உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 5/96 பக். 3-6
  • எல்லாருக்கும் எல்லாமாதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எல்லாருக்கும் எல்லாமாதல்
  • நம் ராஜ்ய ஊழியம்—1996
  • துணை தலைப்புகள்
  • 7 ஓர் இந்துவுடன் பேசுவது:
  • 8 ஓர் இந்துவிடம் அல்லது முஸ்லிமிடம் பேசுவது:
  • 10 உரையாடலை நிறுத்தும் பதிற்சொற்கள்:
  • ‘எங்களுக்கு வேண்டாம், அரசியல்வாதிகளிடம் போய் நீங்கள் பிரசங்கம் செய்யுங்கள்.’
  • ‘மேற்கத்திய நாடுகளுக்கு சென்று பிரசங்கியுங்கள், இந்தியா மதபக்தியுள்ள நாடு.’
  • ‘நீங்கள் எங்களைக் கிறிஸ்தவத்துக்கு மதமாறச் செய்விக்க முயற்சி செய்கிறீர்கள்’
  • ‘என் சொந்த மதத்தின் பரிசுத்த புத்தகங்களை மாத்திரமே நான் வாசிப்பேன்’
நம் ராஜ்ய ஊழியம்—1996
km 5/96 பக். 3-6

எல்லாருக்கும் எல்லாமாதல்

கண்டத்தின் பெரும் பரவலான பகுதியாகிய இந்தியாவில், சமீப மாதங்களில் தேவராஜ்ய நடவடிக்கைகளின் எல்லா அம்சங்களிலும் சிறந்த அதிகரிப்புகள் ஏற்பட்டிருப்பதைப் பற்றி கேள்விப்படுவது யெகோவாவின் ஊழியருக்கு மிகுந்த ஊக்கமூட்டுதலுக்குக் காரணமாக இருந்திருக்கிறது. எல்லா வகை பின்சூழல்களிலிருந்தும் மேலும் மேலும் அதிகமான ஆட்கள் சத்தியத்தை ஏற்பதை நாம் காண்கையில், உலகத்தின் மீதிபாகத்தில் இருப்பதுபோல், இந்தியாவிலும், செம்மறியாட்டைப்போன்றவர்களை, மிகுந்த உபத்திரவம் தொடங்குவதற்கு முன்பாகக் கூட்டிச்சேர்ப்பதை யெகோவா ‘தீவிரமாய் நடப்பிக்கிறார்’ என்பதை நாம் மதித்துணருகிறோம். எனினும், நற்செய்தியை அறிந்துகொள்ள செய்வதற்கு, நம்முடைய பிராந்தியத்தில் லட்சக்கணக்கான ஆட்கள் இன்னும் இருப்பதால், செய்வதற்கு இன்னும் அதிக வேலை இருக்கிறதென்பது தெளிவாயுள்ளது.—ஏசா. 60:22.

2 இந்தியாவிலுள்ள மிகப் பல்வேறு வகை மத நம்பிக்கைகளை நாம் கருதுகையில் இவ்வாறு கேட்கலாம்: சத்தியத்தை இன்னுமதிக பலன்தரத்தக்க முறையில் எடுத்துக் கூறுவதற்கு இன்னும் ஏதாவது நாம் செய்ய முடியுமா? வீட்டுக்காரர் இந்துவாக, முஸ்லிமாக, பார்சியாக அல்லது பெயரளவில் கிறிஸ்தவராக, எத்தகையராக இருந்தாலும் ஒரே அறிமுகம் அல்லது உரையாடல் குறிப்பு பொருத்தமாக இருக்குமா? 1 கொரிந்தியர் 9:19-23-ல் (தி.மொ.) நாம் வாசிக்கிறபடி, அப்போஸ்தலனாகிய பவுல், தனக்குச் செவிகொடுத்துக் கேட்போருக்குப் பொருந்தியவாறு தன் அணுகுமுறையை மாற்றி அமைத்துக்கொள்வதில் மிகவும் உணர்வுள்ளவராக இருந்தார். ‘எல்லாருக்கும் எல்லாமாவதில்’ அவருடைய நோக்கம் என்னவாக இருந்தது? அவர் இவ்வாறு சொல்கிறார்: “சுவிசேஷத்தினிமித்தமே, அதில் [மற்றவர்களுடன்] உடன் பங்காளியாகவேண்டுமென்றே, எல்லாவற்றையுஞ் செய்கிறேன்.”

3 ராஜ்ய செய்தியை அறிமுகப்படுத்தவும், மேலுமாகக் கலந்துபேசுவதற்குத் தடையாயிருந்திருக்கக்கூடிய எதிர்ப்புகளைக் கையாளவும் நமக்கு உதவிசெய்வதற்கு, ஏராளமான தகவலை, வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் அளிக்கிறது. இந்த அறிமுகங்களில் பல, பொதுவானவையாக உள்ளன. இவை, ஒருவர் பின்பற்றும் மதம் என்னவாயினும் அல்லது அவர்கள் மதபக்தியுடையவர்களல்லர் என்றாலும் பயன்படுத்தக்கூடியவை. நம்முடைய வெளி ஊழியத்தில் இவை பலன்தரத்தக்கவையாகக் கண்டறியப்பட்டிருக்கின்றன. எனினும், நாம் பெரும்பாலும் சந்திக்கக்கூடிய ஆட்களிடம் பயன்படுத்துவதற்கு மேலும் அதிக குறிப்பான தகவலுக்காக அவ்வப்போது நாங்கள் கேட்கப்பட்டிருக்கிறோம். இந்தத் தேவையை நிரப்புவதற்கு சில ஆலோசனைகளை இங்கே கொடுக்கிறோம், அவற்றைப் பயன்படுத்த நீங்கள் ஒருவேளை விரும்பலாம். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தை நம்முடைய வெளி ஊழிய பையில் நம்மோடு எடுத்துச் செல்லும்படி நாம் ஊக்குவிக்கப்பட்டிருக்கிறோம்; இந்த உட்சேர்க்கையை, உங்கள் துணை சாதனத்தின் நிலையான பாகமாக, அந்தப் புத்தகத்தில் சேர்த்துக்கொள்வது நல்லதாயிருக்கும்.

4 குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சேர்ந்த ஒருவரிடம் பேச நம்முடைய அறிமுகத்தை நாம் அவருக்கு ஏற்ற முறையில் மாற்றியமைக்கையில், நாம் பேசிக்கொண்டிருக்கிற அந்த நபர், உண்மையில் நாம் குறிப்பிட்டு பேசும் மதத்தைச் சேர்ந்தவர்தானா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்வது மனதில் வைக்க வேண்டிய ஒரு முக்கிய காரியமாயிருக்கிறது. உதாரணமாக, இந்துமத சுலோகத்தை, ஒரு சுவஸ்திக்கை, அல்லது இந்துமத தெய்வத்தின் படம் பொறிக்கப்பட்ட பலகையை கதவில் கொண்ட ஒரு வீட்டுக்கு நாம் செல்லக்கூடும். எனினும் கதவண்டை வருகிற நபர் அதில் வாடகைக்குக் குடியிருக்கும் ரோமன் கத்தோலிக்கராக இருக்கலாம். ஆகையால் குறிப்பான பதங்களைப் பயன்படுத்துவதில், அல்லது குறிப்பிட்ட மதவிசுவாசத்தைக் குறிப்பாகத் தெரிவிப்பதில் நாம் பகுத்தறிபவர்களாக இருக்க வேண்டும். இந்தியாவில் வெளி ஊழியம் செய்வதிலுள்ள ஓர் அனுகூலம் என்னவெனில், மற்ற பல நாடுகளில் இருப்பதுபோல் ஆட்கள் பொதுவாய் அவசரப்படுவோராக இல்லை. நம்மை அறிமுகப்படுத்தவும், அந்த நபரின் மதம் அல்லது சமுதாயத்தைத் தீர்மானிக்க நாம் முயற்சி செய்கையில், சிநேகப்பான்மையான வாழ்த்துதல்களைப் பரிமாறிக்கொள்ளவும் சற்று நேரமெடுக்கலாம்.

5 அரசனாகிய சாலொமோன், ‘விரும்பத்தக்க வார்த்தைகளையும் சத்தியத்தின் திருத்தமான வார்த்தைகளையும் கண்டுபிடிப்பதற்கு தேடினார்.’ (பிர. 12:10, NW) ‘சத்தியத்தின் திருத்தமான வார்த்தைகளைப்’ பேசுவதானது நாம் சொல்வதில் எப்போதும் திருத்தமாயிருப்பதைக் குறிக்கிறது. சில சமயங்களில் சகோதரர்கள், தாங்கள் சமயோசித சாதுரியத்துடன் இருப்பதாக நினைத்துக்கொண்டு, ஒருவகையில் உண்மையாயிராத கூற்றுகளை அல்லது விளக்கங்களுக்குப் பதிலைக் கூறுகிறார்கள். உதாரணமாக, ‘நான் கிறிஸ்தவனாகும்படி நீர் விரும்புகிறீர்,’ என்று அடிக்கடி சொல்லப்படுகிறது. அதற்குச் சகோதரர்கள், ‘இல்லை, இல்லவேயில்லை!’ என்று பதில் சொல்லியிருக்கின்றனர். இது உண்மையா? அல்லது இந்துவாக இருக்கும் ஒருவர், தான் ராம்ராஜ்யத்திற்காக எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாகச் சொல்லலாம். அதற்கு நாம், ‘அதைப்பற்றித்தான் நாங்கள் பேச வந்திருக்கிறோம்,’ என்றதைப்போன்ற ஒரு விளக்கத்தைப் பதிலாகச் சொல்வோமா? ‘என் சொந்த மத பரிசுத்த புத்தகங்களை மாத்திரமே நான் வாசிப்பேன்,’ என்று ஒருவர் சொல்கிறார். ‘அது நல்லது’ அல்லது ‘அதைக் கேட்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,’ என்று நாம் பதில் சொல்லலாமா? நம்முடைய வார்த்தைகளைப் பற்றி கவனமாயிருந்து, தூய்மையான, எளிதில் விளங்குகிற ராஜ்ய செய்தியை, கட்டுக்கதைகளிலிருந்தும் மனித தத்துவஞானங்களிலிருந்தும் தனிப்பட பிரித்து வைத்திருப்பது ‘சத்தியத்தின் திருத்தமான வார்த்தைகளை’ நாம் பேசும்படி செய்யும்.

6 நாம் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருப்போருக்குப் பழக்கமான சொற்களையும் அபிப்பிராயங்களையும் நாம் குறிப்பிடமாட்டோமென இது பொருள்படுகிறதில்லை. வீட்டிலுள்ள படங்களால் அல்லது உருவச் சிலைகளால், அல்லது ஒருவேளை அந்த நபரின் பெயரால் அல்லது உடை உடுத்தியிருக்கும் வகையால் காட்டப்பட்டபடி, ஓர் இந்துவைச் சந்திக்க நேரிட்டால், பின்வருமாறு யோசனை கூறப்படுகிற அறிமுகங்களில் ஒன்றை நாம் பயன்படுத்த விரும்பலாம்:

7 ஓர் இந்துவுடன் பேசுவது:

◼ ‘மிக நல்ல ஒரு செய்தியைக் கொண்டுவருவதற்கு, உலகமெங்கும் செய்யும் ஒரு சேவையின் பாகமாக நாங்கள் வந்திருக்கிறோம். உலக நிலைமைகள் நாளுக்குநாள் மோசமாகிக்கொண்டே வருகின்றனவென்பதை நீங்கள் எங்களோடு ஒப்புக்கொள்வீர்கள் என்று நான் நிச்சயமாயிருக்கிறேன். . . . வன்முறையும், தீயச்செயல்களும், முழுமையான ஒழுக்கச் சிதைவும் எதிர்பார்க்கப்படுகிற, ‘கலியுகம்’ என்று நீங்கள் அழைக்கிற காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோமென நீங்கள் ஒருவேளை உணரலாம். பூர்வ பரிசுத்த புத்தகம் ஒன்று எவ்வாறு இந்த நிலைமைகளை விவரித்து, நல்ல காரியங்கள் எதிர்காலத்தில் வரவிருக்கின்றன என்று காட்டுவதை உங்களுக்கு நான் காண்பிக்க விரும்புகிறேன். . . . (2 தீ. 3:1-5; சங். 37:10, 11)’

◼ ‘உங்களோடு ஒரு நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ள நாங்கள் வந்திருக்கிறோம். இன்று நாம் கேள்விப்படும் செய்திகளில் பெரும்பான்மையானவை கெட்டவையாக இருக்கின்றன, அல்லவா? வன்முறை நடத்தையையும், தீயச் செயல்களையும், வேலையில்லாத் திண்டாட்டத்தையும், நோயையும், வறுமையையுமே நாம் எப்போதும் கேள்விப்படுகிறோம் . . . ‘கலியுகம்’ என்று நீங்கள் அறிவது இங்கிருப்பதாக நீங்கள் ஒருவேளை நம்பலாம். ‘சத்யுகம்’ என்று நீங்கள் அழைப்பது நம்முடைய வாழ்நாளில் வருமென்று நீங்கள் நினைக்கிறீர்களா? . . . உலக விவகாரங்களில் கடவுள் தலையிடும்போது, இந்தக் கெட்ட நிலைமைகள் சீக்கிரத்தில் நீக்கப்படும் என்று பூர்வ பரிசுத்த எழுத்துக்களடங்கிய ஒன்றை நாங்கள் ஆராய்ந்தது எங்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது. இப்படித்தான் எழுத்தாளர் ஒருவர் இதை விவரிக்கிறார். (நீதி. 2:21, 22) இந்த நம்பிக்கை நல்ல ஆதாரத்தின்மீது அமைந்துள்ளது. ஒரு மாற்றம் சமீபமாயுள்ளது என்று எங்களை நம்பவைத்திருக்கிற சுருக்கமான தகவலை நாங்கள் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.’

8 ஓர் இந்துவிடம் அல்லது முஸ்லிமிடம் பேசுவது:

ஓர் இந்துவாக இருந்தாலும் அல்லது முஸ்லிமாக இருந்தாலும் இருவருமே, அயலாருடன் சமாதான உறவுகளைப் பற்றிய குறிப்புரைக்குச் சாதகமாகச் செவிகொடுப்பர். பின்வருவதைப்போன்ற ஒன்றை நாம் சொல்லலாம்:

◼ ‘முன்பு ஒருவருக்கொருவர் சிநேகப்பான்மையுடன் இருந்த மக்களுக்கிடையில் வன்முறைச் செயல்கள் அதிகரிப்பதிலிருந்து வந்துகொண்டிருக்கும் பிரச்சினைகளைப் பற்றி உங்கள் அயலாரிடம் நாங்கள் பேசிக்கொண்டு வருகிறோம். ‘நாம் எல்லாரும் சகோதரர்கள்’ என்று சொல்வதை நாம் அடிக்கடி கேட்கிறோம், ஆனால் சகோதர உணர்ச்சி இன்று காணப்படுகிறதா அல்லது அது இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறதா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? . . . வெகுகாலத்துக்கு முன்பான இந்த முன்னறிவிப்பு இன்றைய நிலைமைகளுக்குப் பொருந்துகிறதென்று நினைக்கிறீர்களா? (2 தீ. 3:1-5, [பகுதிகள்]) . . . ஆனால், இந்தக் காரியங்கள் “கடைசிநாட்களில்” இருக்குமென்று இந்தப் புத்தகம் சொல்வதைக் கவனியுங்கள். இந்தக் ‘கடைசிநாட்களுக்குப்’ பின் என்ன நிலைமை வரும் என்பதைப் பற்றிய மேலுமான வாக்குறுதிகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள நான் விரும்புகிறேன்.’

◼ ‘உலகமெங்கும் செய்யும் கல்விசார்ந்த ஓர் ஊழியத்தின் பாகமாக நாங்கள் உங்களைச் சந்திக்கிறோம்; இதில் பங்குகொள்ளுகிறவர்கள் உலக சமாதானத்தைக் காண்பதில் அக்கறையுடையவர்களாக இருக்கின்றனர். இந்த உலகம், பயமோ, வன்முறைச் செயல்களோ, கொடூரச் செயல்களோ இல்லாமல் முற்றிலும் சமாதானமாக என்றாவது இருக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்களா? . . . (அது கடவுளுக்குத்தான் தெரியும் என்று பலர் சொல்வர்; அப்படி சொல்வார்களானால் நாம் மேலும் சொல்லலாம் . . .) நீங்கள் சொல்வதை நாங்கள் முற்றிலும் ஒப்புக்கொள்கிறோம். தேவபக்தியுள்ள ஒரு மனிதன் இதைப் பற்றி சொன்னதைக் கவனியுங்கள். (ஏசா. 2:4) (அவர்கள் கடவுளைக் குறிப்பிடவில்லையென்றால், நாம் இவ்வாறு சொல்லலாம் . . .) இந்தப் பூர்வ ஞானி நம்பினதுபோல், உலக விவகாரங்களைக் கடவுள் என்றாவது கட்டுப்படுத்திக் கையாளுவாரென்று நீங்கள் நினைக்கிறீர்களா? . . . (ஏசா. 2:4)’

9 முஸ்லிமுடன் பேசுவது:

முஸ்லிம்கள் எபிரெய வேதாகமத்திற்கு மதிப்புக் கொடுக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்து, அதிலிருந்து வசனங்களை நாம் பயன்படுத்தி, அவர்களுக்குத் தெரிந்துள்ள பெயர்களைக் குறிப்பிடலாம். நாம் இவ்வாறு சொல்லலாம்:

◼ ‘இன்று எங்கள் சந்திப்பானது ஒரு சர்வதேச ஊழியத்தின் பாகமாக இருக்கிறது. அதில், 50 லட்சத்துக்கு மேற்பட்ட விருப்பார்வ ஊழியர்கள், எல்லா தேசத்தாரும் சமாதானத்தில் வாழ்வதைக் காண்பதில் அக்கறையுடையோரிடம் பேசி வருகின்றனர். அது சிறப்பாயிருக்கும் அல்லவா? . . . கடவுள் ஆபிரகாமுக்குக் கொடுத்த எதிர்காலத்துக்குரிய வாக்குறுதியை நீங்கள் எப்போதாவது வாசித்திருக்கிறீர்களா? (ஆதி. 22:18) எல்லா தேசத்தாரின் ஜனங்களுக்குமுரிய அந்த ஆசீர்வாதத்தைப் பற்றி தீர்க்கதரிசிகள் பலர் சொல்லியிருப்பவற்றை நாங்கள் முழுமையாக ஆராய்ச்சி செய்திருக்கிறோம். இது வெகு சீக்கிரத்தில் வரவிருக்கிறதென்று நாங்கள் நிச்சயமாயிருக்கிறோம். இது நற்செய்தி, இதை நாங்கள் எங்கள் அயலாருடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.’

◼ ‘உங்களை வீட்டில் கண்டதில் நான் சந்தோஷப்படுகிறேன். முஸ்லிமாக நீங்கள் இருப்பதால், மனிதனில் அக்கறையுடையவரும் பூமியிலுள்ள பொல்லாத ஜனங்களை ஒரு நாள் நியாயந்தீர்க்கப் போகிறவருமான சர்வவல்லமையுள்ள ஒரே கடவுளில் நீங்கள் நம்பிக்கை வைக்கிறீர்கள் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். இது எவ்வாறு நிறைவேறும் என்பதைப் பற்றிய இந்த விவரிப்பை வெகு அக்கறையூட்டுவதாக நாங்கள் கண்டோம். (ஏசா. 2:4) இது நடந்த பின்பு பூமி எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றி சொன்ன இதே தீர்க்கதரிசியின் விவரிப்பை நீங்கள் எப்பொழுதாவது வாசித்திருக்கிறீர்களா? . . . (ஏசா. 35:5, 6 அல்லது 65:21, 22)’

10 உரையாடலை நிறுத்தும் பதிற்சொற்கள்:

ஓர் உரையாடலை நிறுத்த செய்விக்கக்கூடிய எதிருரைகளைக் கையாளுவதற்குப் பல வழிகளை நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் நமக்கு அளிக்கிறது. இந்தியாவில் நம்முடைய ஊழியத்தில் நாம் எதிர்ப்படும் பொதுவான சில எதிர்ப்புகளைக் கையாளுவதற்கான வழிகளை இங்கே குறிப்பிடுகிறோம்.

‘எங்களுக்கு வேண்டாம், அரசியல்வாதிகளிடம் போய் நீங்கள் பிரசங்கம் செய்யுங்கள்.’

◼ ‘எனக்குச் சொல்லுங்கள், தலைவர் எவராயினும், தன் நாட்டில் எவ்வளவு வல்லமை அவருக்கு இருக்கிறபோதிலும், இந்த முழு உலகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடுமென்று நீங்கள் உண்மையில் நினைக்கிறீர்களா? . . . ஆகையால், நம்மை எதிர்ப்படும் பிரச்சினைகளை, நீங்களும் நானும் தீர்க்க முடியாததைப்போல், அரசியல்வாதிகளாலுங்கூட, அவர்கள் எவ்வளவு உள்ளப்பூர்வமாக முயற்சி எடுத்தாலும் தீர்க்க முடியாது. ஆனால், மனிதனின் எல்லா பிரச்சினைகளையும் உண்மையில் தீர்க்கக்கூடிய ஒருவர் இருக்கிறார் . . . (ஏசா. 2:4; 65:17, 20, 21)’

◼ ‘அவர்களைச் சந்திக்க முடிந்தபோதெல்லாம் நாங்கள் அதைச் செய்கிறோம். தலைவராயிருந்தாலும் அல்லது பொதுஜனத்தின் ஓர் உறுப்பினராயிருந்தாலும், நம்மெல்லாரையும் எதிர்ப்படுகிற, மூழ்க்கடிக்கும் வகையான பிரச்சினைகள், சீக்கிரத்தில் நீக்கப்படவிருக்கின்றன என்ற இந்த நற்செய்தியை அறிவிப்பதற்கு, வாழ்க்கையின் எல்லா நிலையிலுமுள்ள ஆட்களைச் சந்திப்பது எங்கள் பொறுப்பாயுள்ளது. உண்மை மனமுள்ள அரசியல்வாதிகள், இந்த வாக்குறுதிகளைத் தாங்கள் நம்பக்கூடுமானால் சந்தோஷப்படுவார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களல்லவா? . . . (சங். 46:8, 9; மீ. 4:3, 4)’

◼ ‘உலகமெங்குமுள்ள அரசியல்வாதிகள், தாங்கள் பதவிக்கு வரும்படி தங்களுக்காக ஓட்டு போட்டவர்களுக்குச் செய்த வாக்குறுதிகளைக் காத்துக்கொள்வது கடினமாக இருப்பதாய்க் காண்கின்றனர் என்பது உண்மையல்லவா? . . . இந்த நிலைமை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக ஓர் எழுத்தாளர் விவரித்ததுபோல் பெரும்பாலும் உள்ளது. (சங். 146:3, 4) ஒரு தலைவர் ஏதோ நன்மை செய்கிறபோதிலும் அவர் அதிகாரத்தை விட்டு நீங்கும்படி எதிர்ப்பு ஓட்டளிக்கப்படுகிறது, அல்லது அவர் மரிக்கிறார், அவருடைய வேலை அவரைப் பின்தொடர்ந்து வருபவரால் அழிக்கப்படுகிறது. எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க வல்லமையுள்ளவராக இருக்கிற நிலையான ஓர் அரசரையுடைய ஓர் உலக அரசாங்கத்தைப் பற்றி உங்களுக்குச் சொல்ல நாங்கள் உண்மையில் வந்திருக்கிறோம். இது சிறப்பாயிருக்குமல்லவா? . . . (சங். 72:7, 8, 13, 14)’

‘மேற்கத்திய நாடுகளுக்கு சென்று பிரசங்கியுங்கள், இந்தியா மதபக்தியுள்ள நாடு.’

◼ ‘இந்த 20-வது நூற்றாண்டில் பல நாடுகள் மத ஆசாரத்தையும், தாங்கள் பின்பற்றுவதாகப் பாராட்டும் மதத்தின் ஒழுக்கத் தராதரங்களையுங்கூட தள்ளிவிட்டிருக்கின்றன என்பது மெய்யே. ஆனால் இங்கே இந்தியாவில் நமக்கிருக்கிற எல்லா பிரச்சினைகளையும் மதம் தீர்க்கிறதென்று நீங்கள் உண்மையில் நினைக்கிறீர்களா? இங்கே இந்த நாட்டில்தானே நாம் எதிர்ப்படும் வன்முறைச் செயல்களின் பெரும்பான்மையானவற்றிற்கு மதமே மூலகாரணமாக இருக்கிறதென்பது உண்மையல்லவா? . . . எல்லா தேசங்களின் மக்களும் ஒன்றுபட்டவர்களாய் உண்மையான மத நியமங்களைப் பின்பற்றக்கூடுமானால் எவ்வளவு நன்றாயிருக்கும் . . . (சங். 133:1)’

◼ ‘உண்மையில், இங்கு இந்தியாவில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளைப் பார்க்கிலும் லட்சக்கணக்கில் அதிகமானவர்கள் மேற்கத்திய நாடுகளில் பிரசங்கித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நாங்கள் கொண்டுவரும் செய்தி, துன்பத்துக்கும் வன்முறைச் செயல்களுக்கும் துக்கத்துக்கும் ஒரு முடிவைக் காண ஆவலாயிருக்கிற எல்லா தேசங்களின் மக்களுக்குமுரியது. நாம் எங்கு வாழ்ந்தாலும் இதைப்போன்ற நிலைமைகளைக் காண விரும்புவோம் அல்லவா? . . . (வெளி. 21:4)’

◼ ‘மேற்கத்திய நாடுகளில், பல மக்கள் முற்றிலும் பொருளாசைமிகுந்த மனப்பான்மையுடையோராக இருப்பதாய்த் தோன்றுகிறதென்பது மெய்யே. ஆனால் இந்தியாவில் மதப்பற்றுள்ள மக்களுங்கூட வன்முறைச் செயல்கள், உணவுக் குறைபாடுகள், வேலையில்லாத் திண்டாட்டம், நோய், மரணம் ஆகியவற்றால் துன்பப்படுகிறார்கள் என்பது உண்மையல்லவா? . . . கிழக்கத்திய நாடுகள், மேற்கத்திய நாடுகள் ஆகிய இரண்டிலுமே அக்கறையுள்ளவராக இருக்கிற கடவுள், சீக்கிரத்தில் இந்தப் பிரச்சினைகளை இந்தப் பூமியிலிருந்து நீக்கி ஒழித்துப்போடப் போகிறார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம், இந்தத் தகவலை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம் . . . (சங். 37:10, 11, 29)’

‘நீங்கள் எங்களைக் கிறிஸ்தவத்துக்கு மதமாறச் செய்விக்க முயற்சி செய்கிறீர்கள்’

◼ ‘தங்கள் மதத்தை மாற்றிக்கொள்ளும்படி மக்களை வற்புறுத்துவதற்கு, சரித்திரம் முழுவதிலும் மெய்யாகவே மிகுதியான முயற்சிகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் நாங்கள் அதை ஒப்புக்கொள்கிறதில்லை என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன். பொதுவாக அதற்குக் காரணம் அரசியல் சம்பந்தப்பட்டதாக, அல்லது சொந்த நன்மை ஏதாகிலும் பெறுவதாக இருந்திருக்கிறது. எனினும், உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும், இந்த உலகத்தில் நாம் காணும் மகிழ்ச்சியற்ற நிலைமைகளிலிருந்து ஒரு மாற்றத்தைக் காண விரும்பும் எல்லா மதங்களிலுமுள்ள உண்மை மனதுடைய ஆட்களுக்கும் நன்மை பயக்கும் ஒரு செய்தியுடன் நாங்கள் வந்திருக்கிறோம். பூர்வ பரிசுத்த புத்தகம் ஒன்று இந்த மாற்றத்தை இவ்வாறு விவரிக்கிறது. (சங். 37:10, 11)’

◼ ‘தங்கள் மதத்தை மாற்றிக்கொள்ளும்படி மக்களுக்கு லஞ்சம் கொடுக்கும் அல்லது அவர்களை வற்புறுத்தும் பதிவைக் கொண்டுள்ள சர்ச் அமைப்புடன் நாங்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகச் சில ஆட்கள் நினைக்கின்றனர். அத்தகைய நடவடிக்கைகளை நாங்கள் நிச்சயமாக ஒப்புக்கொள்கிறதில்லை, சர்ச்சுகளோடு எவ்வகையிலும் நாங்கள் சம்பந்தப்பட்டவர்களாகவும் இல்லை. நாங்கள் 50 லட்சத்துக்கு மேற்பட்ட விருப்பார்வ ஊழியர்கள் அடங்கிய ஒரு சர்வதேச குழுவின் பாகமாக இருக்கிறோம். சீக்கிரத்தில் இனிமேலும் போர்கள் இரா என்ற நற்செய்தியுடன் எங்கள் அயலாரைச் சந்திக்கிறோம். எது இந்த நிச்சயத்தை எங்களுக்கு அளித்திருக்கிறது என்பதை நான் உங்களுக்குக் காண்பிக்கலாமா? . . . (சங். 46:8, 9)’

‘என் சொந்த மதத்தின் பரிசுத்த புத்தகங்களை மாத்திரமே நான் வாசிப்பேன்’

◼ ‘மதத்தில் இன்னும் அக்கறை கொண்டுள்ள ஒருவரைக் கண்டதில் நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். இன்று பெரும்பான்மையான மக்கள், பொழுதுபோக்கிலும் பொருளுடைமைகளைக் கொண்டிருப்பதிலுமே அதிகமாய் அக்கறையுடையோராக இருப்பதாய்த் தோன்றுகிறதென்று நான் சொல்வதை நீங்கள் நிச்சயமாய் ஒப்புக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன் . . . சில மத புத்தகங்களோடு நீங்கள் பழக்கப்பட்டிருப்பதால், நான் மிக அதிகமாய்ப் பழக்கப்பட்டுள்ள பரிசுத்த புத்தகமாகிய பைபிளிலுள்ள இந்த வசனத்தைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? (நீதி. 2:20-22) . . . பொல்லாத எல்லா மக்களையும் ஒருநாள் கடவுள் அழிக்கப்போகிறார் என்று பரிசுத்த வேத எழுத்துக்கள் பல குறிப்பிடுகின்றன. ஆனால், நாங்கள் எங்கள் அயலாரைச் சந்திப்பதன் காரணம் என்னவெனில், இந்த அழிவு எப்போது நடந்தேறும் என்பதற்கு மிகத் திட்டமான குறிப்புகளை பைபிள் கொடுக்கிறதென்பதையும், பூமியில் சந்தோஷமாய் வாழ்வதற்கு நாம் எப்படி தப்பிப் பிழைத்திருக்கக்கூடும் என்பதைப் பற்றி பைபிள் நமக்குச் சொல்லுகிறதென்பதையும் அவர்களுக்குக் காட்டுவதேயாகும். இந்தத் தகவலை உங்களோடு பகிர்ந்துகொள்ள நான் விரும்புகிறேன்.’

◼ ‘ஆம், சிறு பிள்ளைகளிலிருந்து தங்களுக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிற மத புத்தகங்களை மாத்திரமே வாசிப்பதோடு பல ஆட்கள் திருப்தியடைகின்றனர். என்னைக் குறித்ததில், கடவுளையும் அவரை வணங்கும் முறையையும் பற்றி மற்ற ஆட்கள் நம்புவதைத் தெரிந்துகொள்வது மிகுந்த அக்கறைக்கேதுவாக இருப்பதாய் நான் கண்டேன். அது, உலகில் வன்முறைச் செயல்களும் இக்கட்டும் அவ்வளவு அதிகமாய் நிறைந்துள்ள நம்முடைய நாட்களைப் பற்றி முக்கியமான சில முன்னறிவிப்புகளைக் கண்டுபிடிப்பதற்கு என்னை வழிநடத்தியிருக்கிறது. இன்றைய உலகத்தைப் பற்றிய ஒரு விவரிப்பை உங்களுக்குக் காண்பிக்க நான் விரும்புகிறேன். அதை மிகத் திருத்தமாயிருப்பதாக நீங்கள் காண்பீர்களென்று நான் நினைக்கிறேன் . . . (2 தீ. 3:1-5, [பகுதிகள்])’

11 அப்போஸ்தலன் பவுல் திட நம்பிக்கையுடன் இவ்வாறு கூறினார்: ‘தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே, எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேன்.’ (அப். 20:26, 27) சத்தியத்தின் அதிசயமான செய்தியை ‘எல்லா வகையான மனிதருக்கும்’ நாம் அளித்து வருகையில், நம்முடைய ‘தெளிவான சிந்திக்கும் திறமைகளைப்’ பயன்படுத்துவதன்மூலம், பவுலைப்போல் அதே தளரா ஊக்கத்தைக் காட்ட நாம் எல்லா முயற்சியும் செய்வோமாக.—2 பே. 3:1, NW.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்