ஆகஸ்ட் ஊழியக் கூட்டங்கள்
ஆகஸ்ட 5-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள்.
20 நிமி: “நற்செய்தியை அறிவிப்பதில் இடைவிடாதிருத்தல்.” பேச்சு மற்றும் சபையாருடன் கலந்தாலோசிப்பு. வேதாகமத்தின் பேரில் உட்பார்வை (ஆங்கிலம்), தொகுதி 2, பக்கம் 673, பத்தி 1-லிருந்து சிறு பகுதிகளைச் சேர்த்துக்கொள்ளவும்.
15 நிமி: “சிற்றேடுகளைக் கொண்டு ராஜ்ய நற்செய்தியை அறிவியுங்கள்.” (1-5 பத்திகள்) முதல் பத்தியை பேச்சின் முன்னுரையில் உபயோகிக்கவும். நம் பிரச்னைகள் மற்றும் பூமியில் வாழ்க்கை சிற்றேடுகளை ஊழியத்தில் உபயோகிப்பதன் நன்மைகளைப் பற்றி உற்சாகமளிக்கும் குறிப்புகளைச் சொல்லவும். இந்தச் சிற்றேடுகளைக் கொண்டு எவ்வாறு முதல் சந்திப்பையும் மறுசந்திப்பையும் கையாளலாம் என்பதைக் காட்டும் நன்கு ஒத்திகைப் பார்க்கப்பட்ட நான்கு நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யவும். ஓர் இளம் பிரஸ்தாபி, பெற்றோரால் உதவிசெய்யப்பட்டு, பூமியில் வாழ்க்கை என்ற சிற்றேட்டை அளிப்பதன் பேரில் நடிப்பைக் கொண்டிருங்கள். பிரஸ்தாபிகள் இங்குக் குறிப்பிடப்பட்ட ஆலோசனைகளின் பேரில் தங்களுடைய அளிப்பு முறையை மற்ற சிற்றேடுகளுக்கு அமைத்து கொள்ளலாம்.
பாட்டு 136, முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 12-ல் துவங்கும் வாரம்
15 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. காவற்கோபுரம், டிசம்பர் 1, 1993, பக்கங்கள் 29-31-ல் உள்ள “கொடுப்பதற்கான வழிகள்,” என்பதன் பேரில் உடன்பாடான குறிப்புகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
15 நிமி: “சிற்றேடுகளைக் கொண்டு ராஜ்ய நற்செய்தியை அறிவியுங்கள்.” (6-8 பத்திகள்) இதோ! சிற்றேட்டின் பொருளடக்கத்தின் பேரில் மேலோட்டமான கருத்தைச் சுருக்கமாக கொடுக்கவும். முதல் சந்திப்பிற்கும், மறுசந்திப்பிற்கும் குறிப்பிட்டிருக்கும் அளிப்பு முறைகளை நடித்து காட்டவும். அளிப்பை பெற்றுக்கொண்டவர்களை சந்திக்கும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: “சங்கத்தின் உலகளாவிய வேலை ஆதரவு விரிவாக்கத்திற்கு நன்கொடைகள்.” மூப்பரால் கொடுக்கப்படும் உற்சாகமான பேச்சு. வருடாந்தர புத்தகத்தில் (ஆங்கிலம்) அறிக்கைச் செய்யப்பட்டுள்ளபடி, கொடுக்கப்பட்டுள்ள சில தேசங்களில், ராஜ்ய வேலையின் முன்னேற்றத்தின் பேரில் சில புள்ளிவிவரங்களைச் சேர்க்கவும். இந்தியாவில் வந்துகொண்டிருக்கும் கட்டட திட்டத்தின் பேரில் நம்மால் முடிந்த அளவுக்கு பொருள் சம்பந்தமாக உதவும் சிலாக்கியத்தில் அனைவரும் பங்கேற்கலாம்.
பாட்டு 9, முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 19-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கேள்விப் பெட்டியை மறுபார்வை செய்யுங்கள்.
15 நிமி: “பிரசங்கிக்க தகுதியானவர் யார்?” கட்டுரையை மூப்பர் ஒருவர் இரண்டு அல்லது மூன்று பிரஸ்தாபிகளோடு கலந்தாலோசிக்கிறார். கடவுளுடைய ஊழியர்களாக நம்மை முழுமையாக தயார்படுத்திக்கொள்ளும்படி, கிடைப்பதிலேயே மிகச் சிறந்த பயிற்றுவிப்பை நாம் பெறுகிறோம் என்று வலியுறுத்தவும். பிரசங்கிப்பதற்கு நாம் குறைவுபடுவதாக உணருவதற்கு எந்த ஒரு காரணமும் நமக்கில்லை.
20 நிமி: “அறிவு புத்தகத்தை பயன்படுத்தி எவ்வாறு சீஷர்களை உண்டுபண்ணுவது.” ஜூன் நம் ராஜ்ய ஊழியத்தினுடைய உட்சேர்க்கையின் பத்திகள் 17-26-ன் பேரில் சபையாருடன் கலந்தாலோசிப்பு. அறிவு புத்தகத்திலிருந்து படிப்பை நடத்துவோரின் உள்ளூர் அனுபவங்களைச் சேர்க்க முன்கூட்டியே ஏற்பாடு செய்யுங்கள். உட்சேர்க்கையில் காணப்பட்ட ஆலோசனைகளை எவ்வாறு தாங்கள் பொருத்தி பிரயோகித்தார்கள் மற்றும் எவ்வாறு தங்களால் முன்னேறிக்கொண்டிருக்கும் வீட்டு பைபிள் படிப்புகளை அதிகளவில் நடத்த முடிகிறது என்பனவற்றின் பேரில் நேர்மறையான குறிப்புகளை அவர்கள் சொல்லலாம். உட்சேர்க்கையைப் பாதுகாக்கவும், புதிய பைபிள் படிப்பு நடத்தும்போதெல்லாம் தனிப்பட்ட விதத்தில் மறுபார்வை செய்யவும் அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 189, முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 26-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். மாநாட்டு பணித் தலைமையிடங்களின் விலாசங்கள் உள்ள பெட்டியினிடமாக கவனத்தைத் திருப்பவும்; மாவட்ட மாநாடுகளில் குறைந்தபட்சம் ஒன்றிற்காவது போவதற்கான ஏற்பாடுகளை உடனே செய்யவேண்டியதன் தேவை இருக்கிறது என்று குறிப்பிடவும்.
20 நிமி: உங்களது பிள்ளைகளின் பள்ளி படிப்பில் அக்கறை எடுத்தல். ஒரு மூப்பரால் கொடுக்கப்படும் பேச்சு. பள்ளியில் அளிக்கப்படும் உபயோகமான பயிற்றுவிப்பை நாம் ஏன் மதித்துணருகிறோம் என்பதைக் காண்பிக்கும் விஷயத்தை யெகோவாவின் சாட்சிகளும் கல்வியும் (ஆங்கிலம்) என்ற சிற்றேட்டில் பக்கங்கள் 2-5-லிருந்து மறுபார்வை செய்யவும். உலகப்பிரகாரமான தொழில்களைக் காட்டிலும் ஆவிக்குரிய இலக்குகளை நாம் ஏன் முதலிடத்தில் வைக்கிறோம் என்பதை ஆசிரியர்களிடத்தில் சாதுரியமாக விளக்குவது எப்படி என்று கலந்தாலோசிக்கவும். பக்கம் 31-ல் உள்ள “முடிவுரை”யிலிருந்து குறிப்புகளைச் சேர்க்கவும். விழித்தெழு! அக்டோபர் 8, 1989, பக்கம் 11-ல் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளைப் பொருத்தி பிரயோகிக்கும்படி பெற்றோர்களை உற்சாகப்படுத்தவும்.
15 நிமி: செப்டம்பருக்கான பிரசுர அளிப்பை மறுபார்வை செய்யவும். உங்களுடைய குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் என்ற புத்தகத்தை நாம் உபயோகிப்போம். உள்ளூர் மொழியில் இது கிடைக்காத இடங்களில் நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை அளிக்கலாம். குடும்ப வாழ்க்கை புத்தகம் சர்வதேச அளவில் கருத்திசைவைக் கொண்டிருப்பதால், நீளமான முன்னுரை இன்றியே அளிக்கப்படலாம். பக்கம் 3-லுள்ள கண்ணைக் கவரும் தலைப்புகளின் பட்டியலுக்குக் கவனத்தை திருப்பலாம்; அவ்வாறே என்றும் வாழலாம் புத்தகத்தை அளிக்கும்போது, “கடவுள் ஏன் அக்கிரமத்தை அனுமதிக்கிறார்?” என்ற 11-ம் அதிகாரத்தைச் சுட்டிக்காட்டவும். இது அநேக ஆட்கள் கேட்கக்கூடிய கேள்வியாக இருக்கிறது. எப்படி வேதப்பூர்வமான பதிலை இந்தப் புத்தகம் அளிக்கிறது என்று காண்பியுங்கள். இந்தப் புத்தகங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு நடிப்பை திறம்பட்ட பிரஸ்தாபிகளைக் கொண்டு ஏற்பாடு செய்யவும். எங்குப் பொருத்தமாக இருக்குமோ அங்கு உயிர்—அது எப்படி இங்கு வந்தது? படைப்பினாலா பரிணாமத்தினாலா? (ஆங்கிலம்) என்ற புத்தகம் அளிக்கப்படலாம். இந்தப் புத்தகத்தை மாணவர்களுக்கு அளிக்க விழிப்புள்ளவர்களாய் இருங்கள்.
பாட்டு 113, முடிவு ஜெபம்.