உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 8/96 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1996
நம் ராஜ்ய ஊழியம்—1996
km 8/96 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள்

ஆகஸ்ட்: பின்வரும் 32-பக்க சிற்றேடுகளில் எவற்றையேனும் 5.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம்: “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, கடவுளுடைய பெயர் என்றென்றுமாக நிலைத்திருக்கும், நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?, நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, மற்றும் வாழ்க்கையின் நோக்கமென்ன—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?

செப்டம்பர்: உங்களுடைய குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் புத்தகத்தை 20.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். மாற்றீடான அளிப்பாக, நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் அல்லது உயிர்—அது எப்படி இங்கு வந்தது? படைப்பினாலா பரிணாமத்தினாலா? என்ற புத்தகத்தை 25.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம் (பெரிய அளவு புத்தகம் 45.00 ரூபாய்).

அக்டோபர்: காவற்கோபுரம் அல்லது விழித்தெழு! பத்திரிகைக்கான சந்தாக்கள். மாதம் இருமுறை வரும் பத்திரிகைகளுக்கு ஆண்டு சந்தா 90.00 ரூபாய். மாதம் ஒருமுறை வரும் பத்திரிகைகளுக்கான ஆண்டு சந்தாவும், மாதம் இருமுறை வரும் பத்திரிகைகளுக்கான ஆறுமாத சந்தாவும் 45.00 ரூபாய். மாதம் ஒருமுறை வரும் பத்திரிகைகளுக்கு ஆறுமாத சந்தா கிடையாது. ஒருவேளை சந்தா மறுக்கப்பட்டால், பத்திரிகைகளின் தனிப்பிரதிகள் ஒவ்வொன்றும் 4.00 ரூபாய்க்கு அளிக்கப்பட வேண்டும்.

நவம்பர்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகம், நன்கொடை 20.00 ரூபாய். வீட்டு பைபிள் படிப்புகள் நடத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அளிப்பைப் பெற்றுக்கொண்ட அனைவரையும் சந்திக்க விசேஷ முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

குறிப்பு: குடும்ப வாழ்க்கை மற்றும் என்றும் வாழலாம் புத்தகங்களை தொடர்ந்து நன்றாகப் பயன்படுத்துமாறு எல்லா சபைகளையும் நாங்கள் உற்சாகப்படுத்துகிறோம். பிரஸ்தாபிகள் இந்தப் புத்தகங்களின் பிரதிகளை வருடம் முழுவதும் எப்போதும் தங்களுடன் வைத்திருக்கலாம், சரியான சந்தர்ப்பம் ஒவ்வொன்றிலும் அவற்றை அளிக்கலாம். மேற்குறிப்பிடப்பட்ட அளிப்பு ஏற்பாட்டிற்கான பிரசுரங்கள் எவற்றிற்கும் இன்னும் விண்ணப்பிக்காத சபைகள், தங்களுடைய அடுத்த பிரசுர விண்ணப்பப் படிவத்தில் (S-AB-14) விண்ணப்பிக்கலாம்.

◼ உருது மொழியில் காலாண்டு விழித்தெழு! அக்டோபர்-டிசம்பர் 1996 இதழ் முதற்கொண்டு, நான்கு வண்ணங்களில் ஜெர்மனியில் அச்சிடப்பட்டு, நேரடியாக இந்தியாவிலுள்ள சபைகளுக்கு நிலவழி அஞ்சல்மூலம் அனுப்பப்படவிருக்கிறது. உருதுவில் காலாண்டு விழித்தெழு! பத்திரிகைக்கு ஏற்கெனவே ஆடரை வைத்துள்ள சபைகள் விநியோகிப்போர் ஆடர் படிவத்தை (M-229) அனுப்புவதன்மூலம் ஒருவேளை அவற்றின் ஆடரை அதிகரிக்க விரும்பலாம். அதே படிவத்தைப் பயன்படுத்தி ஒரு நிலையான ஆடரை (standing order) கொடுப்பதற்கும் மற்ற சபைகள் விரும்பக்கூடும். உருதுவில் மாதாந்தர காவற்கோபுரம் தொடர்ந்து இந்தியாவில் அச்சிடப்படும்.

◼ ஒவ்வொரு சபையும் மூன்று பிரசுர விவரப்பட்டியல் படிவங்களை (S-AB-18) பெற்றுக்கொள்ளும். ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் சபை செயலர் பிரசுர ஊழியரை சந்தித்து, அந்த மாத கடைசியில் கையிருப்பில் இருக்கக்கூடிய சபை பிரசுரங்களின் விவரப்பட்டியலை எடுப்பதற்கான தேதியை நிர்ணயிக்கவேண்டும். கையிருப்பில் இருக்கும் அனைத்து பிரசுரங்களின் எண்ணிக்கையும் சரிபார்க்கப்பட வேண்டும்; கூட்டல் தொகை பிரசுர விவரப்பட்டியல் படிவத்தில் எழுதப்பட வேண்டும். கையிருப்பில் இருக்கும் மொத்த பத்திரிகைகளின் எண்ணிக்கையை பத்திரிகை ஊழியரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். அசல் படிவத்தை சங்கத்திற்கு தயவுசெய்து செப்டம்பர் 6-ம் தேதிக்குள் தபாலில் அனுப்பி வைக்கவும். ஒரு கார்பன் பிரதியை உங்களுடைய கோப்புகளுக்காக வைத்திடுங்கள். மூன்றாவது பிரதி செய்முறை தாளாக பயன்படுத்தப்படலாம். விவரப்பட்டியல் செயலரால் மேற்பார்வை செய்யப்படவேண்டும், முடிக்கப்பட்ட படிவம் நடத்தும் கண்காணியால் சரிபார்க்கப்பட வேண்டும். செயலர் மற்றும் நடத்தும் கண்காணி ஆகிய இருவரும் படிவத்தில் கையெழுத்திடுவார்கள்.

◼ சபை பகுப்பாய்வு அறிக்கைப் படிவத்தில் (S-10) எழுதுவதற்காக, சபை செயலர் எண்ணிக்கைகளைச் சேகரிக்கவும் செய்வார். அவர், பிரஸ்தாபிகள் பதிவு அட்டையிலிருந்து (S-21) தேவையான விவரங்கள் திருத்தமாக எழுதப்படுவதை நிச்சயப்படுத்துவதற்காக, அறிக்கை சேகரிப்பதில் ஒருவேளை உதவி செய்யும் எவரேனும் ஒரு மூப்பருக்கோ உதவி ஊழியருக்கோ கவனமாக எப்படி எப்படி செய்ய வேண்டும் என்று போதிப்பார். சபை பகுப்பாய்வு அறிக்கைப் படிவத்தைத் திருத்தமாகவும், தெளிவாகவும் நிரப்ப வேண்டும்; கையெழுத்து போடுவதற்கு முன், ஊழியக் குழுவால் கவனமாக சரிபார்க்கப்படவேண்டும். படிவத்தில் உள்ள முதல் ஐந்து கட்டங்கள் சராசரியாக வாராந்தர கூட்டத்திற்கு ஆஜராவோரின் எண்ணிக்கையால் நிரப்பப்படவேண்டும் என்பதைத் தயவுசெய்து கவனியுங்கள். இதனைக் கணக்கிட, பெட்டிகளுக்கு மேல் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவுரைகளைத் தயவுசெய்து நெருங்க பின்பற்றுங்கள். முகப்புப் பக்கத்தில் அல்லது படிவத்தில் உள்ள கடைசி கட்டத்திற்கு முந்தைய கட்டத்தில் உள்ள எண்ணிக்கையில் நியமிக்கப்பட்ட மூப்பர்களை மாத்திரம் உள்ளடக்க வேண்டும் என்பதையும், உதவி கண்காணிகள் எனப்படும் உதவி ஊழியர்களை, உதவி ஊழியர்கள் என்றே கடைசி கட்டத்திலுள்ள எண்ணிக்கையில் சேர்க்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்க. தயவுசெய்து செப்டம்பர் 10-ம் தேதிக்கு முன்பாகவே S-10 மூலப் படிவத்தை சங்கத்திற்கு அனுப்பி வையுங்கள்; கார்பன் பிரதியை உங்கள் கோப்பில் வைத்துக்கொள்ளுங்கள்.

◼ செப்டம்பர் 1 முதற்கொண்டு ஒழுங்கான பயனியர் சேவை செய்ய திட்டமிடும் பிரஸ்தாபிகள், உடனே விண்ணப்பிக்க வேண்டும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்