தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
மே 6 முதல் ஆகஸ்ட் 19, 1996 வரையுள்ள வாரங்களின்போது தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சிந்திக்கப்பட்ட பகுதிகளின்பேரில் புத்தகங்களைப் பார்க்காமல் நடத்தப்படும் மறுபார்வை. கொடுக்கப்பட்ட நேரத்தில் உங்களால் கூடிய அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை எழுத ஒரு தனி தாளைப் பயன்படுத்தவும்.
[கவனிக்கவும்: எழுத்துமுறை மறுபார்வையின்போது எந்தக் கேள்விக்கும் விடையளிக்க பைபிளை மட்டுமே உபயோகிக்கலாம். கேள்விகளைப் பின்தொடர்ந்து குறிக்கப்பட்டுள்ள பிரசுரங்கள் உங்களுடைய தனிப்பட்ட ஆராய்ச்சிக்காக. காவற்கோபுர மேற்கோள்கள் எல்லாவற்றிற்கும் பக்கம் மற்றும் பாரா எண்கள் கொடுக்கப்படா.]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றும் சரியா தவறா என்று விடையளியுங்கள்:
1. மோசேயின் நியாயப்பிரமாணத்தின்கீழ் செலுத்தப்பட்ட எல்லா பலிகளையும் இயேசுவினுடைய ஒரே பலி மாற்றீடு செய்துவிட்டது. [uw-TL பக். 33 பாரா 8(4)]
2. ‘மாகோகுவின் கோகு’ உலக அரசாங்கங்களுக்கு ஓர் அடையாளக் குறிப்பாக இருக்கிறான். (எசே. 38:2) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w91 8/15 பக். 27 பாரா 2-ஐக் காண்க.]
3. எசேக்கியேல் 23-ம் அதிகாரத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளபடி, அகோலாள் என்பவள் அகோலிபாளின் மூத்த சகோதரியாக இருந்தாள், அதேபோலவே ரோமன் கத்தோலிக்க மதம் புராட்டஸ்டன்ட் மதத்தின் மூத்த சகோதரியாக இருக்கிறது; இவ்விரு அமைப்புகளும் இந்த உலகத்தின் வியாபார மற்றும் அரசியல் வல்லரசுகளுடன் ஆவிக்குரிய விபசாரம் செய்வதன்மூலம் தங்களைத் தாங்களே கெடுத்துக்கொண்டிருக்கின்றன. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w89 4/1 30-ஐக் காண்க.]
4. புனிதராவதற்கு ஓர் ஆள் மரிக்கவேண்டும். [rs-TL பக். 353 பாரா 1]
5. வெளிப்படுத்துதல் 20:10-ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, “அக்கினியும் கந்தகமுமான கடலிலே” சாத்தான் தள்ளப்படுவது எதை அர்த்தப்படுத்தப்படுகிறது என்பதை வெளிப்படுத்துதல் 21:8 தெளிவுபடுத்துகிற முறையிலிருந்து பைபிள்தானே அர்த்தம் சொல்லுவதைக் காணலாம். [rs-TL பக். 365 பாரா 4]
6. யாக்கோபு 4:17 மற்றும் எசேக்கியேல் 33:7-9, கடவுள் நம்மிடம் என்ன தேவைப்படுத்துகிறார் என்பதைப் பற்றிய அறிவு அவருக்கு நம்மை கணக்குக் கொடுக்க வேண்டியவர்களாக்குகிறது என்பதை காண்பிப்பதன் மூலம் ஒத்திசைந்திருக்கிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w93 4/1 பக். 7 பாரா 1-ஐக் காண்க.]
7. ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சொப்பனத்தில் கண்ட சிலையை தானியேலுக்கு விவரித்து சொன்ன பிறகு, தானியேல் அதன் அர்த்தத்தை விளக்குவதன் மூலம் தான் உண்மையான தீர்க்கதரிசி என்பதை நிரூபித்துக் காண்பித்தார். [வாராந்தர பைபிள் வாசிப்பு; தானியேல் 2:7-9, 26-ஐக் காண்க.]
8. எசேக்கியேல் 47:1-ல் விவரிக்கப்பட்டுள்ள தரிசனமான ஆலயத்திலிருந்து தண்ணீர் வழிந்தோடி வருவது, முழுக்காட்டுதலின் சுத்திகரிக்கும் வல்லமையைக் குறிக்கிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL88 11/1 பக். 27 பாரா 20-ஐக் காண்க.]
9. “கொஞ்சநேரம் ஜாலியாக இருக்கலாம் வா,” என்று உங்களைத் தூண்டுகிறவரிடம், அந்த அழைப்பு கிறிஸ்தவர் என்பதாக உரிமைபாராட்டுகிற ஒரு நபரிடமிருந்து வருகிறபோதிலும்கூட, முடியாது என்று சொல்வதற்கு ஒருபோதும் பயப்படாதீர்கள். (2 பே. 2:18, 19) [uw-TL பக். 43 பாரா 11]
10. கடவுள் பிசாசை படைத்தார். [rs-TL பக். 363 பாரா 2]
பின்வரும் கேள்விகளுக்கு விடையளியுங்கள்:
11. ஈசாக்கை ஆபிரகாம் பலி செலுத்துவதற்கு முயன்றது நாம் என்ன முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதற்கு உதவி செய்யவேண்டும்? (ஆதி. 22:1-18) [uw-TL பக். 32 பாரா 8(1)]
12. ஆதாமுக்கும் ஏவாளுக்கும் யெகோவா தேவன் கொடுத்த வேலை நியமிப்பு ஒரு சட்டமாக இருந்தது என்று ஏன் சொல்லப்படலாம்? (ஆதி. 1:28; 2:15) [uw-TL பக். 38 பாரா 2]
13. யெகோவாவின் அபிஷேகம் செய்யப்பட்ட சாட்சிகளும் அவர்களுடைய தோழர்களும் எந்த விதத்தில் எசேக்கியேலைப் போல் இருக்கவேண்டும்? (எசே. 11:25) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL88 11/1 பக். 16 பாரா 3-ஐக் காண்க.]
14. வலுசர்ப்பத்தின் வித்தில் யார் உட்பட்டிருக்கின்றனர்? [uw-TL பக். 30 பாரா 3]
15. பொய் சொல்லுவதாக யெகோவாவை குற்றஞ்சாட்டுவதோடுகூட, கடவுள் தம்முடைய சிருஷ்டிகளுக்கு எதைக் கொடாமல் வைத்துக்கொள்கிறார் என்பதாக சாத்தான் வாதாடினான்? (ஆதி. 3:1-5) [uw-TL பக். 46 பாரா 1]
16. கடவுளுடைய பெயராகிய யெகோவா என்பதன் அர்த்தம் என்ன? [kl-TL பக். 25 பாரா 7]
17. ஆதாமும் ஏவாளும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசித்த “நாளில்” மரித்தார்கள் என்று எந்த இரண்டு விதங்களில் சொல்லப்படலாம்? (ஆதி. 2:17) [uw-TL பக். 56 பாரா 5]
18. சர்வலோக இரட்சிப்பு ஒரு பொய்யான போதனை என்று 2 தெசலோனிக்கேயர் 1:10 மற்றும் வெளிப்படுத்துதல் 21:8 எவ்வாறு தெளிவாக காண்பிக்கின்றன? [rs-TL பக். 358 பாரா. 1-3]
19. எந்தத் தீர்க்கதரிசி பூமியை “உருண்டை” என்பதாக குறிப்பிட்டார், இது வேதாகமத்தில் எங்கு எழுதப்பட்டிருக்கிறது? [kl-TL பக். 17 பாரா 14]
20. பிசாசு இருக்கிறான் என்ற அத்தாட்சிக்கான முக்கிய ஆதாரம் எது, யாருடைய மறுக்கமுடியாத நேரடியான சாட்சியை நாம் கொண்டிருக்கிறோம், இவ்வுலகிலுள்ள தீங்கின் அளவானது சாத்தான் இருப்பதைப் பற்றி எந்த விதத்தில் நம்மை நம்பும்படி செய்கிறது? [rs-TL பக். 361 பாரா 4-பக். 362 பாரா 5]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றையும் பூர்த்திசெய்ய தேவைப்படும் வார்த்தை(கள்) அல்லது சொற்றொடரை அளியுங்கள்:
21. எசேக்கியேல் 21:26-ன் நிறைவேற்றமாக, _________________________ -ல் அழிக்கப்பட்டதன் மூலம், “உயர்ந்த” ராஜ்யமாக இருந்த _________________________ ‘தாழ்த்தப்பட்டது;’ கடவுளுடைய மாதிரிப்படிவமான _________________________ ஒன்றின் குறுக்கிடுதலில்லாமல் பூமியை ஆளுவதற்கு அனுமதிப்பதன் மூலம், “தாழ்ந்த” _________________________ தேசங்கள் ‘உயர்த்தப்பட்டன.’ [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL88 11/1 பக். 19 பாரா 16-ஐக் காண்க.]
22. _________________________ புத்தகத்தின் ஒரு பாகம், உண்மையில் முன்னதாகவே எழுதப்பட்ட _________________________ ஆகும்; இந்நூற்றாண்டு வரையாக இருக்கும் பெரும் அரச வம்சங்களுடைய போராட்டத்தின் பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்துகிறது. [si பக். 138 பாரா 1]
23. எசேக்கியேல் 34:23-ல் உள்ள “என் தாசனாகிய தாவீது” என்ற வார்த்தைகள், _________________________ மரணத்திற்கு வெகு நாட்களுக்குப் பின்பு எழுதப்பட்டன; அது ஒரு தீர்க்கதரிசன வார்த்தை, அது _________________________ குறிக்கிறது. [si பக். 137 பாரா 31]
24. இஸ்ரவேலர் கடவுளுக்கு விரோதமாக பாவம் செய்து சிறைபிடிக்கப்பட்டு கொண்டுபோகப்பட்டால், ஒரு _________________________ -ஆக அவர்களுக்கு என்ன சம்பவிக்கும் என்பதை யாத்திராகமம் 34:7 குறிப்பிடுகிறது. அதே சமயத்தில் எசேக்கியேல் 18:4 கடவுளுக்குக் காட்டப்பட வேண்டிய _________________________ உத்தரவாதத்தைக் குறிப்பிடுகிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL89 2/1 பக். 6-ஐக் காண்க.]
25. பைபிளை வாசிக்கையில், நீங்கள் வாசிப்பதை _________________________ எவ்வாறு பொருத்தலாம் என்பதையும் _________________________ உதவிசெய்ய நீங்கள் வாசிப்பதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் குறித்து உங்களை நீங்களே கேட்டுக்கொள்வது நல்லது. [uw-TL பக். 26 பாரா 12(4) மற்றும் பக். 28 பாரா 12(5)]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றிலும் சரியான விடையைத் தெரிந்தெடுங்கள்:
26. ஒரு கிறிஸ்தவரின் வாழ்க்கையில் மிக முக்கியமான அக்கறை (சபையில் சிலாக்கியங்களைப் பெற்றிருப்பது; அர்மகெதோனை தப்பிப்பிழைப்பது; யெகோவாவுடன் ஒரு நல்ல உறவை வைத்திருப்பது) ஆகும். [uw-TL பக். 41 பாரா 9]
27. வாழ்க்கையில் நாம் எதிர்ப்படக்கூடிய பிரச்சினைகள் (நமக்கு தீங்கிழைப்பதற்கு மக்கள் தீர்மானித்திருப்பதால்; நேரமும் எதிர்பாரா சம்பவங்களால்; நம்முடைய சொந்த பாவமுள்ள ஆசைகள் மற்றும் கெட்ட கூட்டுறவுகளால்) பெரும்பாலும் எழுகின்றன. (1 கொ. 15:33, NW; யாக். 1:14, 15) [uw-TL பக். 44 பாரா 13]
28. கடவுளுக்கான நம்முடைய உண்மைப் பற்றுறுதியை உட்படுத்துகிற பிரதான விவாதத்தின் சம்பந்தமாக நாம் எங்கே நிற்கிறோம் என்பதை நம்முடைய (அறிவு; போதிக்கும் திறமை; நடத்தை) காண்பிக்கிறது. [rs-TL பக். 52 பாரா 12]
29. (கோரேசுவின்; நபோனிடஸின்; நேபுகாத்நேச்சாரின்) முதல் மகனாகிய பெல்ஷாத்சார், (எசேக்கியேலால்; தானியேலால்; ஏசாயாவால்) மட்டுமே பைபிள் விவரப்பதில் குறிப்பிடப்படுகிறார், அந்தப் பதிவின் சரித்திர மெய்ம்மை தொல்பொருள் அத்தாட்சியுடன் ஒத்திருக்கிறது. [it-1 பக். 282 பாரா 11]
30. சாத்தானிடமிருந்து அதன் வல்லமையைப் பெறுகிற மூர்க்க மிருகம் (ஆங்கிலோ-அமெரிக்கன் உலக வல்லரசு; ஐக்கிய நாடுகள்; உலகளாவிய அரசியல் ஒழுங்குமுறை). (வெளி. 13:1, 2) [rs-TL பக். 364 பாரா 2-பக். 365 பாரா 2]
பின்வரும் வேதவசனங்களைக் கீழ்க்கண்ட கூற்றுகளோடு பொருத்துங்கள்:
சங். 78:40, 41; ஏசா. 55:10, 11; எசே. 18:25; தானி. 1:8, 11-13; அப். 8:32-38
31. சத்தியத்திற்கான போற்றுதலும் பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றமாக இயேசு செய்திருக்கிறவற்றிற்கான போற்றுதலும் நேர்மை இருதயமுள்ள மக்கள் முழுக்காட்டப்படும்படி அவர்களைத் தூண்டுகிறது. [uw-TL பக். 32 பாரா 7]
32. இளம் கிறிஸ்தவர்கள், கடவுளால் பயிற்றுவிக்கப்பட்ட தங்களுடைய மனச்சாட்சியை மீறமாட்டார்கள் என்பதை அதிகாரிகளுக்கும் சகமாணவர்களுக்கும் தெரியப்படுத்த தயங்க கூடாது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL93 2/1 பக். 14 பாரா 17-ஐக் காண்க.]
33. மனிதவர்க்கத்திற்கும் பூமிக்குமான கடவுளுடைய ஆதி நோக்கம் நிறைவேற்றப்படும். [kl-TL பக். 9 பாரா 10]
34. மெய் கிறிஸ்தவர்கள் எப்பொழுதும் தங்களுடைய சிந்தையை யெகோவாவினுடைய வழிகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும், மதிப்புமிக்க வேதப்பூர்வமான ஆலோசனை நமக்கு பொருந்தாது என்று நினைத்து அதை ஒருபோதும் அசட்டை செய்துவிடக்கூடாது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w90 11/1 பக். 31-ஐக் காண்க.]
35. கடவுளுக்கு உணர்ச்சிகள் இருக்கின்றன, நாம் செய்யும் தெரிவுகள் அவரைப் பாதிக்கின்றன. [kl-TL பக். 14 பாரா 8]